எதையும் சாதிக்க முடியாத தலைமைத்துவ சவடால்கள் மத்தியில் மக்களை ஏமாற்றி வெறும் பசப்பு வார்த்தைகளில் பயணிக்கும் நிலமையே தொடர்கிறது.
மிகப் பழைய வரலாறு கொண்ட திருமலை நகர் இன்னும் மாநகர சபை ஆக முடியவில்லை.மூதூரில் தமிழ் பிரதேச செயலகம்,பிரதேச சபை,கல்வி வலயம் அமைக்க முடியவில்லை.தனியான பல்கலைக் கழகத்தை உருவாக்க முடியவில்லை,தமிழர் தொல்லியல் வாழ்விடங்களை பாதுகாக்க முடியவில்லை.வரலாற்று பழமை மிக்க குன்றுகள் உடைக்கப் பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப் படுகொன்றன மாவலி கழி முகங்கள் குடையப் பட்டு மண் அள்ளப் பட்டு கொள்ளையிடப் படுகின்றன.
தென்னமரவாடி முதல் வெருகல் வரை நம் முன்னோர்கள் வாழ்விடங்கள். படிப்படியாக பறி போகின்றன.
எதிர்கால சந்ததியினர் பற்றிய எந்தவிதமான வேலைத் திட்டங்களும் எம்மவரிடம் இல்லை பேரம் பேசும் அரசியல் சந்தர்ப்பம் வாய்த்த போதும் அதனை பயன்படுத்த தெரியாத தந்திரோபாய அரசியல் தெரியாத பழுத்த அரசியல் என புகழ் மாலை சூடிக் கொண்டு வெறும் பூச்சிய நகர்வுகளுடனான அரசியல் கடைசியில் கம்பரலிய வேலைத் திட்டத்துக்குள் முடங்கிப் போன பரிதாபம்.
திருகோணமலை மாவட்டத்தின் சமூக கலாசார அரசியல் பொருளாதார பண்பாடியல் தொடர்பிலான தூர நோக்குள்ள பல இளைஞர்கள் இன்று நம்பிக்கை தருபவர்களாக உள்ளனர் அவர்களை முன்னிறுத்தி நாம் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.
அரசியல் என்பது ஒரு கலாசாரம் அறிவியல்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்