விடுதலையான பதுமன் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட திடீர் தாக்கம் காரணமாக முற்றுமுழுதான ஞாபகத்தை இழந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இச்சம்பவமானது குறிப்பிடத்தக்க காலத்திற்கு முன்னர் இடம்பெற்றபோதும் புலிகள் விடயத்தை இரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பதுமனின் விசுவாசியான „அ—-‘ தகட்டு இலக்கம் கொண்ட முன்னாள் புலி ஒருவர் இலங்கைநெட்டுக்கு தகவல் தருகையில் மிகுந்த வேதனையுடன் கீழ்கண்டவாறு கூறினார்.
பதுமன் அண்ணை அமைப்புக்கு என்றும் விசுவாசமாக இருந்தவர். கருணா பிரிந்தபோதும் சரியான முடிவு ஒன்று எடுக்க முடியாது மிகவும் மனவேதனை பட்டவர். இருந்தபோதும் பொட்டர் மிகவும் அவரை சந்தேகப்பட்டார். ஒரு கட்டத்தில் போட்டுத்தள்ளவே முயற்சி செய்தார். அண்ணை அதற்கு இடம்கொடுக்கவில்லை.
அமைப்பினால் உயிர் தப்பிய அவர் , கருணாவின் தயவில் இரண்டாவது தடவையாக உயிர் தப்பினார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்நிலையில் அவர் பிரித்தானியா சென்று அங்கு போலி தேசியவாதிகளாலும், போலிப்புலிகளாலும் அவ கௌரவப்படுத்தப்பட்டிருக்கின்றார். அவருக்குரிய கௌரவம் அங்கு வழங்கப்படவில்லை.
நேரடியாக சொல்வதானால், புலிகளினால் செல்வந்தர்களான ஒருவரின் கடையில் எடுபிடியாக வேலை செய்யவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் அவரை பெரும் மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்தது. ஒருமுறை பேசும்போது அவர் கூறிய வார்த்தை „எம்மவர்களிடம் எடுபிடியாக வேலைசெய்வதை நினைக்கும்போது, இதற்குத்தான போராடினேன் என்றாகின்றது’
இது பதுமனுக்கு அண்ணைக்கு மாத்திரம் அல்ல 2009 மே மாதத்திற்கு பின்னர் உயிர் தப்பி புலம்பெயர்ந்த பலருக்கும் இடம்பெற்றிருக்கின்றது. புலம்பெயர்ந்த முன்னாள் பெண் புலிகள் சிலர் புலம்பெயர் தமிழர்களினால் தாம் நடாத்தப்பட்ட விதம் தொடர்பில் மிகுந்த ஆத்திரமடைத்துள்ளனர். சிலர் இலங்கையில் பிச்சையெடுத்து வாழ்வோம் என சபதமெடுத்து நாட்டுக்கு திரும்பியுள்ள சம்பவங்களும் உண்டு என்றார்.
(இலங்கைநெற்)