நியோகா திரைப்படம் பார்க்ககிடைத்தது திரையரங்கில் ..எனக்கு மிகவும் பிடித்திருந்த்தது ஆதலால்
அது பற்றி குறிப்பெழுத வேண்டும் என்று நினைத்திருந்தேனனாலும் தமிழில்Type பண்ணுவது சிரமமம் எனக்கிருப்பதனல் அதிகமாக விமர்ச்சித்தோ விவாதித்தோ எழுதவில்லை இதை அது மட்டுமல்லாது
வேலைப்பழுவும் மறுபுறம் இருந்தாலும் சுருக்கமாக என் கருதுக்கள் பற்றி எழுதமுனைகிறேன்.
அன்று திரையரங்கில் என் பின்னாலும் அருகிலும் இருந்தவர்கள் படம் முடிந்த்ததும் படம் முடிஞ்சா ? என்றும்
ஏன் எண்ணை தேய்ப்பதை காடினார்கள் என்றும் முணுமுணுத்து கொண்டிருந்தார்கள்.. இது அவர்களது சிந்தனை ஆதலால் அவர்களுக்குள் கேள்வியெளுப்பினார்கள்.அதுவும் படத்தின் சிறு வெற்றியை காட்டியதகவே நான் கண்டேன்… கனடிய மண்ணில் ஒரு பெண் இயக்குணர் முதல் முழுநீள திரைப்படத்தை எடுத்து வெளியிடுவது
மிகவும் பாரட்டவேண்டியதே அத்துடன் சில திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள் பாராட்டுக்கள் குழுவினருக்கு…திரைப்படம் கருத்தியலில் ஒரு உண்மையான கதையை பேசி சென்றது யாரலும் மறுக்க முடியாது கதைக்கு பராட்டுக்கள்.
படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்து பின்பு நடந்த்து கதை நிரைவுற்றது என் மனதில் கேள்விக்குறியுடன்
உண்மையில் திரைபட தயாரிப்பாளருக்கும் டைரக்ரருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாரட்டுக்கள் சொல்லவேன்டியது நல்ல கலைஞர்களின் கடமையாகும்..
பினவரும் விடையங்கள் இன்னும் செவ்வனே செய்திருந்த்தால் இன்னும் வெற்றி பெற்றிருக்கும் என்பது எனது கருத்து
1) ஒவ்வொரு காட்ட்சியும் இன்னும் விவாதத்திற்கு உட்படுத்தி எடுத்திருக்கலாம் எனத்தோணியது
2) சுருக்கி கட்டிய கதை போல எடிட்டிங் அமைந்ததாய் உணர்ந்தேன்
3) கமெரா (shots) காட்சிகள் அருமையாக இருந்த்தது அனாலும் இன்னும் சினிமாவுக்காக கமெரா கண்பார்வையும் தொழில்நுட்ப (shots) எடுத்து காட்சிபடுத்தியிருந்த்தால் இன்னும் மெருகேறியிக்கும் என எண்ணத்தோன்றியது…( அதிகமன close Up shots பாவிக்கப்பட்ட்து குறைத்து வேறு shots அமைத்திருக்கலாம்)
4) இசை பற்றி நான் சொல்வதற்கு திரை பின்னணி இசை பற்றிய அனுபவம் எனகில்லை அனாலும் நன்றாக அமைந்திருந்தது என்பேன்.
5) இன்னும் கவரக்கூடிய விதமாக படத்தின் எழுத்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் உணர்ந்தேன்
6) சில நிமிடங்கள் அதிகபடுத்தி கதை முடித்திருந்த்தால் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கலாமோ என்பதும் எனது கருத்து
7) அம்மா அப்பா வருகின்ற காட்சிகளில் நாடக நடிப்பின் சாயல் கண்டேன் நாடக நடிகர்களை திரப்பட நடிப்புக்கு கொண்டுவருவது சிரமமாயிருந்த்தாலும் நிறையவே முயற்சி Director எடுத்திருக்கிறார் பாரட்டுக்கள்..
8) முதன்மை காதாபாத்திரம் மட்டுமல்ல… மச்சாளும் தம்பியும் நடித்த காட்சிகளில் எல்லம் அவர்களது சினிமா நடிப்பில் அநுபவமுள்ளவர்களாவே காட்டிச்சென்றது இருவருக்கும் தனிப்பட்ட பாரட்டுக்கள்.
இவை மட்டுமே என்னிடம் தோன்றிய கருத்து…
என்னடா இவன் இவைகளையெல்லம் எழுதுகிறான் இவன் எத்தனை படம் எடுத்தவன், எடுக்கபோறானா எதிர்காலத்தில் என்றெல்லாம் கேட்கப்படாது..எனென்றால் எனக்கு அதுபற்றிய தாகமில்லை அனாலும் தயாரிப்பாளர் டைரக்ரர் எனது கருதுக்களில் கவனம் செலுத்தி அவரது அடுத்த முயறிசியில் மென்மேலும் வெற்றி பெறட்டும் என்கின்ற எண்ணமே அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. சுமதி பால்ராமும் அவரது திரப்பட குழுவினர்களுக்கும் அழகான கருத்தினை திரைப்ப்டமாக கொண்டுவந்த்தற்கு நன்றி..குறைகளே நிறைவாக்க கற்றுக்கொடுக்கும் …கனடியத்திரைபடத்துறையினரின் வளர்ச்சியை இப்ப்டமும் காட்டிசெல்கிறது.. என்கருத்துக்கு விளக்கம் என்னிடம் கேட்கவேண்டாம்… Director உடன் உங்கள் அநுபவத்தை பகிருங்கள். நன்றி.
இரா.குணசீலன்