தமிழகத்தின் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் பெரும்பான்மை மக்களை கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆதுரவு ops தலைமைக்குத்தான் உண்டு என்று பொன்னையா பேட்டியில் சொன்னதிலிருந்தும், சின்னையாவின் அய்யா தலித்குடிதாங்கி என்ற விருதினை பெற எப்படியெல்லாம் நயவஞ்சக நட்புவலை வீசியிருந்தார் என்பதை அறிந்ததிலிருந்தும் , தலித்துகளின் ஓட்டுகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய சக்தி என்பதை உணர்ந்த கலைஞர் அரசியல் சதுரங்கத்தில் காய்நகர்த்தி சாதித்ததிலிருந்தும்,
32 சதவீத ஓட்டு வங்கியை கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை MGR ஈர்ப்பை கொண்டு ஏமாற்றிய ஜெயாவின் அரசியல் சூதாட்டத்திலிருந்தும் , தேசிய கட்சிகளான காங்கிரஸ் , பா ஜ க தலித் சமூகத்திற்கு தூண்டில் போட்டால் மட்டுமே அரசியலில் தாக்குபிடிக்க முடியும் என பேசி வருவதிலிந்தும் பார்க்கும்போது “தலித்மக்களே முதல்வரை உருவாக்குபவர்கள்” என்பது அம்மக்களை தவிர எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தே இருக்கிறது.
தற்காலிக முதல்வராக ops ஐ மூன்றுமுறை தேர்வு செய்த அதிமுக , ஏன் இப்பொழுதும் Eps ஐ முதல்வராக தேர்வு செய்த அதிமுக , தலித்துகளை எதிரி மனப்பான்மையோடு பார்க்காமல் இருந்திருந்தால் நான்கு முறை முதல்வரை தேர்வு செய்ததில் ஒருமுறை கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தேர்வுசெய்யாதது ஏன். முப்பத்திரண்டு சதவீதம் தலித் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சி கட்டில்களில் உறங்கி கிடந்த திமுக ,அதிமுக ஆதி திராவிட நலத்துறையைத் தவிர வேறு இலாக்காக்களுக்கு அமைச்சர்களாக ஒடுக்கப்பட்டோர் ஒருவரைகூட நியமிக்காதது ஏன்.
1991 அதிமுக ,1996 திமுக, 2001அதிமுக, 2006 திமுக, 2011அதிமுக என மாறி மாறி திமுக வும் அதிமுக வும் வந்த நிலையில் 2016 ல் வழக்கத்துக்கு மாறாக அதிமுக ஆட்சியை அமர்த்தினர் என்றால் அது அந்தக்கட்சி மீது உள்ள பற்றினால் அல்ல. மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு ஜொலிக்காமல் போனதற்கு காரணம் திராவிட கட்சிகளின் பணப்பாய்ச்சல் தான் என்பது எல்லோரும் அறிந்ததே. இனியும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பாலிட்டிரிக்ஸ் மக்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணராமல் இல்லை .
தலித்மக்கள் மட்டுமின்றி எல்லோரும் ஓரளவு நமக்கான தலைவர் யார் என்பதையும் , நம்மை வஞ்சித்தவர்கள் யார் என்பதையும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள் . அரசியல் அங்கீகாரம் இல்லாதவரை சாக்கடையில் சேரி, எரியும் குடிசைகள், வழியில்லா சுடுகாடு ,நடக்கும் படுகொலைகள் ,பாலியல் கொலைகள் , அவதூறு வழக்குகள் அரசு வேலை பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேல் நிரப்பாதது, ஆசிரியர் டெட் தேர்வில் குளறுபடி என எதற்கும் முற்று இல்லாமல் தொடரும் . அதிமுக வை ஆதரித்த தலித் இனியும் மனசாட்சியை விட்டு விட்டு மூழ்கிகொண்டிருக்கும் டைட்டானிக்கில் பயணம் செய்யாமல், மக்களுக்காக தன் வாழ்வை அர்பனித்த தியாகத் தலைவர் எழுச்சித்தமிழரை மட்டுமே பற்றுதலாக கொண்டு பயணிக்க தொடங்கி விட்டனர் .
தமிழகத்தை காக்க திருமா !
தமிழகத்தில் நம்ஆட்சி வருமா !
(ஆதிமொழி)