1978 இல் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தங்களைத் தொடர்ந்து வடக்கிலிருந்து தோழர் பத்மநாபாவினுடைய தலைமையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்ற குழுவினருடன் இனைந்து பணியாற்றியவர்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைகளை அமைத்துக்கொடுத்தல் மாணவர்களின் கல்வியை மேம்படுததுதல் போன்ற செயற்பாடுகளினூடாக மக்களினூடான உறவை ஆழப்படுத்தியவர்.
இதன் தொடர்ச்சியாக ஈழமாணவர் பொது மன்றம் (GUES) ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.தனது உயர் கல்வியைத் துறந்து EROS என்னும் அமைப்பில் முழுநேர ஊழியராக செயற்பட்டார். EROS இயக்கத்துக்குள் எழுந்த தத்துவார்த்த மற்று நடைமுறை சார்ந்த விடயங்களின் முரண்பாடுகளினால் 1981 ம் ஆண்டு தோழர் நாபா தலைமையில் EPRLF என தம்மை அடையாளப்படுத்தி வேலைசெய்ய ஆரம்பித்தபோது தோழர் பாலாவும் தன்னை EPRLFஉடன் இனைத்துக்கொண்டார்.
1981ம் ஆண்டு மட்டக்கிளப்பிலுள்ள சத்துருக்கொண்டான் என்னுமிடத்தில் நடைபெற்ற EPRLF இன் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருத்தரங்கின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக சிறப்பாக பணியாற்றினார். அக்கருத்தரங்கை அரசபடைகள் சுற்றிவளைத்து பல தோழர்களை கைது செய்தபோது தோழர் நாபா அவர்களை அக் கைதிலிருந்து தந்திரமாக மீட்டெடுத்து காப்பாற்றினார்.
அவர் மக்களுக்கான தனது அரசியல் பணியை பெரும்பாலும் கால் நடைகளினூடாகவே செய்துவந்தார். அன்று கட்சியில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளை தமது எழிமையான வாழ்கையூடாகவே அற்பணிப்புடன் செயற்பட்ட தோழர்களில் தோழர் பாலாவும் முதன்டையானவர். EPRLF இற்கு மட்டு- அம்பாறை பிராந்தியத்தில் பலமான அரசியல் தளத்தை கடியமைத்ததில் தோழர் சிவா (கல்லாறு) தோழர் குமார்(தம்பிலுவில்) போனறவர்களுடன் தோழர் பாலாவுக்கும் முக்கியபாத்திரமுண்டு.
அவருடைய முழுக் குடும்பமுமே தம்மை போராட்டத்துடன் முழுமையாக ஈடுபடுத்தியவர்கள்.அங்கு கட்சியினுடைய பல செயற்பாடுகள் நடைபெற்றதுண்டு. பல தோழர்கள் தங்கிச் சென்றதுண்டு. தமிழ் நாட்டில் 1984ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசிலும் பங்குபற்றி கட்சியின் மீதான தத்துவார்த்த மற்றும் நடைமுறை சர்ர்ந்த விடயங்களில் தனது காத்திரமான பங்களிப்பனை வளங்கியிருந்தார்.மட்டு- அம்பாறை பிராந்தியக் கமிட்டியின் பொறுப்புமிக்க செயற்பாட்டாளராக செயற்பட்டார்.
மிகவும் இரானுவக் கெடுபிடிகள் மிகுந்த காலமான 31.05.1985ம் ஆண்டு அரசியல் பணிநிமித்தம் தோழர்களுடன் கட்டுமுறிவு (மட்டு மாவட்டம்) என்னும் காட்டுப்பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கும்போது தோழர் பாலா அவர்கள் பாம்பு கடிக்கு இலக்கானார்.அவருடன் பயனித்த தோழர்கள் அவரை வைத்தியரிடம் கொண்டு சென்று சிகிச்சையை மேற்கொண்டபோதும் வைத்தியம் பலனளிக்காமல் அவர் மரணத்தை தழுவிக்கொண்டார். தோழருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். பத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனி