தீண்டாமைக்கு எதிரான போராட்டம்

இதைப்பற்றிய சேதிகள் அன்றைய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகக் கூட வந்திருந்தது. இந்த வரலாற்றுடன் சம்மந்தப்பட்ட செல்லக்கிளி அவர்களின் மகள் வேணி கிருபாகரன் தன்னுடைய தந்தை, தாய் ஆகியோரின் வரலாற்றுடன் இந்தப் போராட்ட வரலாற்றையும் இணைத்து அம்மாவும் அப்பாவும் என்று பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலின் வெளியீடு நேற்று முன்தினம் சாவகச்சேரி மட்டுவிலில் நடந்தது. செல்லக்கிளி அவர்களுடன் இன்னொரு வரலாற்றுப் பாத்திரமான தோழர் செந்தில்வேல் அவர்களும் கலந்து கொண்டார்.

அன்றைய (1960 களின்) வரலாற்றுச் சூழலை செந்தில்வேல் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

நூலைக்குறித்தும் அது பேசும் உண்மைகள், அந்தப் போராட்டத்தின் பின்னரான சூழல், இன்றைய நிலை, எதிர்காலத்துக்கான சவால்கள் பற்றி விரிவாக உரையாற்றினேன்.

வரலாற்று நாயகி செல்லக்கிளி அவர்களும் நிகழ்வில் உரையாற்றினார்.
வேணியின் முயற்சி மிகச் சிறப்பானது.

இளைய தலைமுறையைச் சேர்ந்த வேணி, புலம்பெயர்ந்து ஜேர்மனியில் இருந்தாலும் முடிந்த அளவுக்கு குறித்த வரலாற்றுடன் தொடர்புபட்டவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு மிகுந்த பொறுப்புடன் இந்த நூலை எழுதியுள்ளார். அன்றைய பத்திரிகைச் செய்திகளையும் செல்லக்கிளி அவர்களைப் பற்றி டானியல் தன்னுடைய நாவல்களில் எழுதிய பக்கங்களையும் நூலில் சான்றாதாரங்களாக இணைத்துள்ளார்.

மட்டுமல்ல செல்லக்கிளி அவர்களின் கணவரும் வேணியின் தந்தையாருமான சின்னத்தம்பி ஆசிரியரைப் பற்றியும் இந்தப் போராட்டங்களில் பிரதான பாத்திரமேற்றிருந்த இடதுசாரித் தலைவர்கள், தோழர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

மிக முக்கியமான வரலாற்று ஆவணம்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்தது மிக மகிழ்ச்சியான தருணம். இதைப்பற்றி விரிவாக எழுத வேணும்.