சும்மா சொல்லக்கூடாது கண்டியளளே! அப்பாவி மக்களின்ட வயித்தில அடிச்சமாதிரி, புக்கையிலயும் அடிச்சாங்களே ஒரு அடி, ஒவ்வொரு சோத்துப் பருக்கையும் சுழண்டு சுழண்டு எகிறிப் பாய்ஞ்சுது. புக்கையிலை சக்கரை இல்லாட்டிலும் துட்டு இருக்கும் என்று கண்டுபிடிச்சு இந்த நூற்றாண்டின் பொருளாதார மாமேதைகள் பட்டத்தைத் தட்டிக்கொண்டவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC). அதுதான் போன முறை நான் சொன்ன தமிழர் சேர்கஸ் கொம்பனி!. வெங்கலக் கடைக்குள்ள யானை புகுந்த கதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரித்தான் பொங்கலுக்குள் ரீசீசீ புகுந்தால் எப்பிடி இருக்கும் என்பதற்கு பிரான்சில் நடந்த பொங்கல் நல்ல உதாரணம்.
முட்டாளோட எட்டாள் வந்தாலும் சமாளிக்க ஏலாது எண்டதுக்கு ஒரே உதாரணம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ்தான். தமிழ் நாட்டுப்புற திருவிழாவாக(folk festival) கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில, நாதஸ்வரமும் மேளமும் பாவிச்சு ஒரு மார்கழி கச்சேரி வச்சாங்கள். கடந்த 10வருடமாக சிலம்பு நடத்தி வந்த பொங்கலை உடைத்து இந்த வருடம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சென்தனியில் வாழைகுழை கட்டி பொங்கல் செய்துள்ளது. பொங்கல் புக்கையில துட்டுவரும் என்றால் வாழக்குலை என்ன வாழைத் தோட்டத்தையே இறக்குமதி செய்து கல் பொங்கல் வைக்க நமது சேர்க்கஸ் கொம்பனி தயார்!
உடைப்புகளை செய்வதில் தற்போது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை .தமிழ் சமுகத்தின் ஒற்றுமையை குலைத்து, சின்னாபின்னமாக்கி அவையின்ர காசில கையையும் வாயில மண்ணையும் வைக்கிறதுதான் இந்த TCC ன்ர பிளான். இலண்டனில இருக்கிற பல அமைப்புகளும், பாடசாலைகளும், பல்கலைகளகங்களும் பல வருடமா பொங்கல் நடத்திவருகினம். இந்த பொங்கல் நிகழ்வுகள் எல்லாம் தமிழ்மக்கள் கூடிமகிழ்ந்திருக்கும் ஒரு கலை, கலாச்சார நிகழ்வாகவே நடந்தப்படுகிறது எனலாம். இந்த வருடம் புதிதாக நமது சேர்க்கஸ் கொம்பனியான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பொங்கல் பிசினஸ் 23ம் திகதியே நடந்தது. டெஸ்கோவில் மட்டுமா சேல் திகதி நீடிக்கப்படும், நாங்களும் போடுவமில்லை!
றால் போட்டு சூறா பிடிப்பது கேள்விப்பட்டிருக்கிறோம். புக்கை போட்டு சுறா பிடித்த கதை தெரியுமோ? அதற்கு இலவச ரெயினிங் வேணுமென்றால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள். ரீசீசீ நடத்திய தள்ளுபடிப் பொங்கலில் வடையும் புக்கையும் இலவசமாகப் போடப்பட்டது. தேத்தண்ணியிலிருந்து மிச்சமெல்லாம் துட்டு! இவங்கட தேத்தணியை விட கோஸ்டா லாத்தே மலிவு கண்டியளே. தேசிய நாள் காட்டி, தேசியக் கொடி, தேசிய இத்தியாதிகளின் விற்பனைக்குக் குறைவில்லை. அடுத்த பொங்கலில் தேசிய அழுகின வாழைப்பழம் அரை விலையில் விற்கப்படும். தேசிய பூஞ்ணம் பிடித்த வடை கால் விலையில் விற்கப்படும். இதற்கெல்லாம் தமிழர் விழா என்று தலையங்கம் வேற.
கடைகள், வியாபார நிறுவனங்களின் பனர்கள் பொங்கலின் புக்கைக்கு மேல் நிழலாக விழுந்து கொண்டிருந்தது. ஒரு விளம்பரத்திற்கு 100 பவுண்ஸ் தேசியக் கட்டணம் அறவிடப்பட்டு ரீசீசீ இன் தேசியப் பொக்கட்டுகளுக்கு தீனி போட்டது. என்ர நண்பர் ஒருவர் புலம்பெயர் தேசியக் கூத்துக்களைப் பயங்கரமாகத் திட்டும் ‘வீர நாக்கை’ கொண்ட பெருமையுடையவர். அவரே தேசியக் கட்டணம் கட்டி விளம்பரம் போட்டது எனக்கு புரியாத புதிராகவிருந்தது. நேரத்தை மண்ணாக்கி அவருக்கு போன் பண்ணி கேட்டபோது தான் உண்மையின் தரிசனம் கிடைதது.
தற்செயலாக் காசு மட்டும் கொடுக்கேல்லை எண்டால், துரோகி என்று கதைகட்டவே ரீசீசீ இன் விசேட சேவைப் பிரிவு களமிறங்கிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக போனாப் போகுதெண்டு 100 பவுண்சை கடாசி விட்டனான் என்றார். நன்றி உரை ஆற்றிய TCC இன் தேசியப் பேச்சாளர் சொன்னதின்ர சாராம்சம் என்னவெண்டா ‘மக்களே இந்தியாவில் யல்லிகட்டை தடைசேய்து விட்டார்கள் எண்டு கவலையடைய வேண்டாம் நாம் மல்லுகட்டு என்று ஒன்றை தொடங்கியுள்ளோம் இதில் நீங்களும் இணைந்து ஏனய தழிழ் அமைப்புக்கள் நடத்தும் விழாக்களை குளப்பி பணம் புடுங்கலாம் TCCன் இணைந்து பயணியுங்கள்’.
– நிரஞ்சன் அன்டனி –