முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2017 என்பது தமிழர்கள் தமக்குள் நுள்ளுப்படுவதையும்¸ ஒரு விடயத்தை ஒழுங்கமைக்கும் வல்லமை இல்லாதவர்கள் என்பதையும்¸ இழந்த மக்களின் ஆத்திரத்தையும் வெளிக்காட்டிய நிகழ்வாகும். இன்னோர் வகையில் கூறுவதானால் சாவீட்டைக்கூட ஒழுங்காக அனுஷ்டிக்க முடியாத நிலையில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
அங்கு நடந்தவற்றை ஒரு நேர்முக வர்ணனை செய்தால்… “2009 இல் கொலைக்களமாக இருந்த முள்ளிவாய்க்கால் நிலம் வெறும் தரிசு நிலமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வெய்யிலிரும்¸ காற்றிலும் வரட்சியிலும் தமது உறவுகளை இழந்து எஞ்சியிருக்கும் ஒரு சிலர் வந்திருந்தாலும் அவர்களிடம் அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை.
காயப்பட்டவர்கள்¸ மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள் (வுசயரஅய) நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் என மக்கள் ஏதிலிகளாக அலைந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது.
தமது இழந்த உறவுகள்¸ காணாமல் ஆக்கப்பட்டவர்களை யாரோ கூட்டிவரப்போகிறார்கள் என் எதிர்பார்ப்பில் பிரதான வீதியைப் பார்த்தவண்ணம் அந்த வெய்யிலில் மக்கள் காத்திருப்பதைக் காணமுடிகிறது.
50000 மக்கள் அளவில் இந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டார்கள். ஆனால் 100 குடும்பத்தவர்கள் கூட அதில் கலந்திருக்கவில்லை என்பது இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த அவலம் நடந்து 08 வருடங்களின் பின் தமிழ்க் கூட்டுரைத்த அமைப்பின் தலைவர் சம்பந்தன் தனது சொகுசு வாகனத்தில் வந்து இறங்குகின்ற கண்கொள்ளாக் காட்சியைக் காணமுடிகிறது.
அவர் முள்ளிவாய்க்காலுக்கு வந்து இறங்க முன்பு அரசாங்கம் கொடுத்து ஏசி வாகனத்துக்குள் இருந்து என்ன நினைத்திருப்பார் என்று பார்த்தால்¸ “மகிந்த ராசாவே உனக்கு எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
நீர் 2009 இல் யுத்தத்தை நிறுத்தியிராவிட்டால் எங்கோ ஓர் மூலையில் கோயிலுக்குத் தலைவராக இருந்திருப்பேன். புலிகள் இல்லாத ஒரு புனித பூமியை எங்களுக்குத் தந்தவன் நீ. ஏங்களுக்கு எதிரி சிங்களவன் அல்ல புலிகள் தான். தளபதி அமிர்தலிங்கம்¸ தர்மலிங்கம்¸ ஆலாலசுந்தரம்¸ யோகேஸ்வரன் போன்று எங்களையும் போட்டுத் தள்ளியிருப்பர். ஏங்கள் உயிர்காத்து¸ இப்படியொரு கௌரவமான பதவியிலிருக்க வித்திட்ட அம்பாத்தோட்டைத் தெய்வமே¸ மகிந்த ராசாவே! நீ நீடூழி வாழ்க”
பிரதான வீதியில் ஒரு கோடிக்கு முன் பின்னான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வெள்ளை வேட்டியுடன் பிணங்கள் எழுந்து நடந்து வருவதைப்போல (மூக்கில் பஞ்சும்¸ கண்களில் சந்தணமும் இல்லாதது தான் குறை) மிகவும் துன்பப்பட்டு விளக்குக் கொழுத்தும் இடத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
வெய்யிலில் விளக்கு ஏற்றும் இடத்தில் கோயிலில் பஞ்சாமிர்தம் வழங்குபவர்கள் போல ஊடகக்காரார் சுற்றிநின்று இழந்த மக்கள் அந்தச் சுடலைக்கூட கண்டுவிட முடியாதபடி ஒரு மனிதவேலி போடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
இதற்கிடையில் இழப்பைச் சந்தித்த ஒரு பெண் தமிழ்த் தலைவர்களை இவ்வாறு வாழ்த்திக்கொண்டிருந்தார்.
“முள்ளிவாய்க்கால் எங்கட சனம் செத்த இடம்¸ நாங்கள் வாழ்ந்த இடம்¸ சமைத்துச் சாப்பிட்ட இடம்¸ இந்த இடத்தில வந்து நீங்கள் அரசியல் பேசக்கூடாது¸ சரியா.
வணக்கம் செலுத்தவேண்டுமென்டா விளக்க கொழுத்துங்கோ… செத்த ஆக்களுக்கு அஞ்சலி செலுத்துங்கோ.. ஆனால் அரசியல் பேசுவதற்கு இது இடமில்லை. ஒருத்தரும் உரையாற்றக்கூடாது…”
இந்த ஒழுங்கமைப்பை பார்க்கிறபோது விடுதலைப் புலிகளின் சிவப்பு¸ மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அதே கொடிதான் தமிழரசுக்கட்சியின் கொடிகளும்.
இரண்டும் கலந்த க லவையாக ஏற்பாட்டாளர்கள் குழைத்திருக்கிறார்கள்.
ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்து விளக்கேற்றலோ¸ மலர் அஞ்சலி செய்வதோ இங்கு இல்லை. நாலு முடிச்சு தும்புக் கயிறு எடுத்து¸ கடற்கரையில் நாலு தடி எடுத்து கட்டமுடியாத அவசர ஏற்பாடு இது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவசரமாக விளக்கேற்றப்படுகிறது¸ முதலமைச்சர் விளக்கேற்ற¸ சம்பந்தன் கற்பூரம் எறிய¸ எங்கோ அலறுகின்ற தெளிவில்லாத ஒலிபெருக்கியில் ஏதோ பேசி¸ எல்லாம் திருவிழாவில் தொலைந்ததுபோல மக்கள் ஆத்தலைந்து திரிவதைக் காணமுடிகிறது.
இந்த வர்ணனையில் உறவுகள் கதறி அழுவதை ஊடகக்காரர்கள் யார் கூட அழுகிறார்கள் என்பதை போட்டி போட்டு மடக்குவதைக் காணமுடிகிறது.
அரசியல்வாதிகளுக்கு நல்லகாலம். ஊடகங்களுக்கு நல்ல தருணம். இழந்த மக்களுக்கு எதுவுமே இல்லை.
அரசாங்க சம்பளத்தில்¸ அரசாங்க சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு வெள்ளை உடை உடுத்த தமிழ்த் தலைவர்கள் எப்படி ஐயா அரசை எதிர்ப்பது? ஏப்படி அவர்களுக்கு மனம் வரும.
சம்பந்தனின் மிகச் சிறந்த நகைச்சுவை அந்த இடத்தில் கூறத்தவறவில்லை. “இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு¸ பரிகாரம் காணப்படவேண்டும். இதை யாருக்குச் சொல்கிறார் என்பதே கேள்வி. 08 வருடத்தின் பின் முதற்தடவையாக முள்ளிவாய்க்காலில் கால் பதித்து இப்படிக் கூறினால் மக்கள் குழம்பாமல் விடுவார்களா?
யார்¸ யார் விளக்கேற்றுவது எந்தப் பக்கத்தால் வந்து எந்தப் பக்கத்தால் வெளியேறுவது என்பதைக்கூட ஒழுங்குபடுத்த முடியாத ரவிகரன் – ஒலிவாங்கியில் நாலு பேர் வாங்கோ¸ நாலு பேர் வாங்கோ எனக் கத்தியது பாதிக்கப்பட்ட மக்கள் எங்கோ தூரத்தில் ஒதுங்கி நின்றார்கள் என்பதையே காட்டுகிறது¸
இந்தப் பொறுப்பினை 10 ஆம் வகுப்பு படிக்கிற பாடசாலை மாணவர்களிடம் கையளித்திருந்தால்¸ அவர்கள் மிக அழகாக ஒழுங்குபடுத்தியிருப்பார்கள்.
• அரசியல்வாதிகள் எங்கு நிற்பது¸
• ஊடகக்காரர் எங்கு நிற்பது
• மக்கள் எங்கு நிற்பது
• யார் எதைப் பேசுவது
என்பவற்றை சிங்களவரிடமிருந்தாவது¸ இனியாவது கற்றுக்கொண்டு நினைவேந்தலைச் செய்வது இறந்தவர்களுக்குச் செய்யும் கௌரவமாகும்.
அங்கு குழுமியிருந்த மக்கள் இவ்வளவுதூரம் சண்டைபிடிக்காமல் ஒவ்வொரு தமிழ்த் தலைவர்களிடமும் இறுதியாக முள்ளிவாய்காலில் நீங்கள் நிண்ட இடத்ததைக் காட்டுங்கள் என்று கேட்டிருந்தால்
சம்பந்தன் ….
விக்னேஸ்வரன் ….
சிறிதரன்…
ரவிகரன்…
சிவசக்தி ஆனந்தன் என எல்லோரும் தலைகுனிந்திருப்பார்கள்¸ வெளியேறியிருப்பார்கள். அப்படியொரு கனமான உணர்வு அவர்களுக்கு இல்லை.
பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் அல்லது உறவுக்காரர் என இறுதி யுத்தத்தில் நின்றவர்கள் மட்டுமே விளக்கேற்றியிருக்க வேண்டும். சம்பந்தனோ¸ விக்னேஸ்வரனோ¸ ஏனையவரோ பார்வையாளர்களாக நின்றிருக்கலாம். இந்தத் துயர தீபத்தை ஏற்ற அங்கு நின்றவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
“முள்ளிவாய்க்கால் ஆத்மா என்ற அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடலை ஒரு தடவை தமிழ்த்தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கேட்டால் அந்த விபரம் புரியும்.
1983 காலப்பகுதியின் பின்பு வடகிழக்கின் தமிழ் மக்களின் ஊர்களை இராணுவத்தினர் படிப்படியாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 2009 மே 19 இல் இறுதிக் கிராமமாக எஞ்சியிருந்த முள்ளிவாய்க்காலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
———————————————————-விக்னேஸ்வரன் எதைத் தொடங்கினாலும்¸ அதனை இல்லாத செய்து விடுவதில் அரசின் அம்புகளாக இருப்பவர்கள் சம்பந்தன்¸ சுமந்திரன்¸ சேனாதிராஜா போன்றவர்களே. வுடமாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைக் கட்டுவது என எடுக்கப்பட்ட முடிவு¸ இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலையை பச்சையாக ஆவணப்படுத்தும் அடையாளமாகிவிடும் என்பதால் அதைக் கட்டவிடாது தடுப்பதில் சம்பந்தன் சார அதிதீவிரமாக எப்போதும் இருப்பார்கள்.
(Puthiya Muhavary)