(புருஜோத்தமன் தங்கமயில்)
மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார்.