
காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் “ஈழத்து தலித்திய” நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. “சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே…” என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.