தோழமை என்றொரு சொல்

தோழமை என்பது குறிப்பாக சமூக லட்சியம் சார்ந்த உறவு முறை
மறைந்த தோழர் ஜெயகாந்தன் அவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்த ஒரு எழுத்தில் நான் தேநீர் எடுத்துச் செல்லும் சிறுவனாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது பொதுவுடைமை இயக்க முன்னோடி தலைவர்கள் எல்லாம் என்னை பக்கத்தில் அமர வைத்து தோழரே என்றார்கள். நெகிழ்ச்சியுடன் இவ்வாறு நினைவுகூருவார்.