அவர்களின் வேகம் போதாது விவேகம் போதாது என்று 1970 பிற்கூறுகளில் தமிழ் பேசும் இளைஞர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையிற்கான போராட்டத்தை தமது கைகளில் ஏற்க புறப்பட்டனர். அது திமர் இளைஞர் பேரவையிற்கு புறம்பாகவே அதிகம் இருந்தன.
இதற்கு எந்த வகையிலும் தாமும் பின் நிற்கப் போவது இல்லை என்று சொல்லிக் கொண்டு 1972 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தரபின் முக்கிய அரசியல்வாதிகளின் பாராளுமன்றத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து வட்டுக் கோட்டையில் கூடி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தனி நாடுதான் தமிPழம்தான் என்று ஒப்பிற்கு தீர்மானத்தை எடுத்துவிட்டு 1977 தேர்தலில் கணிசமான வெற்றிகளையும் குவித்து இலங்கை வரலாற்றில் எதிர்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் என்ற அடையாளத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் தேர்தல் முடிந்த சில காலத்தில் எந்தவித அதிகாரமும் அற்ற மாவட்ட சபையை தமது வர்கக் கூட்டாளியான வலதுசாரி ஜேஆரிடம் பெற்று தமது தனிநாடு என்பது வெற்றுக் கோஷம்தான்… அது தேர்தல் வெற்றி பெறுவதற்கான கோஷம் என்பதையும் மேலும் எதிர் கட்சித் தலைவர் என்பதுவும் ஒரு ஒப்புக்குத்தான் என்ற உணர்த்திய சோரம் போன நிலமையிற்குள் தம்மை தள்ளிக் கொண்டன தமிழர் மிதவாதத் தலமைகள்.
இந்த செயற்பாடுகளும் இளைஞர் அணிகளை சற்று வேகமாக ஆயுதங்களை தூக்க வைத்து. மாவட்ட சபையை எற்றுக் கொண்டது ‘துரோகமாக” பார்க்கப்படும் கருத்து நிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.
எந்த ஒரு சமூதாயத்திலும் வலதுசாரி சிந்தனை இடதுசாரி சிந்தனை என்ற இரு போக்குதான் இருக்க முடியும். அது ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பமான இளைஞர் மத்தியிலும் இருந்தது அதனை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மையான செயற்பாடும் தொடக்கமாக இருந்தது.
ஈழப் புரட்சி அமைப்பும் பாரம்பரிய இடதுசாரி கட்சிகளின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்கள் என்று ஒரு சாரர் ஈழம் என்ற தனிநாடுப் போராட்டம் ஒட்டு மொத்த இலங்கையின் புரட்சியை நடாத்துவதற்குரிய முதல்படி என நம்பினர் இடதுசாரித் தத்துவங்களின் அடிப்படையில். இவர்கள் இதற்கு சர்வ தேசங்கள் எங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் இடதுசாரிப் புரட்சிகளை துணையிற்கு எடுத்தும் கொண்டனர்.
தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கமும் சிங்களம் பேசும் உழைக்கும் வர்க்கமும் இணைந்து செயற்படுமுடியாத…. போராட முடியாத அளவிற்கு பேரினவாதம் இரு தரப்பினருக்குமிடையில் முரண்பாட்டை வளர்த்து வருவதினால் தமிழ் பேசும் சிறுபான்மையினர் தனியாக பிரிந்து சென்று தமக்கென ஒரு நாட்டை உருவாக்கிய பின்பு சிங்கள மக்கள் பேரினவாத சக்திகளிடம் இருந்து அனுபவிக்கும் சுரண்டலை உணர வாய்புகளை ஏற்படுத்தலாம்… என்று நம்பினர்.
தமிழ் மக்களின் செயற்பாடுகள்தான் இலங்கையில் நிலவும் சிங்கள மக்களின் சுபீட்சமான வாழ்விற்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று இலங்கை அரசுகள் கூறுவதற்கான வாய்பை இல்லாது ஒழிக்க முதலில் ஈழ விடுதலை பின்பு வர்க்க விடுதலை முழு இலங்கையிற்கும் என்று தத்துவார்த்த ரீதியில் நம்பினர்.
ஈழவிடுதலைப் போராட்டத்திலும் இடதுசாரிச் சிந்தனையை அடிப்படையில் உழைக்கும் மக்களின் தலமையில் தேசிய முதலாளிகளையும் இணைத்துக் கொண்டும் செயற்படுதல் என்ற தெளிந்த பார்வையுடன் களம் இறங்கினர் ஒரு பிரிவு ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பினர்.
இன்னொரு பிரிவினர் வெறும் இராணுவாதக் கண்ணோட்த்தில் மக்களை பங்காளிகளாக ஆக்குவது அரசியல் மயப்படுத்துதல் என்ற மக்கள் போராடத்திற்குரிய முக்கிய கூறுகளை நிராகரித்து சுத்த இராணுவவாதக் கண்ணோட்டத்தில் சிங்கள் இராணுவத்தை கொல்லுதல் முகாங்களை தகர்த்தல் இதற்குள் சிங்கள மக்களை எல்லைக் கிராமங்களிலிருந்து அடித்து விரட்டுதல் என்று ஆரம்பமாகி தமிழ் பேசும் மக்களை வெறும் பார்வையாளராக இருங்கள் என்ற வகையிலான வலதுசாரிப் போக்குடன் செயற்பட்டனர்.
இந்த இரு பெரும் போக்கிற்கு இடையில் ஐந்து பெரிய இயக்கங்களையும் இன்னும் சில விடுதலை அமைப்புகளையும் தன்னகத்தே உருவாக்கிக் கொண்டதுதான் ஈழவிடுதலைப் போராட்டம். இந்த வளர்ச்சிப் போக்கில் தமிழர் மத்தியில் இருந்து மிதவாதத் தலமை மெது மெதுவாக தமது இருப்பை தொலைத்துக் கொண்டு வெறும் அடையாள கட்சியாக இலங்கை இந்திய அரசுகளின் சொகுசு பங்களாவில் சிம்மாசனம் செய்தனர். கூடவே இளைஞர்களுடன் ஒரு தொடர்பையும் மறைமுகமாக பேண விரும்பினர்.
ஜேஆர் இன் அமெரிக்க சார்பும் இந்து சமூத்திரப் பிராந்தியம் இந்தியாவின் சமாதான பிராந்தியம் என்ற மேலாண்மையையும் கேள்விக் குறியாக்கிய செயற்பாடும் ஈழவிடுதலை அமைப்புகளுக்கு பயிற்சியும் உதவிகளையும் வழங்கி ஜேஆர் இற்கு பாடம் புகட்டுதல் என்று ஆரம்பமான இந்திய இந்திராவின் ஆதரவு இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான இராணுவத் தாக்குதலை தமிழர் தரப்பில் இருந்து எதிர் கொள்ளும் நிலைகளை உருவாக்கியது.
இதற்கு தீனி போடுவதைப் போல் இடதுசாரி சிந்தனை விடுதலை அமைப்புகளின் மக்களை அரசியல் மயப்படுத்தி அணிதிரத்துடல் என்ற நிதானமான சரியான வேலைத்திட்டங்களை தவிடு பொடியாக்கியது 1983 13 இராணுவத்தினரின் கொலையும் தொடர்ந்த பேரினவாதத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக்கலவரம் வெலிக்கடைப் படுகொலை என்று விரிந்து செல்ல முகாம் என்றும் பயிற்சி என்றும் இந்தியா தமிழ் இளைஞர்களை உள்வாங்கி கொண்டது.
தனது எஜமானர்களின் ஆலோசனையை இஸ்ரேல் மூலம் பெற்று காய்களை நகர்த்தி பூசா முகாம் வரை திறந்த சிறைசாலைகள் பயங்கரவாத் தடைச் சட்டம் என்றெல்லாம் இலங்கை அரசு போட்டது. கூடவே போரை நிறுத்தம் என்று சொல்லி சூழ்ச்சியிற்குள் வீழ்த்தி தோற்கடிக்க வேண்டும் என்ற இலங்கை அரசின் விருப்பமும் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை என்ற ஒரு நகர்விற்கள் இரு தரப்பையும் கொண்டு வந்ததுதான் திம்பு பேச்சவார்த்தையும் அதற்கு முன்னராக போர் நிறுத்ததும். இந்தியாவிற்கும் இந்தப் நகர்வுகள் தேவையாகவே இருந்தன.
இலங்கை அரசோ ‘பொடியளை” ஊதித் தள்ளிவிடலாம் என்று மமதையில் பேச்சவார்த்தை மேசையிற்கு ஜேஆர் இன் சகோதரர் இராணி அப்புக்காத்து ஹெட்டர் ஜெயவரத்தன தலமையில் குழுவை அனுப்ப ஈழவிடுதலை அமைப்புகளின் பிரதான ஐந்து விடுதலை இயக்கங்களும் மிதவாத தலமை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தமது தலைவர்களுடன் பூட்டானின் தலைநகரில் கூடுவதற்கான மத்தியஸ்தத்ததை இந்தியா செய்து.
இந்தியா தமிழர் தரப்பிடம் தனிநாட்டைத் தவிர வேறு கோரிகைகளை முன் வையுங்கள் என்று முன் நிபந்தனை தனிநாடு என்பது சாத்தியம் இல்லை என்பதை கோடு காட்டி நிற்க அதனை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய நிலையில் கிழக்கு பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷை பிரித்து கொடுத்தை போன்று தமிழ் மக்களுக்கும் பிரித்து தருவார்கள் ஈழத்தையும் என்ற கனவுகள் கலைந்த நிலையில் பேச்சவார்த்தை மேசையிற்கு சென்றனர் தமிழர் தரப்பு.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சமாதான பிராந்தியாக வைத்திருப்பது என்ற செயற்பாட்டிற்குள் இந்தியா இருக்கும் வரை இந்திய அரசு எமது நண்பர. சிறப்பாக இந்திய மக்கள் தமிழ் நாட்டு மக்களின் ஆதரவும் இந்திய அரசின் தார்மீக ஆதரவும் எங்கள் போராட்டத்திற்கு கிடைக்க வேண்டும் மாறாக பிரிவினையை இந்தியா ஒரு போது ஆதரிக்காது அதேவேளை இந்து சமுதிரப் பிராந்தியம் சமாதானப் பிராந்தியமாக இல்லாமல் மேற்குலகின் ஆடுகளமாக மாறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை புரிந்து கொண்ட இடசாரி சிந்தனை ஈழவிடுதலை அமைப்புகளின் நிலைப்பாடாகவும் உணரப்பட்டது.
இந்தியாவின் நிபந்தனையை ஏற்று பேச்சவார்தை மேசையில் ஈழத்திற்கு மாற்றீடாக ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைப்பதாக ஒப்புக் கொண்டனர் தமிழ் பேசும் தரப்பினர்.இதன் பின்பு என்ன கோரிக்கை வைப்பது என்பது பற்றி வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் இருவரும் இணைந்து ஏனையவர்களின் கலந்துரையாடி நாலு அம்சக் கோரிக்கையை தயாரித்தனர். இதன் அடிப்படையில் எட்டப்பட்ட வரைபை சகல விடுதலை அமைப்புகள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடம் முன்வைத்து அதனை சகலரும் ஏகமனதாக எற்றும் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை தமக்குள் நடாத்தினர்.
தோழர் பத்மநாபா இன் சகல விடுதலை அமைப்புத் தலைவர்கள் தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர்களுடனாக நட்பு தோழமை புரிந்துணர்வு இந்த பொது முடிவை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்தது.தோழர் நாபாவின் மிகச் சிறந்த பண்பு ஆழுமை தோழமை இது என்பதை அவருடன் பழகிய வாழ்ந்த அமிர்தலிங்கம் பிரபாகரன் பாலகுமார் உமாமகேஸ்வரன் சிறீ சபாரத்தினம் என்று பலருக்கும் இது தெரியும் இன்று அவர்கள் யாரும் நம்மிடையே இல்லாத துப்பாக்கிய நிலையிலும் இவர்களுக்கு அப்பாலும் தற்போது வாழும் பலருக்கும் இது தெரிந்தே இருந்தது.
நாலு அம்சக் கோரிகையாக….
1. இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தனித்துவமான தேசிய இனம்
2. தமிழ் பேசும் மக்களுக்கென இலங்கையில் அடையாளம் காணப்படக்கூடிய தொடர்ச்சியான தனித்துவமான தாயகம் உண்டு
3. இதன் அடிப்படையில் இலங்கைத் தீவில் வாழும் தமிழ்த் தேசிய இனத்திற்கு அதன் தாயகத்தின் மீது தேசிய சுயநிர்ணய உரிமை உண்டு.
4. இலங்கைத் தீவை தமது சொந்தமெனக் கருதும் அனைவரும் குடியுரிமை உட்பட அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்
இவற்றை இலங்கை அரசு முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முன் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை மேசையிற்கு சென்றனர்
தமிழ் பேசும் தரப்பு ஒற்றுமையாக. ஈழவிடுதலை அமைப்புகளின் தலைவர்கள் அதன் அரசியல் விற்பனர்கள் என்று யாவரும் திம்புவில் கூடி எழுத்தப்படாத ஒரு புரிந்துணர்விற்கு வந்து தனிதனியாக இல்லாமல் விடுதலை அமைப்புகள் ஐந்தும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியும் இணைந்து ஒருமித்த குரலில் பொதுவான கோரிக்கையை முன்வைத்த செயற்பாடு இது ஆகும்.
இது திம்பு பேச்சவார்த்தையில் தமிழ் பேசும் தரப்பிற்கு கிட்;டிய மிகப் பெரிய முதலாவது வெற்றியாகும். ஈழவிடுதலைப் போராட்டத்தில் உண்மையில் தமிழ் பேசும் தரப்பு மிகவும் பலமாக உணரப்பட்ட காலம் இதுவே. இதற்கு முன்னரோ இன்று வரையோ இந்த அளவிற்கு அவர்கள் ஒரு பலமான நிலையில் அரசியல் ரீதியில் இருக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இலங்கை அரசு எதிர்பார்த்த தனித் தனியா தமிழர் தரப்பு கோரிக்கைளை முன்வைப்பார்கள் அதனை வைத்தே இந்த பேச்சவார்தையை குழப்பிவிடலாம் பழியை தமிழர் தரப்பிடம் போட்டு இந்தியாவிடம் ‘நல்ல’ பெயர் பெற்றவிடலாம் என்பதற்கு இலங்கையிற்கு கிடைத்த முதல் வாய்கரிசி இது.
இது இரண்டாவது மிகப் பெரிய வெற்றி… இந்த நாலு அம்சக் கோரிகை ஆகும். இந்தியாவின் முன் நிபந்தனையை எற்றுக் கொண்டதாக… பேச்சுவார்த்தை மேசையிற்கு சென்றனர் தமிழர் தரப்பு. கூடவே தனி நாட்டிற்கு எந்த வகையிலும் துளியவும் குறைவில்லாமல் இருந்த நாலு அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
இதனைப் பார்த்த இலங்கை பேச்சுவார்த்தைக் குழு ஆடித்தான் போய்விட்டது. இது பற்றி கலந்து ஆலோசிக் தாம் தமது தலைவர் ஜேஆர் ஜெயவர்தனாவிடம் சென்று வரவேண்டும் என்ற கூறி பேச்சுவார்த்தையில் இருந்து தற்காலிகமாக பின்வாங்கி சில தினங்களின் பின்பு இரண்டாம் சற்றுப் பேச்சுவார்த்தையிற்கு இலங்கை அரசு வந்தது.
ஆனால் பேச்சு வார்த்தை நடைபெறும் போது இலங்கை அரசு ஒரு தலைப் பட்சமாக போர் நிறுத்தத்தை மீறி தமிழ் மக்கள் மீதான் தாக்குதல்களை ஆரம்பித்தது. வழமை போல் ஈழவிடுதலை அமைப்புக்களின் மேல் பழியைப் போட்டுவிட முயன்றது ஆனாலும் இவ்விடயத்தில் இலங்கை அரசு இந்தியாவிடமும் உலக அரங்கிலும் அம்பலப்பட்டுப் போனது.
கூடவே இந்த நாலு அம்சக் கோரிக்கையில் இருக்கும் சுயநிர்ண உரிமை என்ற வகையிலான ‘பதம்’ கோரிக்கை முதலாளித்துவ இலங்கை அரசின் கூட்டாளி அமெரிக்காவிற்கு ஈழவிடுதலை அமைப்பிற்குள் இருக்கு பலம் பெற்று வரும் இடதுசாரி செயற்பாட்டை தான் ஏற்கனவே கணித்ததைப் போல் கோரிக்கைகள் நிறுவும் விதமான வெளிப்பாட்டை கொண்டிருந்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் இருக்கும் இந்த இடதுசாரி சிந்தனை அது சார்பான செயற்பாடுகளை உடைய விடுதலை அமைப்புகளை பலவீனப்படுத்தி அழித்தல் என்பதை செயற்படுத்து திட்டமிட்டனர். அதற்கு தமிழர் தரப்பிற்குள் பிரிதாளும் செயற்பாட்டை உருவாக்கி ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி செயற்படுத்த விளைந்துதான் இன்று தோற்றுவிட்டோமோ என்ற நிலையிற்கு தமிழ் பேசும் தரப்பி வந்திருக்கும் நிலமைகள் ஆகும்.
இந்த திம்புவில் திரும்பி பார்த்த வைத்த முக்கிய பேச்சுவார்தையின் தமிழ் பேசும் தரப்பு மிகவும் பலமாக இருந்தமையிற்கு அவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் நின்று ஒரே கோரிக்கைகளை அதுவும் தனிநாட்டிற்கு மாற்றாக அதே வேளை தனிநாட்டிற்குரிய அதே விடயங்களை வேறு வடிவத்தில் வைத்தது என்பதற்கு பின்னால் தோழர் பத்மநாபா தான் முக்கியமான ஐக்கிய முன்னணி சிந்தனையை உருவாக்கிய செயற்பாட்டளாராக இருந்தார் என்பதே உண்மை.
ஏனைய நான்கு விடுதலை அமைப்புகள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் என்று எல்லோருடனும் நட்பாக இணக்கமாக தோழமையுடன் பேசும் திறமையை இயல்பை அவர் கொண்டிருந்தார் என்பதை அவர் அறிந்த இந்தத் தலைவர்களும் எதிர் கருத்துடையவர்களும் அறிவர்.
இந்த முன்மொழிவையும் திறமையான வரதராஜப்பெருமாள் கேதீஸ்வரன் போன்றோரைக் கொண்டு தயாரித்து அது எல்லோரும் ஏற்கும் வகையில் அமையுமாறு வரைதல் செய்ததும் செழுமைப்படுத்தியதும் வரலாற்றில் திரும்பி பார்த்த திம்பு என்பதன் நாயகனாக இருந்தவர் தோழர் நாபாதான்.
இது ஒரு தனிநபர் பற்றிய வெறும் புகழாரம் அல்ல இதுதான் யாதார்தம் உண்மை. இதுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறு.
இதுபற்றி மேலதிக தகவல்களுக்கு….
ராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
இதில் அனைத்து தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி இலங்கை அரச படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடத்திய தாக்குதலில் தமிழினப் படுகொலையில் 200-ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன.
1985 ஜூலை 13ம் திகதி முதல் சுற்று திம்பு பேச்சுவார்த்தையின் இறுதி நாளாக அமைந்தது. இந்த நாளில் தமிழர் தரப்பு வரலாற்று முக்கியத்துவம் மிக்கதோர் அறிக்கையை வெளியிட்டது.
தமிழ் மக்களின் அபிலாஷைகள்தான் என்ன என்ற ஆண்டாண்டு காலமாக கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு இன்றும் கூட இரத்தினச்சுருக்கமான பதிலை வழங்கத்தக்கதொரு பெறுமதியான ஆவணமாக அவ்வறிக்கை அமைகிறது.
திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் ஈழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும்.
இப்பேச்சுவார்த்தைகள் 1985ம் ஆண்டு ஜூலை 8இல் ஆரம்பமாகியது.
இப்பேச்சு வார்த்தையில் தமிழர் சார்பாக பங்கு பற்றிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நான்கு உறுப்பு இயக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு சார்பில் ரொமேஸ் பண்டாரி தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்வதற்காக இணைந்திருந்தது.
ஹெக்ரர் ஜெயவர்தனா உட்பட 10 பேர்
(புலிகள்): அன்ரன், திலகர்
(ஈ.பி.ஆர்.எல்.எவ்.): அ. வரதராஜப் பெருமாள், எல்.கேதீஸ்வரன்,
(டெலோ): சார்ள்ஸ் அன்ரனி தாஸ், மோகன்
(ஈரோஸ்): ராஜி சங்கர், ஈ. இரத்தினசபாபதி,
(புளொட்): இரா வாசுதேவா, தர்மலிங்கம் சித்தார்த்தன்,
(த.ஐ.வி.மு.): மு. சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், இரா. சம்பந்தன்.
(இரண்டாவது கட்டத்தில் டெலோ குழுவில் மோகனுக்கு பதிலாக நடேசன் சத்தியேந்திரா பங்கேற்றார்)
(ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF), ஈழப் புரட்சி அமைப்பு(EROS), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) நான்கும் இணைந்து அன்று ஈழத் தேசிய விடுதலை முன்னணி(ENLF) என்ற ஐக்கிய முன்னணியை அமைத்து செயற்பட்டு வந்தனர்.
தமிழீழ விடுதலைக் கழகம்(PLOTE) தனியாக விடுதலை அமைப்பாகவும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி(TULF) தனியான மிதவாத அரசியல் கட்சியாகவும் செயற்பட்டு வந்த கால கட்டம் இது.
பேச்சுவார்த்தை முறிவை தொடர்ந்து…இந்தியாவில்…பாலசிங்கம், சத்தியேந்திரா (இருவரும் இலங்கை தவிர்ந்த மேற்குல குடியுரிமையாளர்கள் அப்போது இருவரையும் இந்தியாவை விட்டு அவர்கள் வாழும் நாடுகளுக்கு நாடு கடத்துவதற்காக கைது என்ற நடவடிக்கை மேற்கொள்ள முற்படுகையில் …….சத்தியேந்திரவை ரெலோ என்ற அவரின் அமைப்பு பாதுகாத்து இரகசிய இடத்தில் வைத்திருந்தது.
அன்ரன் பாலசிங்கத்தை பாதுகாக்பதற்கு தோழர் பத்மநாபா தனது வாகனத்தில் அவரை பாதுகாப்பாக மறைத்து கொண்டு அழைத்துச் சென்று புலிகளின் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவித்தார்.
இலங்கையில்….. குறிப்பாக தமிழ் பிரதேசங்களில்….இலங்கையில் இராணுவ முகாங்களில் முடங்கிக் கிடந்த இராணுவம் சிறப்பாக யாழ் கோட்டையை விட்டு வெளியேற முற்பட்டது. இதற்கு அன்றைய பிரபல்ய யாழ் பிரஜைகள் குழுவினரின் யாழ் கோட்டை விஜயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை பாதுகாப்பாக யாழ் நகரத்தில் விடுதல் என்று புறப்பட அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பத்மநாபாவின் ஈபிஆர்எல்எவ் மோட்டார் ஏறிகணை மூலம் துண்டுப் பிரசுரங்களை கோட்டையிற்குள் மும் மொழியிலும் செலுத்தியது.
இதனையும் மீற வெளியேற முற்பட்டவர்களை எச்சரிக்கும் நோக்கில் கோட்டை இராணுவ வாசல் நோக்கி குண்டுகளை ஏவ இராணுவம் பின் வாங்க பிரஜைகள் குழு தனியாக யாழ் நகருக்குள் புகுந்தது.
இந்த இராணுவ வெளியேற்றத்தை தடுத்து நிறுதிய முதல் சம்பவம் தான் ஈழவிடுதலைப் போராட்த்தில் இராணுவத்தை முகாங்களுக்குள் முடக்க காரணமாக இருந்து செயற்பாடு ஆகும்.
எழுதப்படாத புரிந்துணர்வின் அடிப்படிடையில் ரெலோ இந்த வெளியேற்றத்தை தொடர்ந்தும் தடுக்கும் நோக்கி யாழ் மெயின் வீதியில் காவல் செய்ய….. புளட் பொன்னம்மா மில் அடியில் தனது தளத்தை வலுவாக்க ஈபிஆர்எல்எவ் மணிக் கூட்டுக் கோபுர வீதி, கொட்டி பகுதியில் செயற்பாட்டை தொடங்கின.
இதே மாதிரியான செயற்பாட்டை முல்லைத்தீவு இராணுவ முகாமிற்கும் ஈபிஆர்எல்எவ் செய்தது. இவ் செயற்பாடுகளில் புலிகளோ ஈரோஸ் அமைப்போ இணைந்து செயற்பாட்டை வழங்கவில்லை.