பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு22

நாங்கள்அங்கு சென்ற சிலநாட்களில் பற்குணம் வீட்டில் இருந்த பாலை மரத்தில் எனக்கு ஊஞ்சல் கட்டி நானும் அவரும் விளையாடிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒரு சில பெரியவரகள் வீட்டுக்கு வந்தனர்.அய்யா நிற்கிறாரா எனக் கேட்க நான் தான் அய்யா என்றார்.அவர்கள் நம்பாமல் தம்பி விளையாடாதே அய்யாவைப் பார்க்கவேண்டும்.கூப்பிடு என்றார்கள்.அவரகள் கணிப்பில் டீ.ஆர்.ஓ ஓரளவு வயதானவராக இருப்பார் என்றே கருதினார்கள்.அதை புரிந்த பற்குணம் விளக்கி நான்தான் என்ன விசயம் என்றார்.அப்போது அவர்கள் அய்யா என அழைக்க நான் வெகுளித்தனமாக என்னடா உன்னை அய்யா என்று கூப்பிடுகிறாரகள் என்றேன்.இதைக் கேட்ட அம்மா வந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டு சென்றார்.அதன் பின் நான் டா என்கிற வார்த்தைகள் பாதிப்பதில்லை.

பற்குணம் அங்கே பணியாற்ற சென்றவேளை தலைமை கிளாக் பதவியில் யாரும் இல்லை.அந்த இடத்தை விவேகானந்தன் நிரப்பினார்.அதைவிட சிவானந்தன் ,பூபாலசிங்கம் ,சபீதா உம்மா,தம்பிராசா,மேலும் இருவர் பணியாற்றினர்.இதில் சிவானந்தன் மிக இளமையானவர்.இவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் ஒரு நோயாளி.தாய் மருத்துவதாதி.இவர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதால் அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.அவரது வேலைகளும் முடங்கிக் கிடந்தன.

பற்குணம் பதவிக்கு வந்தபின்னர் இவரது வேலைகளை சக ஊழியர்களுக்கு பகிர்நது கொடுத்து நடைமுறைக்கு கொண்டுவந்தார்.இவரது நிலைமையை அரச அதிபருக்கு தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்தி அவருக்கான உதவிகளை வழங்கினார்.ஆனாலும் சில மாதங்களின் வேலைக்கு வரும்போது எனது பாடசாலை அருகே வலிப்பு வந்து வீழ்ந்தார்.இதை பற்குணத்துக்கு தெரியப்படுத்த அவர் வந்து பார்வையிட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அவர் தன் இறுதியைப் புரிந்துகொண்டு நான் இறந்தால் தன் தங்கைக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கிக்கொடுக்குமாறு வேண்டினார்.பின் சில நாட்களில் இறந்துவிட்டார்.

சில காலங்களின் பின் குச்சவெளி ப.நோ.கூ சங்கத்தில் வெற்றிடம் ஏற்பட்டபோது சிவானந்தன் தங்கை சிவநாயகிக்கு அந்த முகாமையாளர் மூலம் பெற்றுக்கொடுத்தார்.அந்தப் பெண் பின் அந்த முகாமையாளரை திருமணம் முடித்து வாழ்கிறார்..அவர் பெயர் பொன்னையா.பல்கலைக்கழகத்தில் பற்குணத்துக்கு அடுத்த வருடம் படித்தவர்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)