பொதுவெளியில் பொதுவாக பேசப்படாதவை
2009 வரையிலான 30 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசிய போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் அளவுக்கு உள்ளிருந்தே கொல்லும் வியாதியால் கொல்லப்பட்டவர்கள் பற்றி பேசப்படவில்லை. யாழ் பல்கலைக் கழக மனித உரிமைக்கான ஆசிரியர் சங்கத்தின் அறிக்கைகளைத் தவிர. இவை அனைத்தும் ஆக்கப்பூர்வமான முறையில் பேசப்படாதவரை எமது சமூகத்தில் போராட்டத்தில் பாரதூரமான தவறுகள் நிகழ்ந்தன என்பது பொதுவெளியில் ஒப்புக்கொள்ளாதவரை அதில் ஒரு நேர்மையற்ற களவாணித்தனம் ஒழிந்திருக்கும் வரை கள்ள மவுனம் காக்கப்படும் வரை இந்த அநீதியான மன நிலை நிலவும் வரை நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நிறைவடையாது. ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த பாரதூரமான உள்ளார்ந்த நிலையை கண்டுகொள்ளாவில்லை. இது உணரப்படாதவரை விமோசனம் இல்லை. அறமற்ற சமூக சாரம்சம் நியாயம் நீதியை நிலை நாட்டமுடியாது. நீதி நிலைநாட்டப்படுவதென்பது சகல விதமான மனித உரிமை மீறல்களையும் உள்ளடக்கியதே. கற்பு நிலை என்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம்.
(Sugu)