தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று. இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை. மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார்.
ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை.


ஜரோப்பாவில் கடும் குளிருக்கு மத்தியிலும் ஜ.நா வில் நீதி கோரி மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ராணுவம் தமிழ் விதவை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே குற்றம் சாட்டியிருக்கிறார். இப்போதும் இளைஞர்களுக்கு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் நிகழ்வதாக பிரிட்டன் லேபர் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால் நமது சிறீதரன் எம்.பி கோயில் விழாவில் அதே ராணுவத்தின் தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவம் வழங்கிறார்.
இத்தகைய செயல் தமிழ் இனத்திற்கு எந்தளவு கேடானது என்பது சிறீதரன் எம்.பிக்கு தெரியவில்லையா? அல்லது அது குறித்து அவருக்கு அக்கறை இல்லையா?
அவர் விரும்பியிருந்தால் கோயிலில் ராணுவ தளபதிக்கு கௌரவம் வழங்குவதை தடுத்திருக்கலாம். அல்லது தான் அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.
யாழ் குடாநாட்டில் குடிதண்ணீருக்கு பஞ்சம் உள்ளது. எனவே அதனைப் போக்குவதற்காக இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு திட்டம் போடப்பட்டது. அதற்குரிய பணமும் உலக வங்கி வழங்க முன்வந்தது.
ஆனால் சிறீதரன் எம்.பி தனது அரசியல் சுயநலத்திற்காக அதனை தடுத்து விட்டார். அவரால் யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடி தண்ணீர் வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று அரசியல் செய்த அதே சிறீதரன் எம்.பி 5 கோடி ரூபாவுக்கு யாழ்ப்பாணத்தில் நல்லூரில இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு குடி தண்ணீர் வழங்க மறுத்த அதே சிறீதரன் எம்.பி தனது பிள்ளைகளை அதே யாழ்ப்பாணத்தில்தான் படிக்க வைக்கிறார்.
வாக்கு போட்ட மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பதவி பெற்ற சிறீதரன் எம்.பி தனது சொகுசு வாகனத்தை விற்று 7 கோடி ரூபா பெற்றுள்ளார்.
பாவம் தமிழ் மக்கள். இவரை நம்பி ஏமாறுகின்றார்கள்.