ஆனால் ‘நம்மவர்’களால் எமக்குள் நடைபெற்ற மரணங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் இதில் உள்ள அனைவரதும் தற்போதும் வாழ்ந்திருப்பார்கள். வயது மூப்பினால் ஏற்படும் இயற்கை மரணம் என்பதைத் தவிர்த்துப் பார்த்தால்…..
அது எம்மை பலமானவர்களாக வைத்திருந்திருக்கும்.
அதற்கான தோழமையை தோளோடு தோள் கொடுக்கும் உறவாக நாம் வளர்த்திருக்க வேண்டும்.
நவம்பர் 19 ஆகிய இன்று தோழமை தினச் செய்தியாக நான் இதனைப் பாகிர்கின்றேன்.
அனைத்து சகாக்களுக்கும் தோழமை தின வாழ்த்துகள்.
என் கூற்றிற்கு சான்றாக… ஒரு தகவலாக….
பிஎல்ஓ(PLO) தலைவர் யசீர் அரபாத் காலத்தில் இஸ்ரேல் பலஸ்தீனங்களுக்கு இடையே சமாதான உடன்படிக்கை ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட போது…
யசீர் அரபாத்தின் நிலைப்பாட்டை ஏதிர்த்து உருவானதுதான் ஹமாஸ்.
இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் இரு நாடுகளாக ஏற்றுக் கொண்ட இந்த உடன்படிக்கையை பிஎல்ஓ(PLO) என்ற ஒரு குடையின் கீழான கூட்டமைப்பு இல் இருந்த ஒரு அமைப்பான அன்று ஜோர்ஜ் ஹபாஸ் இன் தலமையிலான பிஎவ்எல்பி(PFLP) ஏற்கவிலை.
ஆனால் யாரும் யாரையும் தமக்குள் அழிக்க முற்படும் சகோதர யுத்தத்தில் ஈடுபடவில்லை இன்று வரை.(சில முறுகல்கள் எற்பட்டன ஆனாலும் அவை பேச்சுவார்த்தைகளினால் தீர்க்கப்பட்டன)
அதனால் இவர்கள் யாரும் தமக்குள் மோதியதால் வலிந்த மரணத்தை போராளிகள் அடையவில்லை.
இதனால் இன்றைய இஸ்ரேல் (கூறும்) ஹமாஸ் மீதான தாக்குதலை பலஸ்தீனர்கள் மீதான தாக்குலாகவே பலஸ்தீன அமைப்புகள் ஓரணியில் நின்று குரல் கொடுக்கும் சூழலும் ஏற்பட்டிருக்கின்றது.)