(சாகரன்)
இவன் என் தோழன். 1978 அறிமுகம்… அதுவும் நல்லூரில் ஒரு ரியூட்டறி கொட்டகையில் அரசியல் வகுப்பில். மெலிந்த உரிவம் கண்ணை மூடியபடி தலையை ஒரு பக்கமா சாய்தபடி பல மர்க்சியப் புத்தகங்களை பங்கங்கள் வாரியாக மேற்கோள் காட்டி அரசியல் வகுப்பு. இந்த வயதில் இவ்வளவு அரசியல் புத்தகங்களை அதுவும் மாக்சிச புத்தகங்களை எவ்வாறு வாசித்து கொண்டார் என்ற பிரிமிப்பு எமது நாட்டுச் சூழலுக்கு எற்ப கருத்துரைகளை வழங்கினார். அவர் வேறுயாரும் இல்லை தோழர் சுகு சிறீதரன் திருநாவுக்கரசு.
அங்கிருந்து ஆரம்பித்து ஒன்றாக இணைந்த பயணம் இன்றுவரை தொடர்கின்றது. இன்று தமிழில் வந்த எல்லா புத்தகங்களையும் புராணம் இதிகாசம் என்று தொடங்கி நாட்டுவழக்கில் உள்ள பழமொழிவரை தனது எழுத்துக்களில் இணைக்கும் என் தோழனைப்பற்றிய பிரமிப்பை அருகில் இருந்து பரவசம் அடைந்திருக்கின்றேன். இன்று ஒரு நாட்டின் அரசியல் அமைப்பை மகக்களுக்கான அரசியல் அமைப்பை எழுதும் அளவிற்கான வளர்ச்சி இதில் எந்த வகை மிகைப்படுத்தலும் இல்லை.
வாயில் இருந்து வந்த வார்த்தைகளும் கருத்தரங்களில் வழங்கிய விடயங்களையும் கூட்டங்களில் பேசியவிடயங்களையும் தொகுத்து எழுதினால் அரசியல் பொருள் முதல்வாதத்தின் பல பாகங்களைப் போல் அதுவும் அமையும் அளவிற்கு கருத்தாளமும் விடயங்களையும் உள்ளடக்கி இருக்கும் இன்றைய புத்தக வெளியீட்டில் எனது தோழனின் பதிவு அவன் சிந்தனையின் ஒரு சிறு துளியே.
பொருளாதார வளங்களின் வறுமை இவனின் பதிவுகள் வெளிவருவதில் இருக்கும் முக்கிய தடங்கல் கூடவே ஓய்வற்ற இடையறாத போராட்ட வாழ்வு விடயங்களைத் தொகுப்பதில் தாமதத்திற்கு மற்றைய காரணி. இது களையப்பட்டு இவனின் சிந்தனைகள் தொகுதிகளாக வரவேண்டும் என்பதே என் ஆவல் பலரும் இணைந்து செயற்படுத்த வேண்டிய விடயம். முயல்வோம்.