நம்பிக்கையுடன் இந்த மாற்றத்தை எதிர் கொள்வோம்

பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த இரு போக்கு பெரும் தேசியவாவாத கட்சிகளின் ஆட்சிகளின் மீதான வெறுப்பு, நம்பிக்கையீனம் போன்றவை இந்த மாற்றத்தை புதிய போக்குடைய கட்சி என்பதாக தேசிய மக்கள் சக்தியிற்கு வாக்களித்து அனுர குமார திசநாயக்காவை வெற்றி அடையச் செய்திருக்கின்றது.

மாறாக அவர்கள் எப்படியான கொள்கைகளை கொண்டிருக்கின்றார்கள் என்பதை மாற்றத்தை விரும்பியவர்கள், மக்கள் அதிகம் உற்று நோக்கவில்லை என்பது உண்மை.

ஆனால் இதுவரை இருந்த ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம், இனவாதம், மதவாதம் போன்ற மக்கள் விரோத செயற்பாட்டிற்கான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தியால் வழங்கலாம் என்று மக்கள் நம்பினார்கள்.

இது அவர்களின் கொள்கைகளாக இருக்கும் என்பதை மறைமுகமாக தெரிந்திருப்பதாக அல்லது ஏற்றுக் கொண்டதாக எடுக்கலாம்தானே…?

இங்கு தேசிய மக்கள் சக்தியினர் இடதுசாரிக் கருத்தியலை(இதனை தேசிய மக்கள் சக்தியே அதிகம் சொல்லாடல்கள் மூலம் வெளிப்படுத்தவில்லை என்பதுவும் இங்கு கவனத்தில் எடுத்ததாக வேண்டும்) உடையவர்கள் என்று மக்கள் அதிகம் பார்க்கவில்லை.

ஆனால் இந்த தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பில் இணைந்திருந்து 10 இற்கும் மேற்பட்ட கட்சிகள் அவை சிறியனவாக மக்கள் கருதினாலும் அவை அதிகம் இடதுசாரிக் கருத்தியலைக் கொண்டவர்கள் என்பது இங்கு கவனத்தைப் பெறுகின்றது.

தற்போது இந்த இடதுசாரிக்கருத்தியல் என்பதை நாம் சற்று பின்தள்ளி சகல மக்களுக்குமான நியாயமான ஆட்சியைத் தருவார்கள் என்று மக்கள் நம்பும் சிந்தனையை முன்னுக்கு நகரத்தியே இந்தத் தேர்தல் வெற்றியை நாம் பார்ப்பதே சரியானது.

கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் புதிய ஆட்சியின் செயற்பாடுகள் நம்பிக்கை தருபவனவாக இருக்கின்றன.

சிறப்பாக அநாவசிய செலவினங்களைக் குறைத்தல்… இது பதவி ஏற்பில் கைகொண்ட எளிமையில இருந்து ஆரம்பித்தது….

மக்களுக்கான வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதற்காக கல்வி, உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் உள்ள வரிகளை இல்லாமல் செய்தல் அல்லது குறைத்தல் என்பதான அறிவித்தல்களை குறிப்பிடலாம்.

உணவுப் பொருட்களில் விலைகளை குறைத்தல் என்பது வெதுப்பகத் தயாரிப்புகளில் முட்டை விலை குறைவால் ஏற்பட்ட (தற்செயலாகக் கூட இருக்கலாம்..?) விலைக்குறைப்பு…

உற்பத்தியை ஊக்கிவிக்க விவசாயிகள், கடற்தொழிலாளர்களுக்கான மானிய அதிகரிப்பு என்பதாக அவதானிக்க முடிந்தது.

மேலும் ஆணை பிறப்பிக்காமலே காலி முகத்திடலில் அரசியல்வாதிகள் அரச திணைக்கழகங்களின் ஆடம்பர வாகனங்கள் தாமாக கொண்டு வந்து ‘ஒப்படைப்பு’ என்பது இந்த அரசின் மீதான சம்மந்தப்பட்டவர்களின் ஆணை இடாக் கட்டளைச் செயற்பாடாகவும் பார்க்க வைக்கின்றது.

கூடவே தேர்தலால் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்று வந்த அதி விசேட சலுகைகள் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தல் என்பதான தீர்மானமும் விசேட கவனத்தை பெறுகின்றது.

இது தேவையான சரியான நடவடிக்கை.

கூடவே குற்றச் செயல்களில் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள், திணைக்கள அதிகாரிகள், ஏனையவர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்குரிய கண்காணிப்பை விமான நிலையம் மூலம் ஏற்படுத்தியதும் சிறப்பு.

இத்துடன் இலங்கையிற்கு வருவதற்கான விசா அனுமதியை தனியாருக்கு வழங்கிய புதிய முறமையை நிறுத்தி அரசின் பழைய முறமையை மீண்டும் உடனடியாக அறிமுகப்படுத்தியது இலங்கை வரும் சகல தரப்பினருக்கும் ஏற்புடையதாகவும் இலங்கை அரசிற்கு நற்பெயர் சீரான வருமானத்தை தருவதான முடிவை உடனடியாக அமுலுக்கு கொண்டு வந்தது மிகச் சிறப்பானவை.

மாகாண சபைகளின் கவனர்கள், திணக்களங்களின் தலைவர்கள் தாமாக பதவி விலகி சூழலில் அவற்றிற்கான நியமனங்களில் திறமையான, சரியான, நேர்மையானவர்களை நியமித்திருப்பது மிகச் சிறப்பு.

அதனையும் தாமதியாது செயற்படுத்தியிருப்பது புதிய அரசின் வினைத் திறனை, செயற் திறனைக் காட்டி நிற்கின்றது.இ

வை அனைத்தையும் இலங்கையில் ஏற்கனவே இருந்த அரசியல் அமைப்புச் சட்டம், நிர்வாக இயந்திரம், பாதுகாப்புப் படைகளைக் கொண்டுதான் செயற்படுத்தி முனைவதினால்(இதுதான் தற்போது உடனடிச் சாத்தியம்) இவற்றை நாம் சீர்திருத்தமாகவே…? பார்க்க முடியும்.

இவற்றை ஒரு மாற்றத்திற்கான முதல் அடியாக எடுத்துக் கொள்வதை விட சீர்திருத்தமாக பார்ப்போம்.

ஆனால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் திகதியை அறிவித்தது சிறப்பானது.

அப்போதுதான் புதிய சட்டவாக்கம், திருத்தங்களை பாராளுமன்றத்திற்கு ஊடாக ஏற்படுத்தி சீர்திருத்தங்களுக்கு அப்பால் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட சட்டவாக்க செயற்பாடுகளை சிறப்பாக செய்ய முடியும்.

எனவே நாம் காத்திருக்க வேண்டும்…. அது வரைவெற்றியிற்கு பின்பு தனக்கு வாக்கு அளிக்காத மக்களுக்குமான நாட்டின் தலைவராக தான் செயற்பட போவதான அறிவிப்பு வெறும் அறிவிப்பாக பார்காமல்…..

சிறப்பாக வடக்கு கிழக்கு (ஏன் மலையகத்தையும் கூறலாம்) அடையாளப்படுத்தக் கூடிய பிரதான நீரோட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எவரும் அனுர குமார திசநாயக்காவிற்கு தேர்தலில் ஆதரவளித்து செயற்படாத நிலையில் இனி நிலமைகளை புரிந்து கொண்டு மாற்றம் ஒன்றிற்காக சிங்களப் பெரும்பான்மை மக்கள் வந்த முடிவு போல் செயற்படுவதே சரியானதே என்பது என் பார்வை.

இதற்குள் குறிப்பாக இடதுசாரி ஜனநாயக சமூக நீதிக்கருத்தகளை சுமந்து செல்லும் கட்சிகள் தமது நிலைப்பாட்டை உறுதியாக எடுத்து இந்த மாற்றத்திற்கான உண்மையான அர்த்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில் இவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் செயற்பட்டாக வேண்டும்.பெரும் தேசியம்(சிங்களம்) பேசுபவர்களும், குறும் தேசியம்(தமிழ்) பேசுபவர்களும் தமது பழைய பாணியில் செயற்பட்டு கதிரைகளை நிரப்புவது இலகு என்பதினால் அவ்வாறே இனியும் பயணிக்க முயலுவர்.

இதனை நாம் தேர்தல் முடிந்த உடன் வெளி வந்த தமிழ் தரப்புக் கருத்துக்களை கொண்டு அதிகம் அறிய முடிகின்றது.

அது கிழக்கில் பிரதேசவாத்திற்கு அப்பால் சென்று சண்டித்தனமாகவும் அறை கூவல் விடுத்திருக்கின்றது.

தேசிய மக்கள் கட்சியிற்குள் பிரதான இடம் பெறும் ஜேவிபி சம்மந்தமான விமர்சனங்கள் 1970 களில் இருந்து இன்று வரை உண்டு…

இதனை வைத்துக் கொண்டு மாற்றத்தை உருவாக்க முயலும் NPP செயற்பாட்டை நாம் குழப்புவது முன்னோக்கிய பாய்ச்சலுக்கு உதவாது.

இது இலங்கையில் இடதுசாரி, சீனசார்பு அரசு ஏற்பட்டிருக்கின்றது என்றாக மேற்குலகமும், இந்தியாவும் சிறப்பாக தமிழ்நாட்டில் உள்ள சிலரும் புதிய அரசை வீழ்த்துவதற்கு சந்தர்பம் பார்த்திருக்கும் விடயங்களுக்கு உதவிகரமாக அமையும்.

இதனைத்தான் நாம் ‘அரகலய’ இற்கு பின்னரான ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தெரிவிலும் அண்மைய பங்களாதேஷ் நிலமையிலும் பாகிஸ்தான், நோபாளம் என்தாகவும் கண்டோம்.

சில வருடங்களுக்கு முன்பு அரபு வசந்தித்திலும் கண்டோம்.

மாற்றத்தை மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும் அது தேரிய மக்கள் சக்தியினால் மட்டும் அல்ல.

தொடர்ந்தும் பேசுவோம்…..