எனது பாலிய நண்பனும் தோழனும் ஆகிய கதிர்(கணேசரத்தினம் கதிர்காமநாதன்)தமிழ் பாசிசவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு இன்று 30 வருடங்கள் கடந்துவிட்டன.இவன் பூனகரி,நல்லூர் பிரதேசத்தை பிறப்பிடமாகவும்.ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவனும் ஆவான்.ஈழதேச விடுதலைபோராட்டத்திற்கு ஈ பீ ஆர் எல் எவ் இயக்கத்தை தேர்வு செய்து அதன் இராணுவ பிரிவான மக்கள் விடுதலை படையில் இந்திய உத்தர பிரதேசபயிற்சியை முடித்துக்கொண்டு கிளி/ முல்லை பிராந்திய பொறுப்பான தளபதியாக செயற்பட்டதுடன்.
அன்றைய பிரதம தளபதியான டக்லஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக களத்தில் நின்றவன்.
30 வருடங்களுக்கு முன்னர் புலிகள் மற்றைய இயக்கங்களை தடைசெய்கின்றோம் எனக்கூறி தோழர் கதிரையும் நயவஞ்சகமாக கைதுசெய்து யாழ்ப்பாண நல்லூரில் உள்ள புலிகளின் சித்திரைவதை முகாம் வீட்டில் வைத்து கதிருடன் பல ஈ பி ஆர் எல் எவ் தோழர்களையும்.பொது மக்களையும் கொன்று குவித்தனர்.இன்றுவரை எந்த புலி எழுத்தாளர்களோ அல்லது புலிக்கவிஞர்கள்லளோ தங்களுடைய பதிப்புகளில் இந்த வெட்கித்தலை குனியும் நிகழ்வை எழுதியதில்லை.
மானிட மீட்சிக்காக புறப்பட்ட எந்த மனிதனும் இதனை ஏற்றுக்கொள்ளவும்மாட்டான்.இன்றைய நாளில் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் இதயம்கணத்த அஞ்சலிகள்…..