பற்குணம் தம்பலகாமத்தில் பணிக்கு சேர்ந்த சில மாதங்களின் பின் சில விவசாயிகள் பற்குணத்தைக் காண வந்தனர். தம்பலகாமத்தில. சேர்மனாக இருந்த ஒருவர் அந்த விவசாயிகளின் வயல்களுக்குப் போவதற்கான பாதையை மூடி தன் வயலோடு இணைத்துவிட்டார். அதை கேட்கப் போன அந்த விவசாயிகளை விரட்டி விட்டார். அவரகள் பொலிஸில் முறையிட்டும் முடியவில்லை. இதை பற்குணத்திடம் வந்து முறையிட்டார்கள். அவர் ஒரு முரடன் என பெயரெடுத்தவர். அதனால் அவருக்கு எல்லோரும் பயந்தே இருந்தனர். இதைக் கேட்ட பற்குணம் தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினார்.
பற்குணத்தை பொறுத்தவரை அரச நிர்வாகத்துக்கு தடையாக இருப்பது சவால் விடுவது,சண்டித்தனம் பண்ணுவது பிடிக்காது.இதன் காரணமாகவே சபீதா உம்மா என்ற பெண்ணை குச்சவெளியில் வேலையில் இருந்து நீக்கினார்.எனவே இந்தப் பிரச்சினையையும் ஒரு நிர்வாக சவாலாகவே பார்த்தார் .
மறுநாள் அவரே அந்த சேர்மனை சந்தித்து அந்த விவசாயிகளின் போக்குவரத்துக்கான பாதையை திறந்துவிடுமாறு கூறினார்.அவர் முடியாது என சண்டித்தன பாணியிலேயே பற்குணத்துக்குப் பதிலளித்தார்.அதற்கு பற்குணம் நாளைக்கு நீ அவர்களுக்கு வழி திறந்து விடுகிறாய் என கோபமாக பதிலளித்துவிட்டு வந்தார்.
பற்குணம் பொலிஸ் மூலமாக இதை கையாண்டிருக்கலாம்.ஆனால் பற்குணம் அவருக்கு அவர் பாணியிலேயே பதிலளிக்க முடிவு செய்தார்.மறுநாள் அந்த விவசாயிகளை வயலுக்கு டிரைக்டருடன் வருமாறு அழைத்தார்.அதன் பின் சேர்மன் வீடு சென்று உன் வயல்கள் ஊடாக டிரைக்டர்கள் போகுது வந்து பார் என சொல்லிவிட்டு வந்தார்.
சேரமன் சில அடியாட்கள் துப்பாக்கி சகிதமாக வந்து எவனாவது என் வயலில் இறங்கினால் சுடுவேன் என மிரட்டினார்.அவருக்கு பயந்து எவரும் வயலில் இறங்க தயாராகவில்லை .
பற்குணம் டிரைக்டரில் ஏற உன்னைச் சுடுவேன்டா என ஒருமையில் மிரட்டினார்.அதற்குப் பற்குணம் இப்போது மிஸ்டர் பற்குணம் நீ சுட்டு நான் செத்தால் லேற் மிஸ்டர் பற்குணம் என்று சொல்லிவிட்டு டிரைக்டரை இயக்கினார்
.அப்போது சிலர் வேண்டாம் அய்யா அவன் முரடன் என தடுத்தனர்.பற்குணம் கேட்காமல் அவரின் வயலுக்குள் டிரைக்டரை இறக்க அவரோ பயந்து அய்யா நான் பாதையை விடுகிறேன் என் பயிர்களை உழக்கிய வேண்டாம் என மன்றாடினார்.பற்குணம் டிரைக்டரை விட்டு இறங்கி இப்போதே என் முன்னே பாதை அமைத்துக் கொடு என கட்டளையிட்டார்.அவரோடு வந்த அடியாட்களைக் கொண்டு மீண்டும் பாதை திறக்கப்பட்டது .
இனிமேல் எவரையும் மிரட்டிப் பணிய வைக்கிற வேலை செய்யாதே என அவ்வளவு பேர் முன்னிலையில் எச்சரித்து விட்டு திரும்பினார்.
( பின்னாட்களில் ஒரு நாள் இதே சேர்மன் காலில் ஒரு பெரிய வியாதி காரணமாக திருகோணமலை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.அவரை பற்குணம் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார்.பின்பு அங்கு பணிபுரிந்த தனக்குநட்பான டாக்டரிடம் அவரை கொஞ்சம் கவனம் எடுத்து பார்க்குமாறு கூறினார்.
இதை அந்த டாக்டர் அவரிடம் சொல்லியிருக்கிறார்.ஆனால் சந்தேகப் பேர்வழியான அவரோ பற்குணம் டாக்டர் மூலமாக கெடுதல் செய்யலாம் என எண்ணி உடனடியாக அங்கிருந்து வெளயேறி கொழும்பு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்.
இதை நகைச்சுவையாக அடிக்கடி சொல்வார்)