திரு வின்சன்ட் பெரேரா அவர்கள் ஜே.வி.பி யின் செயற்பாடுகள் காரணமாக அவர்களின் அச்சுறுத்தல்களில் இருந்து தப்பவே மறைவாக அந்த வீட்டில் குடியிருந்தார்.அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது.நாங்கள் நேரே சந்தித்தால் சிரிப்பார்.அவருடன் உறவாட யாரும் போவதில்லை.அவர் மனைவி என் மனைவியுடன் கதைப்பார்.அவ்வளவு தான்.சில நேரங்களில் மனைவியுடன் பஸ்சில் சந்தைக்கு செல்வது அவருக்குப் பிடிக்கும்.செல்வார்.அப்போது என் திட்டம் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தது.இது அவர் மனைவிக்கு தெரியும்.
இந்த வீட்டுக்கு பற்குணம் கொழும்புக்கு வந்தால் என்னைக் காண வருவார்.வின்சன்ட்பெரேரா இருப்பதை பற்குணத்துக்கு தெரிவித்தேன்.ஒரு நாள் இரவு பற்குணம் என்னைக் காண வந்தபோது வின்சன்ட் பெரேராவும் அங்கே வந்தார்.பற்குணம் அவரை கண்டுகொள்ளாமல் எங்களிடம் வந்து பேசிவிட்டு சென்றார்.
மறுநாள் அவரது மனைவி உங்கள் வீட்டுக்கு இரவு பற்குணம் என்பவர் வந்தார்.அவர் யார் உங்களுக்கு என என் மனைவியிடம் விசாரித்தார்.அவர் என் சகோதரன் என சொல்லியுள்ளார்.அப்போது அவர் கணவர் வின்சன்ட் பெரேரா சந்திக்க விரும்புகிறார்.அதற்கான ஏற்பாடு செய்து தரமுடியுமா என மனைவியிடம் கேட்டார்.இதை மனைவி என்னிடம் கூற அதை பற்குணத்திடம் தெரிவித்தேன்.நிலமை சிக்கல் என உணர்ந்த பற்குணம் அதன்பின் எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்தினார்.
என் மனைவியிடம் வந்தால் அழைத்து வருவதாக கூறும்படி கூறினேன்.சில நாட்களின் பின்பு ஒருநாள் காலையில் அவரே என்னிடம் வந்து சுகம் விசாரித்தார்.பின்னர் பற்குணத்தை அழைத்துவர முடியுமா எனக் கேட்டார்.நானும் சரிஎன்றேன்.அவர் தமிழ் பேசக்கூடியவர்.
பின்னர் இதுபற்றி பற்குணத்திடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார்.
அதன் பின்னர் எனது மாமனாரிடமும் வின்சன்ட் பெரேரா பழகத் தொடங்கினார்.காலையில் எனது மாமனாரிடம் வீதி நிலமைகளை கேட்டறிந்த பின்பே அவர் வெளியே போவார்.சில தடவைகள் என்னையும் தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றிருக்கிறார்.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)