வவுனியா மாவட்டத்தில் பிறந்த இன்பராசா என்னும் இயற்பெயருடைய தோழர் றேகன் 23.11.1985ம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர்
பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாக தனது அரசியல் பணியை ஆரம்பத்தவர் . மக்களின் மீதும் மண்ணின் மீதும் அளவுகடந்த நேசத்துக்குரியவராகவிருந்தார். அதற்காக தன்னுடைய பல்கலைக்களக பட்டப்படிப்பையும் தூக்கியெறிந்து விட்டு பெற்றோர்கள் உயர்கல்வியை கற்பதிற்கு தேவையென கொடுத்த பணத்துடன் தன்னை போராட்டத்துடன் முழுமையாக இனைத்துக்கொண்டவர்.
EPRLF இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் இனைந்து இராணுவப்பயிற்சியைப் பெற்று மேலதிக சிறப்புப் பயிற்சிக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கமொன்றின் பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்திருந்தார்.அதன்பின்பாக கட்சியினால் வன்னி பிராந்திய இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டார் .மக்கள் விடுதலைப் படையை பலப்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தலைமைதாங்கினார்.
இவ்வகையான நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியிலும் ஏனைய போராட்ட அமைப்புக்கள் மத்தியிலும் தோழர் றேகனின் செயற்பாடுகள் ஒரு மதிப்பை உருவாக்கின. ஆனால் புலிகளுக்கோ இவ்வகையான விடயங்கள் உவப்பாக இருக்கவில்லை. வவுனியாவிலுள்ள உதயா அரிசி ஆலையில் நடைபெற்ற தகறாறு ஒன்றில் புலிகள் ஆலை முதலாளிக்கு சார்பாக நடந்துகொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக தோழர் றேகன் வஞ்சகமான முறையில் மாத்தையா தலைமையிலான புலிகளினால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தோழர் றேகன் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் TELO. EROS. LTTE. .EPRLF ஆகிய நான்கு அமைப்புக்களும் ENLF என்னும் கூட்டு முன்ணணியில் இனைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் படுகொலை தொடர்பாக EPRLF தளபதிகளில் ஒருவரான தோழர் கபூர் அவர்கள் மாத்தையா அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற
போது மாத்தையா அவர்கள் கூறிய பதில் . .இங்கே ஒரு இயக்கம்தான் இருக்கமுடியும்.என்பதுதான்.இவ்வகையான போக்குக்களே தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு போனமைக்கு முக்கிய காரணமாகும் . தோழர் றேகனுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.