மச்சிகளே, குட்டிகளே,
உங்க boy friend, girl friend, மனுசன், மனுசியோட பிரச்சனை எண்டால் முகநூலாலா வந்து நியாயம் கேட்கிறீர்கள்?
இரகசியமா கெஞ்சித்தானே நியாயம் கேட்கிறியள்! இதையேன் சகோதர சிங்கள முஸ்லீம் பிரச்சனையின்போதும் செய்யக்கூடாது? முத்தவெளியில தேரரின் உடல் எரிக்கப்படுவதை யாழ் விகாரையில் நேரே கதைத்துப்பார்க்கலாம் தானே? உங்களில் எத்தினைபேருக்கு 1987 ல் லெப்.கேணல் விக்டர் கொல்லப்பட்ட சமரில் கைப்பற்றப்பட்ட 13 இராணுவத்தினரின் அழுகிய சடலங்களை கிட்டு நல்லூர் கோவில் வீதியில் கண்காட்சிக்கு வைத்தது தெரியும்?
தேரரின் சடலம் எரியூட்டப்பட்ட முற்றவெளி இடத்துக்கும் முனியப்பர் கோயிலுக்குமான தூரத்தையும் 13 இராணுவத்தினரின் சடலம் வைத்த வீதிக்கும் கோயிலுக்குமான அண்மையையும் ஒப்பிட்டு பாருங்கோ!
அடுத்தமுறை ஒரு முஸ்லீம் அரசியல்வாதி “வடக்கு கிழக்கு இணைந்தால் கிழக்கில் தமிழரின் இரத்த ஆறு ஓடும்” எண்டு பேசினால் முகநூலில் ரென்சனாகி இனக்குரோத பதிவுபோடாமல் உங்கள் முஸ்லீம் நண்பர்களிடம் உங்கள் மனம் புண்படுவதை நாகரீகமாக தனிப்பட்ட இன்பொக்சில் சொல்லுங்கள்.அந்த முஸ்லீம் அரசியல்வாதியை முஸ்லீம் மக்களே வீட்டுக்கு அனுப்புவார்கள்.
ஒண்டை மட்டும் ஞாபகத்தில வச்சிருங்க மக்காள்! பாய் பிரண்ட், கேள் பிரண்ட்(இன்னும் கணவன், மனைவி) நிரந்தரமில்லை. சிங்களவர், முஸ்லீம் சகோதரர்கள் நிரந்தரமானவர்கள். பிறப்பால் நமக்கு கிடைக்கிற அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி உறவுகளைப்போல.
சிங்களவனையோ முஸ்லீமையோ நாங்கள் டிவோஸ் செய்து கடந்துபோகமுடியாது. “ஒண்ணுக்கு இருக்கணும்.”
(Arun Ambalavanar)