தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 உலக தோழமை தினம்.

தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 அன்றைய நாளை உலக தோழமை தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஈழத்தில் ஆய்தப்போராட்டம் முனைப்பு பெற்றபோது தோழர் நாபா அவர்கள் ஆய்தக் கலாச்சாரத்தில் உடனடியாக இறங்கவில்லை. போராட்டத்திற்கான நியாயத்தன்மைகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.எமது ஈழப்பிரதேசத்தின் எல்லை எங்கும் மக்களைச் சந்திதார். இதனைவிட தெற்கிலும் சிங்கள முற்போக்கு சக்திகளிடமும் சென்றார் அவர்களை அணிதிரட்டினார். அவர்களோடும் கைகோர்த்தார். அவர்ன் தீர்க்கதரிசனத்தை இன்று எம்மால் உணரமுடிகிறது. இலங்கையின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களை அணுகுவதைத் தவிர்த்து ஒரு துரும்பையேனும் நகர்த்த முடியாது என்பதை அப்போதே உணர்ந்துகொண்டார்.ஆரம்ப ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பான ரி எல் ஓ அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தவேளை மாற்று அமைப்பு ஒன்றின் தலைமை எடுத்த மாத்திரத்தில் தமிழ்த் தலைமைகளை கொலை செய்ய ஆரம்பித்தார்கள். இதன் அடிப்படையிலேயே அல்பிரட் துரையப்பா ஆலால சுந்தரம் ,தர்மலிங்கம் இன்னும் பலர் ஆயுதமேந்திய குழுக்களால் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் நாபா அந்த ஹீரோயிசத்திற்கு எடுபடாமல் நிதானமாகவே தன்னையும் தோழர்களையும் வழிநடத்தினார். பின்னர் ஈரோஸ் எனற அமைப்பின் மாணவர் அமைப்பினூடாக(gues)அர்சிற்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்.
ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொன்டபோது பலஸ்தீன பயிற்சிமுகாம்களிலும் அர்சியல் பாசறைகளிலும் தன்னையும் தோழர்களையும் தயார்ப்படுத்திக்கொண்டார். பின்னர் ஈரோஸ் அமைப்பின் மந்தமான செயற்பாடுகளை விமர்சனம் செய்துகொண்டு வெள்யேறி ஈ பி ஆர் எல் எஃப் என்ற அமைப்பினை ஆரம்பித்துச் செயல்ப்பட்டார்.

தோழர் நாபா சிறந்த தலைமை கொடுக்கக்கூடிய ஆளுமைமிக்க ஒருவராகக் காணப்பட்டார். சர்வதேசத் தொடர்புகளை போராட்ட அமைப்புக்களோடு வைத்திருந்தார். பால்ஸ்தீனம், கொங்கோ,சிலி போன்ற நாடுகளின் முற்போக்கு போராட்டத்தலைமைகளோடு தனது தொடர்புகளை பாதுகாத்து வந்தார். எங்கு மக்கள் ஆளும்தரப்புக்களால் ஒடுக்கப்படுகிறார்களோ அதற்கெதிராக தயக்கமின்றி குரல் கொடுப்பார்.
அவர் அடிக்கடி தோழர்களிடத்தில் சொல்லும் வாசகம் நீங்களே அடுத்தகட்டத் தலைமைக்கு உங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பார்.

ஒரு தலைமையை ஏற்று நடத்தக்கூடிய ஒரு ஒழுக்கசீலனாகவும் திகழ்ந்தார். ஒழுக்கம் என்பது இன்னும் ஒருவரால் கொடுக்கப்படும் கட்டுப்பாடல்ல. அது தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்ளும் உணர்வுதான் ஒழுக்கமாகும்.

மக்களின் அமைதிக்காகவே இந்திய அரசோடு கைகோர்த்தார். பூகோள அரசியலை நன்குணர்ந்தவர்.அதற்கமையவே வடக்கு கிழக்கு இணைந்த தீர்வுத்திட்டத்திற்கு உடன்பட்டார். அவருடைய தீர்க்கதரிசனம்..” மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம்” இன்று எல்லோருக்கும் அது நன்கு புலப்படுகிறது.

(Gneshaligam)