ஈரலிப்பான குளிர்மையான மேற்குத் தொடர்ச்சி மலையை தனது கிழக்கு எல்லையாகவும் வறட்சியான வெப்பமான கரிபியன் கடலை தனது மேற்கு எல்லையாகவும் கொண்ட மாநிலம் தான் கேரளா. தெற்கு வடக்கு எல்லைகள் இல்லையா என்று சொல்லும் அளவிற்கு ஒடுக்கம்மான பகுதிகளை உடையது. ஊரெங்கும் கடற்கரை உல்லாசப் பயணத்திற்குரிய சூழல் கோவளம் கடற்கரையை மறக்க முடியாத அழகு பூமி. ஏன் எமது யாழ்ப்பாணத்து வேலிகள், இலுமிச்சைகள், கொய்யா. முருங்கை, வாழை தென்னைகள் இன்னபிற வீட்டுப்பயிர்களை தன்னகத்தே கொண்ட கிராமத்து பூமி.
நான் இங்கு சென்ற போதெல்லாம் நகரங்களை விட கிராமங்களையே அதிகம் கண்டேன். நகரமயமாக்கப்படாத செழிப்பான கிராமங்களை கொண்ட பூமி இது. எமது மலையகத்தை போல் எப்போதும் சிணுங்கிய வண்ணம் மழைத் தூறலாக ரம்யங்களை ஏற்படுத்தும் காலநிலை. மேற்கு கரையோரம் எங்கும் சமுத்துரத்துடன் இணைந்த நன்நீர் கடல் நீரேகளைக் கொண்ட திட்டுத் தீவுகளையும் குடியிருப்புக்களும் அங்கேயே தங்கிவிடலாம் என்று மனத்தை ஏங்க வைக்கும் இயற்கை பச்சைகள் இந்தக் குடியிருப்புக்களுக்கு நடுவே பயணங்களுக்கு சிறு படகுகள், வத்தைகள் இயல்பாக வீதியில் ஓடும் வாகனம் போன்ற பயணங்கள் இந்த நீரேரிகளில்.
இளம் ஆண் பெண் குழந்தைகள் முதியவர் என்று பாகுபாடின்றி பாதுகாப்பாக பயணிக்கும் சிறு இயந்திர ‘திறந்த’ வத்தைகள் விபத்துக்கள் நடைபெற்றதா? என வரலாற்றை தேடிக்கண்டு பிடிக்க முடியாத பாதுகாப்பு பயணங்கள் காரணம் இந்தக் கடல் நீரேரிகள் ஓடைகளாகவே பெரும்பாலும் இருந்தன இரு மருகிலும் அங்காங்கே திட்டுக்களாக கரைகளை காட்டிநிற்கும் அழகுகள் கண்கு எட்டி தூரத்தில் நிச்சமய் இன்னொரு படகை காணாமல் பயணிக்க முடியாது. The Snake Boat Races of Kerala – India’s very own ‘Olympics on Water’! என்று சொல்லும் அளவிற்கு உலகின் தலை சிறந்து படகோட்டி பயிற்சி பள்ளியை தன்னத்தே கொண்ட மாநிலம் என்றால் பாரத்துக் கொள்ளுங்களேன்
புவியியல் தோற்றத்தில் இன்றுவரை விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தை ஒத்த அமைப்பை கொண்டது. இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் என மும் மதத்தையும் நம்புவர்கள் சம அளவில் இருந்தாலும் இந்தியாவில் அதிக காலம் இடதுசாரிகளால் ஆளப்பட்டவர்கள் இந்த மாநில மக்கள். இதனால் பெருவாரியான இடதுசாரி சிந்தனையாளர்கள் கேரள மக்கள் தொகையில் உள்ளனர் 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது ஆரம்ப கல்வியிற்கு மேல் முடித்துள்ள எப்போதும் ஈரமாக தோற்றம் கொடுக்கும் கால நிலையை உடைய மாநிலம்
இந்த மாநிலம் தான் கடந்த சில வாரங்களாக அதிக ஈரலிப்பால் தத்தளித்துப் போய்விட்டது. ஏன் இது நடைபெற்றது. எவ்வாறு இதனைத் தடுத்திருக்க முடியும்..?
(இன்னும் வரும்…)