எமது ஊர் பாடசாலையில் இருந்து ஒரு அழைப்பிதழ் ஒன்று பற்குணத்துக்கு வந்தது.அங்கு கற்பித்த இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.அவரகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் விழா இது.இதில் பேச்சாளரகளாக பற்குணத்தின் பெயரும் போடப்பட்டு அழைக்கப்பட்டார்.இதில் நடராசா,இராசதுரை ஆகியோரின் பெயர்களும் இருந்தன.பொதுவாக நடராசா எங்கள் சமூகத்தில் தன்னைவிட உயர்ந்தவர்கள் படித்தவர்கள் ஆகியோரை விரும்புவதில்லை.இதில் பற்குணத்தின் பெயரை இணைத்தது ஆச்சரியமானது.பற்குணம் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட பின் சொந்த ஊர் நிகழ்ச்சி அழைப்பு என்பதால் கட்டாயம் போகவேண்டிய சூழ்நிலை.
(1973 ம் ஆண்டு கலாநிதி என்.எம். பெரேராவை நடராசா அழைக்க விரும்பினார்.இதற்காக பனை வெல்ல தொழிற்சாலை கட்டப்பட்டது.இந்த அழைப்பினை எம்.சி. சுப்பிரமணியம் மூலமாக நடராசா ஏற்பாடு செய்தார்.என்.எம்.பெரேரா வரச் சம்மதித்தபின் அந்த விழாவுக்கு எம்.சி.சுப்பிரமணியத்தை அவைக்கவேண்டும் இல்லை.அந்த திறப்பு விழாவில் என்.எம். திறந்த நினைவுக்கல் கூட வைக்கவில்லை.இது நடராசாவினதும் த.வி.கூட.டணியினதும் திட்டமிட்ட சதி)
இந்த பிரியாவிடை விழாவுக்கு பற்குணம் போனார்.அந்த விழாவில் ஒரு ஆசிரியர் மாலை போட்டு கௌரவிக்கப்பட்டார் .இன்னொருவருக்கு மாலை போடாமல் பேச அழைக்கப்பட்டார்.இதை பற்குணம் அவதானித்தும் மேடை நாகரீகம் கருதி மௌனமாக இருந்தார்.விழா முடிந்தபின் நடராசா,இராசதுரை ஆகியோரிடம் ஏன் மற்ற ஆசிரியருக்கு மாலை போடவில்லை என கேட்டார்
அவர் தலைமை ஆசிரியர்.மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.சில மாதங்கள் முன்பாக பாடசாலை மாணவர்களுக்கான போட்டி ஒன்றுக்கு வரணி மகாவித்தியாலயம் அழைத்து சென்றார்.வரணி அவரின் சொந்த ஊர்.எனவே அந்த மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று போத்தலில் தண்ணீர் கொடுத்துள்ளார்.இதற்கு பழிவாங்கவே இப்படி மேடையில் அவமானப்படுத்தினோம் என்றனர்.நடராசாவும் இராசதுரையும்.
அந்த ஆசிரியர் செய்தது மகா தவறு.ஆனாலும் நீங்கள் நடந்துகொண்ட முறையும் தவறு,அநாகரீகம் என நடராசாவிடம் சொன்னார்.இதை ஏன் அவரிடம் நேரடியாக கேட்கவில்லை .பிடிக்காவிட்டால் இந்த விழாவுக்கு அழைக்காமலே விட்டிருக்கலாம்.இதில் உங்களுடைய சின்னத்தனம் எங்கள் ஊருக்கு அவமானம் என நடராசாவிடம் ஆங்கிலத்தில் கடிந்துகொண்டார்.பற்குணத்தின் கோபத்தை உணர்ந்த நடராசா உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பின் அந்த ஆசிரியருடன் அவரின் தவறை சுட்டிக்காட்டி ,அதே நேரம் எங்கள் ஊரவர்கள் நடந்துகொண்ட அநாகரிகத்துக்கு மன்னிப்புக் கோரினார்.அந்த ஆசிரியரும் தன் தவறை விளங்கி பற்குணத்தின் பெரும்தன்மையைப் பாராட்டி தன் தவறுக்கும் மன்னிப்புக் கோரினார்.
இந்த விழாவுக்கு நடராசா குடும்பம் உடைந்துபோன நட்பை ஒரு தேவையின் காரணமாக நிவர்த்தி செய்யவே பற்குணத்தை அழைத்திருந்தனர்.
(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)