(வி.சிவலிங்கம்)
உலகம் முழுவதையும் கோவிட்-19 நோய் உலுக்கி வரும் நிலையில் உலக திறந்த சந்தைப் பொருளாதாரமும் இறுகிப் போயுள்ளது. உலகிலுள்ள அரசுகள் பல தமது பொருளாதாரத்தை எவ்வாறு இயக்குவது? என்பதில் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளன. முதலாளித்துவ நாடுகள் பல தமது சேமிப்பின் பெரும்பகுதியை தத்தமது பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் தடுக்கும் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் சேமிப்பு அற்று ஏற்றுமதி வருமானத்தில் தங்கியிருந்த இலங்கை போன்ற நாடுகள் கடன்களுக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.