இவற்றைவிட அவரிடம் ஒரு நகம் வெட்டும் உபகரணம், காதுக்குடும்பி, இரண்டு கத்தரிக்கோல்கள், ஒரு கைத்தொலைபேசி, சில பற்றரிகள், ஒரு கமரா, ஒரு கறள்பிடித்த திருவலை, 3 சிறிய கத்திகள், ஒரு கணிணி உண்டு.
இதைவிட ஒரு பழைய தொலைக்காட்சி அன்டனாவும், போரும் வாழ்வும் என்னும் புத்தகமும் உண்டு என்பதை பணிவுடன் அறியத்தருகிறேன்.
அவரிடம் 1962ம் ஆண்டு வாங்கிய ஒரு தையல் மெசீனும் உண்டு. அதில் அவர் சீருடைகள் தைத்ததில்லை. காரணம் அவருக்கு ஐன்னல் திரைச்சீலைகளைத் தவிர வேறு எதையும் தைக்கத் தெரியாது.
சில வேளைகளில் அவரது அலுமாரிக்குள் குண்டூசிகள் இருக்கலாம். உங்கள் தேடுதல் நடவடிக்கையின்போது அவை வெடித்துவிடாதவகையில் பாதுகாப்புடன் இருக்கவும்.
அவர் போலீஸ் உடைஉடுத்த ஒருவருடன் 50 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஒரு புகைப்படம் இருக்கவும் கூடும்.
அது வேறு யாரும் இல்லை, அவருடைய கணவர்.
நமக்கும் அவருக்கும் இதுவரை ஒத்துவந்ததே இல்லை. எனவேஅவரை வேண்டுமானால் தேடிப்பிடித்து உள்ளே தள்ளுங்கள். அவர் யமலோகத்தில் ஒளிந்திருக்கிறார் என்பதையும் அறியத்தருகிறேன்.
இவ்வண்ணம்
உங்களின் தற்போதைய தேடுதல் வேட்டைகளில் நீங்கள் கண்டுபிடிக்கும் ஆயுதங்களினால் கதிகலங்கயிருக்கும் ஒரு பாவி