திருகோணமலையில் இருந்து கண்டி வீதி வழியாக செல்லும் அனைத்து நீண்ட தூர பஸ்கள் யாவும் தம்பலகாமம் வழியாக கிண்ணியா வந்தே போகவேண்டும்.இது கண்டி வீதியில் இருந்து உள்ளே பத்து மைல்வரை தம்பலகாமம் ஊடாக சென்று அதே வழியாக திரும்பி கண்டி வீதிக்கு வந்து செல்ல வேண்டும்.இது நீண்ட தூர பிரயாணிகளுக்கு மன உளைச்சல் கொடுக்கும் விசயம்.ஆனால் மஜீத் இதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.தான் நினைத்த படி நடக்கவேண்டும்.இதுவே அவரின் பலவீனம்.
இதை சொல்வதற்காக பற்குணத்தின் அலுவலகம் வந்தார்.அப்போது பற்குணம் ஏன் சேர் கிண்ணியாவுக்கு பாலம் போட்டால் இந்த அலைச்சல் இல்லையே எனக் கேட்டார். அதற்கு மஜீத் என்னால் பாலம் போட முடியும்.அப்படிப் போட்டால் சிங்கள மக்கள் கிண்ணியாவிலும் அதை அண்மித்த பகுதிகளிலும் குடியேறுவதை என்னால் தடுக்க முடியாது.ஏற்கனவே விமானப்படை,கடற்படைத் தளங்கள் உள்ளன.எனவே இலகுவில் குடியேறிவிடுவார்கள்.ஆகவேதான் நான் பாலம் அமைப்பதை விரும்பவில்லை என்றார்.
மஜீத்தைப் பொறுத்தவரை அவரின் சேவையை மதித்த பற்குணம் அவரின் அடாவடித்தனங்களையே வெறுத்தார்.இதன் காரணமாக மகறூப் அவர்களை தேர்தலில் போட்டியிட தூண்டியவரகளில் பற்குணமும் ஒருவர்.
மஜீத் பற்றிய உண்மையான நகைச்சுவை கதை இது
அவர் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்தவர்.ஒரு தடவை அவரது பிரதானமைச்சர் மூன்று நாள் வெளிநாடு பயணம் சென்றார். அதனால் அந்த மூன்று நாட்களும் இவர் தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். அதற்காக கிண்ணியாவில் சிலர் பாராட்டு விழா எடுத்தார்கள்.இதைத் தொடர்ந்து பலரும் விழா எடுத்தார்கள். ஆனால் மூன்று நாட்களில் அந்த அமைச்சர் நாடு திரும்பிவிட்டார். பாராட்டு விழாக்களோ வருடங்களாக தொடர்ந்தது.
முட்டாள்தனமாக அந்த மக்களால் எடுக்கப்பட்ட அந்த பாராட்டு விழாக்களில் மஜீத் அவர்களும் கலந்துகொண்டார் .இது எப்படி
(Vijaya Baskaran)