மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை தரும் வார்த்தைகளை உதிர்திருக்கின்றார் சந்திரிகா குமாரரணதுங்க பண்டாரநாயக்கா. “…இலங்கையில் உள்ள இரு பெரும் பெரும்பான்மைக்ட கட்சிகள் இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகியும் தமிழர்களின் அரசசியல் பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறிவிட்டனர் மாறி மாறி ஆட்சிக்குவரும் போது ஒருவர் தீர்வுகளை முன்வைக்கும் போது மற்றயவர் எதிர்ப்பதன் மூலம் இது நடைபெற்றது. தற்போது இரு பெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருப்பது தமிருக்கான தீர்வை வழங்க வாய்ப்ப ஏற்பட்டிருக்கின்றது….” என்ற விடயத்தை இது தவறும் பட்சத்தில் காரணம் கூறமுடியாத விடயம் இங்க ஒழித்திருக்கும் என்பதை தனது நம்பிக்கையும் நம்பிக்கையீனத்தையும் இணைத்து குற்றம் சாட்டும் பாணியிலிருந்து தவிர்த்து யதார்தத்தை கூறியுள்ளார்.
முதல் தடவையாக ஜனாதிபதியாக தேர்தலில் நின்றபோது நல்லூர் திருவிழாவில் சந்திரிகா காப்பு என்று கூவி விற்கும் அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டியவர் அதற்கு பங்கம் விளைவிக்கால் இந்திய மாநில சுயாட்சியை விட அதிகாரம் கூடிய மாநில சுயாட்சி அதிகாரப் பரவலை கொண்டுவரும் அரசியல் வரைபை நீலன் திருச்செல்வம் கேதீஸ்வரன் போன்றவர்களின் உதவியுடன் முன்வரைந்து இதனை பாராளுமன்னத்தில் தாக்கல் செய்தவர். இதனை தாக்கல் செய்யமுன்பு தமிழர் தரப்பை அதுதான் சம்மந்தரை அழைத்து பாராளுமன்னத்தில் இதனை சமர்பிக்கும் போது ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரி ஆம் என்ற பதிலை பெற்றவர். ஆனால் பாராளுமன்றத்தில் முன்வைத்த போது இதே ரணில் விக்ரமசிங்க இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதன் பிரதியை எரித்தபோது இதற்கு ஆதரவாக சம்மந்தன் குழுவினர் செயற்பட்ட சம்பங்கள்எல்லாவற்றையும் மாற்றப் போட்டுவிட்டது.
இந்த நம்பிக்கை தரும் அவரின் செயற்பாட்டடை நாம் எமக்கு சாதகான முறையில் எடுத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறுவதில் நாம் இராஜதந்திர ரீதியில் நகரவேண்டும் என்பதே என் அவா. மாறாக புலிகளின் கட்டுப்பாடடில் இருந்த யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றயவர் என்று வன்மத்துடன் இன்னமும் வண்டியைஓட்டநினைத்தால் சந்திரிகாவின் தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் எரிப்புஇ ஒஸ்லோ தீர்வு, இலங்கை இந்திய ஒப்பந்;தத்துடன் கூடிய இணைந்து பொலிஸ் மட்டுப்படுதப்பட்ட காணி அதிகாரம் போனறவற்றால் எமக்கு கிடைத்ததை நாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டதைப் போல் இன்று வடக்கும் கிழக்குமாய் பிரித்து…. கிழக்கை பறிகொடுத்து வடக்கில் மட்டும் சுய இன்பம் காணும் நிலமை யாழ்பாணத்திற்குள் என்று எதிர்காலத்தில் சுருங்கிப் போவதை யாராலும் தடுக்க முடியாது