(Thamil Mathy)
தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான பயணத்தில் ஆயுதப்போராட்டத்திற்கான தேடலின் பிதாமகனும் இலங்கை இராணுவவத்தினரிடம் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்கு சயனைட் உட்கொண்டு தனது உயிரை தன் இனவிடுலைக்காகவும், தன் தேசவிடுலைக்காகவும் கொடையாக கொடுத்த மாவீரன் பொன் சிவகுமாரன் அவர்கள் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இன்றாகும், எமது மூதாதையரும் எமது வழிகாட்டியுமான இந்த மாவீரருக்கு தமிழீழ மண்ணும் மக்களும் தமது வீரவணக்கத்தை தெரிவிக்கட்டும்,
அதே வேளை இலங்கையின் தேசியக்கொடியாக சிங்ககொடி அறிவிக்க்பட்டதை எதிர்த்து 1951 ம் ஆண்டு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தில் கறுப்புக்கொடி ஏற்றி இலங்கை காவல்துறையால் சுடப்பட்டு இந்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைககாக தன்னுயிரை கொடையாக்கிய மாவீரரான
திருமலை நடராஜனின் மரணமும் தமிழ் சமூகத்தால் நினைவுகூரப்படவேணடும்,
நான் அறிந்வகையில் மேற்கூறப்பட்ட இருவருமே(திருமலை நடராராஜன் பொன் சிவகுமாரன், )
ஆயுதப்போராட்டத்தின் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள்,கடந்தவருடம் பொன் சிவகுமாரன் அவர்களை முதல் மாவீரராக அறிவிக்கவேண்டும் என நான் கருத்து தெரிவித்தபோது இந்த முகநூலில் இருக்கும் நாதன் கதிர் ஐயா அவர்கள் அவ்வாறெனில் திருமலை நடராராஜனையே முதல்மாவீரராக அறிக்கவேண்டும் என கருத்திட்டிருந்தார்,அதன் பிறகே நான் திருமலை நடராராஜனைப்பற்றிய தேடல்களில் இறங்கினேன்,கடந்தகால இயக்க சாதிய நோயால் விடப்பட்ட தவறுகளில் இதுவும் ஒன்று,
எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
எங்கிருந்து திருத்துவது?
எதைப்பேசுவது?
எதை தவிர்ப்பது?
விக்கவும் முடியாது விழுங்கவும் முடியாது
தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகவும்,துரோகமாகவும் பார்க்கும் ஒரு சமூகம்,தொடர்ந்து தவறான பாதையில்தான் பயணிக்கும்,
நீதிநியாங்களை புறந்தள்ளியும், பெருந்தன்மையும் மனிதமான்புகளும் அற்ற ஒரு சமூகத்தால் நிச்சயமாக தனக்கான விடுலையை ஒருபோதும் சாத்தியமாக்கமுடியாது,காரணம் அது தனது விடுலையை வேண்டி நிற்கும் தார்மீக நியாய தர்மத்தை இழந்து நிற்கிறது,நியாயமற்ற சமூகமாக இருந்துகொண்டு எவ்வாறு நியாயத்தை தேடமுடியும்?
அது தனது தவறுகளை திருத்தி சரியான பாதையில் பயணிப்பதற்கான மனப்பக்குவத்தை பெறாதவரையும்,விடுதலையை நோக்கி
பயணிக்காது மாறாக அழிவை நோக்கியே பயணிக்கும்,
தவறுகளை திருத்த முற்படுவது வரலாற்றையும்,நம்மையும் பாதுகாத்துக்கொண்டு இலக்ககை வெல்வதற்கே தவிர யாரையும் மறைப்பதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல,இதை தவறுகளை திருத்த முற்படுபவர்களிற்கு
துரோகிப்பட்டம் கொடுக்க முற்படுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,