தீண்டாமைக்கு எதிரான போராட்டம்

1960 களில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் உச்சமாக நடந்தது. அதில் ஆலயப் பிரவேசத்துக்கான போராட்டம் முக்கியமானது. அந்தப் போராட்டம் தென்மராட்சியிலுள்ள பன்றித்தலைச்சி அம்மன்கோவிலிலும் நடந்தது. அப்பொழுது செல்லக்கிளி என்ற இளம்பெண் ஒருவர் கோயிலுக்குள் நுழைய மறுப்புத் தெரிவித்தவர்கள் மீது கைக்குண்டை எறிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.