தென்மராட்சியில் நடக்கும் மகளிருக்கான சைக்கிள் ஓட்டப் பந்தயம் நடந்தால் ஒரு தட்டிவான்,லொறி நிறைய காடையர்கள் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பாக வருவார்கள்.இந்தப் பெண்ணுக்கு சவாலாக மீசாலையைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண் பங்குகொள்ளுவார்.அவரால் முதலாவதாக வரமுடிந்தும் இந்த பணக்கார காடையர்கள் முந்தினால் அடிப்பேன் என வாகனங்களில் இருந்து சாதியைச் சொல்லியே மிரட்டுவார்கள்.அந்தப் பணக்காரப் பெண்ணும் தூசண வார்த்தைகளால் ஏசுவார்கள்.இதனால் அந்தப் பெண் பணக்கார திமிர் பிடித்தவளுக்கு விட்டுக் கொடுப்பார்.
இந்த சமூகத்தில் பணத்திமிர் படைத்தவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதற்கான ஆவணக் கதை இது.
சம்பவம் இரண்டு-அரசியல் செல்வாக்கு
மதுரையில் கனிமொழி பிறந்துவிட்டார்.யார் தந்தை என வினாவப்பட்டபோது கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர் என பதில் வருகிறது.டாக்டர் திகைத்துப்போனார்.அதைப் பதிவு செய்யாமல் தகவலை அன்றைய முதல்வர் அண்ணாவுக்கு அனுப்புகிறார்.செய்தி கருணாநிதியை அடைகிறது.கருணாநிதி மறுக்கிறார்.
இதை செய்தியாக போட்ட பத்திரிகையாளர் மேல் வழக்குப் போடப்பட்டு அவர் குற்றவாளியாக காணப்பட்டார்.அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை .காலம் ்செல்ல கருணாநிதி சொன்னார்.கனிமொழிக்கு நானே அப்பா.ஆனால் ராசாத்திக்கு நான் கணவன் அல்ல என்றார்.பின்னர் ராசாத்தி துணைவியாக அவரே ஏற்றுக்கொண்டார்.
சம்பவம் மூன்று
கர்நாடகாவில் ஒரு நடிகையைக் பலநாட்களாக காணவில்லை.திடீரென ஒரு நாள் குழந்தையோடு தோன்றினார்.அவர் அமைச்சர் ஒருவரின் மனைவியாக தொலைகாட்சி நிறுவன உரிமையாளராகவும் காட்சிப்படுத்தப் பட்டார்.
செல்வி ஜெயலலிதா பிரபலமான நடிகை.அவருக்கு பின்னாலே உள்ள சோகம் யாருக்கும் தெரியாது.புரியாது.ஏழைப் பெண்களுக்கு மட்டும் அல்ல எந்தப் பெண்களுக்கும் நமது சமூகத்தில் பாதுகாப்பு இல்லை.சொந்தக் குடும்பங்களில்கூட இல்லை.
தமிழ்நாட்டில் பகுத்தறிவு பெண் உரிமைபற்றி பேசிய பலர் இரண்டு திருமணம்.ஆனால் எந்தப் பெண்ணும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு குடும்பம் நடத்தவில்லை.
மகள் சகோதரி என்றாலும் கற்பை இழந்துவிட்டால் அதை அசிங்கம் அருவருப்பு என கருதும் மனோநிலையே நம்மிடம் உள்ளபோது பாதிப்பட்ட பெண்கள் எங்கே முறையிடுவது?
நாட்டில் நேர்மையான நீதிபதிகள் குறைவு.நீதிக்காக வழக்காட வக்கீல்கள் இல்லை.நம்பவே முடியாத பொலிஸ் இலாகா.நம்பவே முடியாத அரசியல் தலைமை,அரசியல் கட்சிகள்.இப்படி நிலைமைகள் எல்லாம் இருந்தால் மக்கள் எங்கே யாரிடம் முறையிடுவது? எங்கே நியாயம் கேட்பது?
கருணாநிதிக்கு எதிரான ஊழல் வழுக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன.ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அவரை குற்றவாளி எனத் தெரிந்தும் விடுவிக்கப்பட்டார்.்வெண்மணியில் தொழிலாளர்களை உயரோடு கொழுத்தியவர்கள் நீதிபதியால் விடுவிக்கப்பட்டார்.காஞ்சிபுரம் கோவில் அதிகாரி சங்கர்ராமன் கொலை வழக்கு இழுத்தடித்து ஜெயேந்திரர் விடுதலையானார்.
இன்று பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து பொங்கி எழுந்தவர்கள் இந்த தவ்றுகளின் மூலங்கள் எங்கே என்பதை யோசிக்கவேண்டும்.சட்டம் எப்படி யாரால் வளைக்கப்படுகிறது என்பதை யோசிப்பதில்லை.
நமது வளர்ப்புமுறை,கலாச்சாரம் சமூகம் எல்லாமே ஊனமாக்கப்பட்டுள்ளன.அரசு,அரசியல்,சட்டம்,அதிகாரம் எல்லாமே குற்றவாளிகளை பாதுகாக்கிறது .
நீதிக்குத் தண்டனை.