குறிப்பாக மாலைதீவுக் கடலில் இந்திய ராடர் கருவிகளைப் பொருத்தி சீனக் கப்பல்களைக் கண்காணிப்புச் செய்வது முக்கியமான ஒப்பந்தமாகும். மோடியின் மாலைதீவு, இலங்கைப் பயணங்களில் பல வியூகங்கள் உண்டு.
சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பூகோள அரசியல் செயற்பாடுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் செயற்படுவது போன்று தம்முடனும் நேரடியாக அணுக வேண்டுமென எதிர்பரா்க்கின்றது. ஆனால் நரேந்திர மோடி அரசு அதனை ஏற்காது- அமெரிக்காவும் இந்தியாவைத் தாண்டி அவ்வாறு இலங்கையுடன் பூகோ அரசியல் தொடர்புகளைக் கையாள விரும்பாது
பூகோள அரசிலுக்குள் சிக்குண்டுள்ள மாலைதீவு, இந்தியாவைப் புறம் தள்ளி சீன அரசோடு தனது உறவை வளர்த்துக் கொண்டிருந்தது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா ஜாமீன் சீனாவுடன் நெருக்கமாகிப் பெருமளவு பணத்தையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்ற 2018 ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து மாலைதீவில் தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது.
தேர்தலில் இப்ராகீம் முகமட் வெற்றிபெற்று மாலைதீவில் ஆட்சியமைத்தார். அதன் பின்னர் உடனடியாகவே புதுடில்லிக்கு அழைத்த நரேந்திர மோடி, தனது மாளிகையில் அவரைத் தங்கவைத்து உறவை நெருக்கமாகக்கிக் கொண்டார்.
பொதுவாக இந்தியப் பிரதமரைச் சந்திக்கச் செல்லும் வெளிநாட்டுத் தலைவர்கள் எவரும் பிரதமரின் சொந்த மாளிகையில் தங்கவைப்படுவதில்லை. அந்த மரபுக்கு மாறாக மாலைதீவு ஜனாதிபதி இந்தியப் பிரதமரின் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார்.
ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிரதமராக நியமித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், அதன் பின்னரான அரசியல் சூழ்நிலைகளின்போதும் நரேந்திரமோடி இலங்கையோடு எந்தவொரு அரசியல் அணுகுமுறைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.
மாறாக, இலங்கையில் ஒக்ரோபர் மாதத்தில் இருந்து ஐம்பத்தியொரு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற அரசியல் குழப்பங்களையும் அதன் பின்னரான சூழலையும் புதுடில்லி தூர இருந்து அவதானித்துக் கொண்டிருந்தது.
மாலைதீவைப் போன்று இருக்க இலங்கை பழக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையான செய்தியை கொழும்பில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு சொல்வதாகவே நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது
இந்த நிலையில், இலங்கையில் ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கையுடன் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஏட்டிக்குப் போட்டியாகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு உடன்பாடானதல்ல.
இவ்வாறானதொரு நிலையில், மாலைதீவைப் போன்று இருக்க இலங்கை பழக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையான செய்தியை கொழும்பில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு சொல்வதாகவே நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது.
மாலைதீவு ஜனாதிபதியுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது போன்று இலங்கை ஜனாதிபதியுடன் ஒப்பந்தங்கள் எதுவுமே செய்யப்படவில்லை. ஆனால் இந்துமா சமுத்திரப் பாதுகாப்பு, இஸ்லாமிய இயங்கங்களின் தாக்குதல்களை தடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நரேந்திரமோடி மைத்திரிபால சிறிசேனவக்கு இடித்துரைத்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேவேளை, தென் சீனக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. தென்சீனக் கடற் பகுதி, சீனாவுக்குச் சொந்தமில்லை என்பது இந்திய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு.
ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவப் பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன
ஆனால், அதனைச் சீனா ஏற்க மறுக்கின்றது. தாய்வான் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையேயான கடற்பிரதேசம் ஊடாகத் தற்போது அமெரிக்கப் போர்க் கப்பல்களும் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களும் சென்று வருகின்றன.
எனினும் இந்தக் கடற்போக்குவரத்துக்கள், சர்வதேச விதிகளை மீறியதாகவே சீனா கருதுகின்றது. ஆனாலும் இந்தக் கடற்பயணத்துக்கு நரேந்திர மோடி அரசும் மறைமுக ஆதரவு கொடுத்துள்ளது. எனவே தாய்வான் கடற்பரப்பின் ஊடாக அமெரிக்கப் போர்க் கப்பலகள், எண்ணெய்கப்பல்கள் சென்று வரலாமென்றால், இந்திய- இலங்கைக்கு இடையேயுள்ள பாக்குநீரினையால் ஏன் சீனாவின் கப்பல்கள் பயணிக்கக் கூடாதென சீனா கேட்கக் கூடிய நிலையும் உண்டு.
இதனால், சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுகின்ற சிங்கள ஆட்சியாளர்களுக்கான மற்றுமொரு எச்சரிக்கையும் நரேந்திரமோடி தனது பயணத்தின் மூலம் இலங்கைக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.
குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நான்கு மைய அணிகளுக்கிடையேயும் இராணுவ இரகசியங்களை ஒரேவிதமாகப் பரிமாறும் தொழில் நுட்பம், ஒரே வகையான கடற்படைத் தளங்களையும் போர் விமானங்களையும் பயன்படுத்தக் கூடிய நெருக்கமான அணியாகச் செயற்படும் வகையில் குவாட் அமைக்கப்பட்டுள்ளது
இந்த இராணுவ அணியோடு இணைந்து தென்னிந்தியக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நகர்வுகள், அற்கான செயல்திட்டங்களை வகுத்தல் போன்ற பொறுப்புக்களை அமெரிக்கா, நரேந்திர மோடி அரசிடம் கையளித்துள்ளது. சுருக்கமாகக் கூறுவதானால் தென்னிந்திய கடற்பகுதிகயை அண்டிய அமெரிக்காவின் பொலிஸ்காரனக மோடியின் இந்தியா ஏலவே மாறிவிட்டது.
இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பூகோள அரசியல் செயற்பாடுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் செயற்படுவது போன்று தம்முடனும் நேரடியாக அணுக வேண்டுமென எதிர்பார்கின்றது, விருப்பமும் உண்டு.
ஆனால் நரேந்திர மோடி அரசு அதனை ஏற்காது- அமெரிக்காவும் இந்தியாவைத் தாண்டி அவ்வாறு இலங்கையுடன் பூகோள அரசியல்த் தொடர்புகளைக் கையாள விரும்பாது. ஆனாலும் அமெரிக்காவின் தெற்காசிய இராணுவ விவகாரங்ளுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் கடந்த வாரம் கொழும்புக்கு வந்து இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன் பின்னணியிலேதான் நரேந்திர மோடியின் இலங்கை வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு கொழும்பில் நடந்த எட்டு நிமிடச் சந்திப்பில் விடுக்கப்பட்ட அழைப்பையும் நோக்க வேண்டும்.
(கூர்மை)