வெப்ப மண்டலத்திற்குரிய மரமான நாவல் மரம் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம், போன்ற தெற்காசிய நாடுகளிலும் மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது. கிராமப் புறங்களிலும் ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் தன்னிச்சையாக இந்த மரங்கள் வளர்ந்திருப்பதைக் காணலாம். முப்பது மீற்றர் உயரத்திற்கு வளரக்கூடிய இந்த மரமானது நூறு ஆண்டுகளுக்கு மேலான ஆயுளைக் கொண்டுள்ளது. இது இயல்பாக வளரக் கூடிய தன்மையினைக் கொண்டுள்ளது. இந்த மரம் செழித்துள்ள இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் எனக் கருதப்படுகின்றது.
நாவல் மரத்தின் மரப்பட்டை, இலை, பழம், விதை ஆகிய அனைத்தும் மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டதுடன் பல்வேறுபட்ட நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகின்றன. இதன் பயன்பாடு பண்டைக் காலத்தில் இருந்தே ஆயுள் வேத மருத்துவ முறைகளிலும், யுனானி மருத்துவத்திலும் சீன வைத்திய முறைகளிலும் இருந்து வருகின்றது.
இதில் நாவற்பழ விதையினைக் கொண்டு தயாரிக்கப்படும் கோப்பியானது நீரிழிவு நோயினைக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு அருமருந்தாப் பயன்படுகின்றது.
எங்களில் பலருக்கு காலைப் பொழுதின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக கோப்பி மாறியிப்பதை மறுக்கமுடியாது. கோப்பி அருந்துவது உடனடி உற்சாகத்தினைத் தந்தாலும் அதிலுள்ள கஃபைன் ஊக்கிப்பொருளானது அளவு கடந்து போகும் போது உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு எந்த விதமான இரசாயனக் கலப்பற்ற நாவல் கோப்பியினை அருந்துவதன் மூலம் காலை நேர உற்சாகத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாவல் கோப்பியானது தெரிந்தெடுத்துத் தூய்மையாக்கிய நாவல் விதைகளுடன், மல்லி, சின்னச் சீரகம், இஞ்சி, ஏலக்காய் போன்ற இயற்கை வாசனையூட்டிகளையிட்டுத் தயாரிக்கப்படுகின்றது. முற்று முழுதான இயற்கைக்ப் பதார்த்தங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாவல் கோப்பியானது நிறைந்த போசணை நலச் செழுமைகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
1. மாப்பொருள்
2. புரதம்
3. கொழுப்புச் சத்து
4. நார்ச்சத்து
5. சோடியம்
6. கல்சியம்
7. இரும்பு
8. பொட்டாசியம்
9. மங்கனீஸ்
10. மக்னீசியம்
11. பொஸ்பரஸ்
12. நாகம்
13. விற்றமின் A, B & C
இந் நாவல் கோப்பி ஒரு உற்சாகமூட்டக் கூடிய பானம் என்பதற்குமப்பால் கீழ்க்காணும் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.
· உங்கள் வழமையான கோப்பியின் சுவையுடன் அதிக ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளது.
· உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கின்றது.
· இரத்தத்தில் சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதில் காணப்படும் ஜம்போலைன் எனப்படும் வேதிப்பொருள் மாச்சத்து குளுக்கோசாக மாற்றப்படுவதைத் தடுக்கின்றது.
· நாவல் கோப்பிப் பொடியில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் குருதிச் சோகை சார்ந்த குறைபாடுகளைக் குறைக்கின்றது.
· அதிகளவிலான சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.
· பக்ரீரியா எதிர்ப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் நீரிழிவு சார்ந்த தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றது.
· சமிபாட்டை ஊக்குவிக்கிறது.
· இரத்தத்தைச் சுத்திகரித்து அதிகளவிலான ஹீமோகுளோபினுடன் கூடிய ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியினை உடல் முழுவதும் எடுத்துச் செல்கிறது.
மனிதர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்த பண்டைக்காலத்தில் நீரிழிவு நோய்க்கான இயற்கை மருத்துவமாக நாவல் பழக் கோப்பி பயன்பட்டது.
இயற்கையான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொண்டு எமது முன்னோர்கள் நோய்களின்றி, உபாதைகளின்றி நீண்ட காலம் உயிர்வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது ஆரோக்கியமற்ற, செயற்கை நிறமூட்டிகள், பதனிடல் பொருட்கள், சுவையூட்டிகள், இரசாயனங்கள் என்பவை உள்ளீடுகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகள் மற்றும் பானங்களை நுகர்வதால் ஆயுட்காலம் குறைவடைந்தது மாத்திரமின்றி, மிக இளவயதிலேயே மாத்திரைகளுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தற்போதைய சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதிலும் நீரிழிவு நோயின் தாக்கம் என்பது அனைத்துவயதினரையும் ஆட்டிப் படைத்து வருகின்ற வேளையில் அதனை ஆரோக்கியமான மற்றும் பக்கவிளைவுகளற்ற முறையில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு நாவல் விதைக் கோப்பி உதவுகின்றது. நாள் தோறும் இரண்டு தடவைகள் நாவல் கோப்பியினை அருந்துவதன் மூலம் உங்களது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை நீங்கள் பரிசோதித்து அறிந்து கொள்ள முடியும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி கோலும். ஆரோக்கிய வாழ்வு என்ற ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு எந்தவிதமான இரசாயனக் கலப்பற்றதும் 100% கஃபைன் இல்லாததுமான நாவல்விதைக் கோப்பியினை Possible Green (Kilinochchi) என்ற பெயரில் லைவ்ரோன் தயாரித்து வழங்குகின்றது.
என்ற கிளிநொச்சியில் இயங்கும் தமிழ் பெண்களால் நிர்வகித்து நடத்தப்படும் நிறுவனமான பொசிபிள் கிறீன் லிமிட்டட், வட பகுதியில் குவிந்துகிடக்கும் இயற்கை மூல வளங்களைக் கொண்டு தயாரிக்கிறது. உலகம் முழுவதும் விற்பனையாகும் 25 வகையான தேனீர் மற்றும் கோப்பி வகைகளில் நாவல் கோப்பியும் ஒன்று. இவற்றை ebay போன்ற விற்பனைத் தளங்களில் சில்லரையாகவும்(http://stores.ebay.co.uk/possiblegreenltd), நேரடியாகத் தொடர்புகொண்டு (lifetone.co.uk, possiblegreen.com) மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
முழுமையான உள்ளூர் தேசிய உற்பத்தியான பொசிபிள் கிறீன் தயாரிப்புகள் லைவ்ரோன் என்ற பிரண்டின் கீழ் விற்பனையாகிறது.
தயாரிப்பு முறை:
ஒரு குவளை கொதி நீரில் நாவல் கோப்பிப் பையிலுள்ள கோப்பியினை இட்டு கரண்டியால் கலக்கி சூடாக அருந்தவும்
எச்சரிக்கை:
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார், மற்றும் சத்திரசிகிச்சைக்குட்படுவோர், மருத்துவ சிகிச்சைக்குட்படுவோர், வைத்திய ஆலோசனைகளை பெறுவது அவசியம்.
Prasanthi
(Media Coordinator)
Possible Green (Pvt) Ltd
Kilinochchi