பற்குணம் ஊரில் இருந்து திரும்பி வந்த சில நாட்களின் பின்பு இராசதுரை மிகவும் மரியாதை கலந்த வாரத்தைகளுடன் அண்ணன் பற்குணம் என விழித்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இராசதுரை பல தடவைகள் ஓ.எல். எடுத்தே ஒருவாறாக சித்தியடைந்தவர்.இப்போது ஏ.எல் பரீட்சை எழுதியிருந்தார்.அதில் அவர் சித்தியடைவாரா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.பற்குணம் விரிவுரையாளாராக இருந்த காலத்தில் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை திருத்தியவர். எனவே அதன் அடிப்படையிலேயே தன் பரீட்சை இலக்கம் கொடுத்து தனக்கு உதவுமாறு வேண்டி எழுதியிருந்தார்.அதனைத் தொடர்ந்து நடராசாவும் அந்த உதவியை வேண்டி கடிதம் எழுதினார்.இதைவிட ராசதுரையும் ஊரில் பற்குணன்ணை எப்படியும் தன்னை பாஸ் பண்ண வைப்பார் என தன் நண்பரகளிடம் சொல்லித் திரிந்தார்.அவருக்கு அப்போது வயது 24.
பற்குணம் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டே ராசதுரையை நினைத்து கவலைப்பட்டார்.ஏனெனில் நடராசா குடும்பம் தங்களைப் போலவே பற்குணமும் செயற்படுவார் என நம்பியதுதான் அவரின் சிரிப்புக்கு காரணம்.ஆனாலும் ராசதுரை பாஸ் பண்ணவேண்டும் என மனதாரவும் விரும்பினார்.ஆனால் அவர்கள் கேட்ட உதவியை பற்குணம் செய்யும் மனிதர் அல்ல.எனவே அவர்களுக்கு பதில் அளிக்கவில்லை .மேலும் பெயில் ஆனால் பற்குணத்தால்தான் பெயில் ஆனதாகவும் சொல்லக்கூடிய மனிதர்கள் அவரகள்.இந்த உதவிக்காகவே மந்துவில் பாடசாலைக் கூட்டத்தில் பேச பற்குணத்தை அவைத்திருந்தார்கள்.
பற்குணம் எந்த உதவியையும் இராதுரைக்கு செய்யவில்லை.ஆனால் அவர் ஒருவாறாக பாஸ் ஆகி பல்கலைக் கழகத்துக்கு தெரிவானார்.இருந்தாலும் இராசதுரை பற்குணம் உதவாவிட்டால் பாஸ் ஆகியிருக்க மாட்டார் என்ற கதையே உலாவந்தது.அதற்கு காரணமும் இராசதுரையே.
அவருக்கு கொழும்பு வளாகம் கிடைத்தது.அது பிடிக்கவில்லை .தனக்கு எப்படியாவது பேராதனையில் அனுமதிபெற்றுத் தருமாறும் மேலும் பற்குணத்தின் தம்பியாகவே அங்கே போகவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .அந்த உதவியை பற்குணம் செய்ய ஒத்துக்கொண்டார்.(சில வருடங்கள் முன்பாக பற்குணத்தை கடிதமும் மரியாதைக் குறைவாக எழுதியஅவரை இராசதுரை)
இராதுரையை பற்குணமே பேராதனைக்கு அழைத்துச் சென்று பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் சகலருக்கும் தன் தம்பி என அறிமுகம் செய்துவைத்தார்.அந்த அறிமுகத்தின் மூலமாக அன்றைய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட B.Ed என்ற பட்டப் படிப்புக்கு தேர்வானார்.ஒரு சில வருடங்களாக பற்குணத்தின் தம்பி என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் உலாவந்தார்.
அன்றைய காலகட்டத்தில் மூதூர் மஜீத் அவர்களின் தம்பி அங்கே படித்தார்.அவரை அறிந்த இராசதுரை அவரின் நட்பை பெறுவதற்காக பற்குணத்தின் தம்பி என்ற போர்வையை கழற்றி எறிந்தார்.பற்குண்துக்கும் மஜீத்துக்கும் உள்ள முரண்பாண்டைத் தெரிந்து அவரின் நட்பைப் பெற பற்குணத்தைப் பற்றி பல்கலைக் கழகத்திலும் வெளியிலும் அவதூறாக கதைக்கத் தொடங்கினார்.அவராகவே பற்குணத்தின் தொடர்பைத் துண்டித்தார்.ஆனால் மஜீத் கடைசிவரை இராசதுரையே உபயோகித்தாரே தவிர நம்பவில்லை.மஜீத்தே இவன் ஒரு நம்பமுடியாத பேர்வழி என பற்குணத்திடம் சொன்னார்
(இராசதுரை மத்திய கல்லூரி அதிபராக இருந்தவர்)
நடராசா குடும்பம் எவ்வளவோ நரி வேலைகள் செய்தும் பற்குணத்தை வீழ்த்த முடியவில்லை.பற்குணமும் அவரகளைப் பழிவாங்கும் எண்ணம் கொண்டதும் இல்லை.ஆனால் நேரடியாக சந்திக்கும்போது முகத்தில் அடித்தமாதிரி அவரகளுக்கு பதிலடி கொடுப்பார்.
(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)