இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகள் எமக்கு 5 துப்பாக்கிகளை அன்பளிப்பாக வழங்கினர்.இதில் மூன்றை எமது ஊரவரகளும் இரண்டை அச்சுவேலிக்கும் கொடுக்கப்பட்டது.அச்சுவேலி புத்திசாலி வீர்ர்கள் அதை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருந்தனர் .சில நாட்களின் பின் எடுத்தபோது அவை கறள்பட்டு செயலிழந்து விட்டன.
எம்மிடம் தரப்பட்டவை மிக அப்பாவிகள் சந்தேகத்துக்கு இடமில்லாத ஊர் எல்லையை அண்டிய வீடுகளில் ஒழித்து வைக்கப்பட்டன.
இக் காலகட்டத்தில் சங்கானை அச்சுவேலி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த போராட்ட ஆர்வலர்கள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.இவரகளை இணத்துச் செயற்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து போவார்கள்.இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் எமது ஊர் பாடசாலைகளில் நடக்கும்.இது எமது ஊரின் மையப் பகுதிதான்.
இரத்தினம் மிகவும் எச்சரிக்கையானவர்.இங்கே ஒரு புளியமரம் இருக்கிறது. இப்பவும் இருக்கிறது.இரத்தினம் இந்த மரத்தை கவனித்தபோது மரக்கொப்பின் ஆட்டம் வித்தியாசமாக இருந்தது.அங்கே போய் பாரத்தால் நவரத்தினம் என்கிற வெள்ளாள இளைஞன் உளவாளியாக ஒற்றுக் கேட்டான்.அவனை இறக்கி எதுவும் செய்யாமல் எச்சரித்து அனுப்பப் பட்டான்.இவனது வீடு இரத்தினத்தின் வீடு அருகே இருந்தது.அவர் பெற்றோருக்கும் சொல்லி எச்சரித்தனர் .
இக் காலகட்டத்தில் எந்தவகையிலும் எமது போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சாதி வெறியர்கள்இரத்தினம் மட்டுமே காரணம் என நினைத்து அவரைக் கொல்ல திட்டங்கள். தீட்டினர்.இவரர்களுக்கு வண்ணாங்குளம் தம்பிராசன் என்கிற வெள்ளாளனும் ஒத்துழைப்பு வழங்கினான்.
இந்த தகவல்கள் யாவும் வாடிக்கை கள் குடிகார்ர்கள்,அதுவும் இரகசிய பெண் குடிகார்ர்களால் கிடைத்தன.இரத்தினம் ஓடி ஒழியவில்லை.தன் நண்பர் அய்யாவை கொடிகாம்ம் தனியே சென்று பார்த்துவிட்டு வருவார்.எதிரிகள் கொடிகாம்ம், ரயில், நிலையத்தடியில் கண்டும் காணாமலும் இருப்பார்கள்.முக்கியமானவரகள் ஒழிந்து விடுவார்கள்.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)