(1995களியேயே ஆரம்பித்த புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு)
புதிய ஜனாதிபதி சந்திரிகாவுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு புலிகள் ஈழப்போர் III ஐ தொடங்கியபோதே அவர்கள் தமது படையணிகளில் ஆளணி பற்றாக்குறையை உணரத்தொடங்கியிருந்தனர்.
1990களின் ஆரம்பத்தில் புலிகளின் மக்கள் சார்பு கொள்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. முன்பு தாயக மக்களை முதன்மைபடுத்தியும் அனைவரையும் சமமாகவும் பாவித்துவந்தவர்கள் இப்போது புலம்பெயர் மக்களை முதன்மைபடுத்த தொடங்கியதுடன் தாயகத்தில் இருந்த மக்களையும் பிரதேசவாரியாக நோக்கத்தொடங்கியிருந்தனர். இதுவே இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் தமது இயக்கத்தில் மிகபெரிய பிளவை ஏற்படுத்த போகின்றது என்பதை அறியாமல் அவர்கள் பிரதேச வேறுபாடுகளை கையாளத்தொடங்கினர்.
1990களில் மக்கள் சார்புகொள்கையில் புலிகள் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை புலிகள் பின்வரௌமாறு மாற்றியிருந்தனர்.
1. புலம்பெயர் தமிழர்களை.
2. யாழ் குடாநாட்டில் இரணுவ கட்டுப்பாடில் வாழ்பவர்கள்.
3. தமது கட்டுப்பாட்டில் வன்னி பெரு நிலப்பரப்பில் (கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை, வடமரட்சிக்கிழக்கு) வாழ்பவர்கள்.
4. இராணுவ கட்டிப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் பகுதிகளில் வாழ்பவர்கள்.
5. மட்டகளப்பு–அம்பாரை–திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த கிழக்கு மாகாணத்தவர்.
வன்னிப்பகுதியை சேர்ந்தவர்களும், கிழக்கு மாகாணத்தவர்களுமே தமது படையணிகளில் அதிகளவு பங்குவகிப்பதாலும், புலிகள் அமைப்பில் அதிகளவில் இணைந்துகொள்வதையும் அவதானித்த புலிகள் யாழ்குடாநாட்டில் வாழ்ந்தவர்கள் இயக்க செய்ற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்கின்ற ஒருவித அதிர்ப்தியை வெளிபடுத்திவந்தனர்.
இதன் வெளிப்பாடாகவே கட்டாய ஆட்சேர்ப்பின் ஆரம்பவடித்தை ”பிரச்சாரம்” என்கின்ற பெயரில் 1994-1995 காலப்பகுதிகளில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கினர். இவர்களால் முதலில் குறிவைக்கப்பட்டவர்கள் மாணவர்களே. அப்போது யாழ்குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம். தனியார் கல்வி நிலையங்களுக்கு பிரச்சாரத்துக்காக செல்லும் புலிகள் நாள் முழுவதும் மாணவர்களை பிடித்து வைத்து மூளைச்சலவை செய்து அவகளை இயக்கத்தில் சேர்க்க முயன்றனர். இளம்பருதி–பாப்பா–சிட்டு போன்றவர்கள் ஆரம்பத்தில் இவ்வாறான செய்ற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனாலும் தமது கல்வியிலேயே அதிக அக்கரை காட்டிய யாழ் மாணவர்களிடம் இவர்களின் முயற்சி கடைசிவரை வீணான ஒன்றாகவே இருந்தது.
பின்னர் யாழ்குடாநாட்டை 1995ல் ஆரசு படைகள் கைப்பற்றிக்கொண்ட போது பெருமளவில் மக்களை வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ச்செய்வதில் இறங்கிய புலிகள் அதில் ஓரளவுக்குத்தான் வெற்றிபெற முடிந்தது. பெரும் எண்ணிக்கையிலான குடாநாட்டினர் தென்மராட்சியுடன் நின்றுகொண்டனர். வடமராட்சிக்கும் தப்பி சென்றுவிட்டனர்.வன்னிக்கு வந்த மக்களில் பெரும்பாளனவர்கள் புலிகளிடம் இருந்து தப்பித்து புலம்பெயரத்தொடங்கினர். அத்துடன் வவுனியா, கொழும்பு என குடியேற தொடங்கினர். 1996 ஜூன் 26ல் ஏற்பட்ட கிளிநொச்சி இடம்பெயர்வை சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் யாழ்குடாநாட்டுக்குள் தப்பிச்சென்றனர். காடுகள், கடல்வழியாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தப்பிசென்றனர்.
இவ்வாறு தப்பிச்சென்ற ஒருவர் பின்னாட்களில் நான்காவது ஈழ்ப்போர் காலத்தில் வன்னிப்பகுதி மக்களி வதைபடுவதை பார்த்து லண்டனில் வைத்து இப்படிக்கூறினார்.
“ஒருவர் தியாகம் செய்தால்தான் அவரது வீடு வாழும், ஒரு வீடு தியாகம் செய்தால்தால் ஒரு ஊர் வாழும், ஒரு ஊர் தியாகம் செய்தால்தான் ஒரு நாடு வாழும், எனவே எமக்கு தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என்றால் கிளிநொச்சி–முல்லைத்தீவு மக்கள் தியாகம் செய்யத்தான் வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டால்தான் உலகம் எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரும்”
ஆள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்த புலிகள் தங்கள் பிரச்சாரத்தை கிளிநொச்சி முல்லைத்தீவிலும் ஆரம்பித்தனர். இளம்பருதி,பாப்பா, சிட்டு,மற்றும் புலிகள் அமைப்பினையும் அவர்களது கலை பண்பாட்டு குழுக்களை சேர்ந்த பிரபல எழுச்சி பாடகர்களையும் இந்த பிரச்சாரத்தில் இறக்கி விடப்பட்டிருந்தனர். வீதிகள் தோறும் வீதிநாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர். பிரச்சார கொட்டகைகளை அமைத்து அவ்வழியால் போவோர் வருவோரை இயக்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த தொடங்கினர். சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக சிக்குகின்றவர்களை கடத்திச்செல்வதில் பாப்பா குழுவினர் இறங்கியியிருந்தனர்.
நெட்டாங்கண்டலை மையமாக வைத்து இயங்கிய பாப்பா குழுவினர் புத்துவெட்டுவான், மருதங்குளம், ஐயங்கன்குளம், பழைய முறுகண்டி, கோட்டை கட்டியகுளம், தென்னியங்குளம், தேராங்கண்டல் போன்ற காட்டுபகுதி கிராமங்களிலும் அவ்வழியே சென்றுவருபவர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டத்தொடங்கிருந்தனர்.
இந்த பிரச்சாரத்தில் கவரப்பட்டு புலிகள் இயக்கத்தில் சேர்ப்பவர்கள் தமது பயிற்சியை முடித்த பின் அங்கிருந்து தப்பி மீண்டும் வீடுகளுக்கு ஓடிவருபவர்கள் போன்று அனுப்பப்ட்டனர். ஊருக்குள் சென்று சில நாட்கள் ஒழிந்த்திருந்த்துவிட்டு மீண்டும் மெல்ல வெளியே வந்து ஊருக்குள் இருக்கும் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து புலிகள் இயக்கத்துக்கு அழைத்துச்செல்லும் பணியினனை அவர்கள் செய்தனர்.
இந்த பிரச்சார குழுவினர் தனியார் கல்விநிலையங்களில் அதிக அக்கரை செலுத்தியிருந்தனர். வன்னேரிக்குளத்தில் ஒரு சிறுவனை இயக்கத்தில் சேர்க்க முயன்ற புலிகளுடன் நேரடியாகவே முட்டிக்கொண்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் நிர்வாக சேவை பொறுப்பாளராக இருந்த நாகேஸால் பிஸ்டலை காட்டி அச்சுறுத்தப்பட்டார். இவரை தடுத்துவைத்த புலிகள் அவருக்கான மரண அச்சுறுத்தலை நேரடியாகவே வழங்கியிருந்தனர்.
புலிகள் அமைப்பின் பணியாளர்களாக இருப்பவர்களையும் அப்போது பிரச்சாரத்துக்காக அவர்கள் இறக்கிவிட்டிருந்தனர். நிர்வாக சேவை, நிதி, நீதி, பொருன்மியம் போன்ற இடங்களில் சம்பளத்துக்கு பணியாற்றியோர் குறிப்பிட்ட நாட்களுக்கு இவ்வாறான பிரச்சார வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பாப்பா, சிட்டு போன்றவர்கள் ஆள் அரவம் அற்ற இடங்களில் சிக்கிகொள்ளும் இளம் ஆண்களையும் பெண்களையும் கடத்திக்கொண்டு புலிகள் அமைப்பில் சேர்க்க தொடங்கியும் இருந்தனர். சற்றுவரம்பு மீறி ஆட்கடத்தலில் ஈடுபடுவதை அறிந்த புலிகளின் மேலிடம் சிட்டுவை பிடித்து போர்களத்துக்கு அனுப்பிவிட்டனர். பினபு போரில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இவ்வாறு 1996லேயே தனது ஆட்டத்தை தொடங்கியிருந்த பாப்பாவுக்கு இப்போது 2006ல் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அதிக அதிகாரங்களுடன் தலைமையினாலேயே நியமிக்கப்பட்டால் சும்மா இருப்பாரா என்ன?
தொடரும்..