பற்குணம் A.F.C ( பகுதி 59 )

1977 இல் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது.பற்குணம் தேர்தல் கடமையின் காரணமாக தற்காலிமாக தேர்தல் முடியும்வரை நுவரெலியாவிக்கு அனுப்பப் பட்டார்.தேர்தல் முடிந்தது .ஜே.ஆர்.தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.இந்தத் தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக ஆறில் அய்ந்து பெரும்பான்மையுடன் அய்.தே.கட்சி ஆட்சியைப் பிடித்தது.

பல பெரும் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.மூதூரில் மஜீத் அவர்கள் மஹ்ரூப் அவர்களிடம் தோல்வி கண்டார்.தங்கத்துரைக்கு கூட்டணி இடம் கொடுக்கவில்லை .இன நலன்கருதி எந்த எதிர்பின்றி கூட்டணியை ஆதரித்தார்.

பற்குணம் தேர்தலின் பின் திருகோணமலைக்குச் சென்று மஹ்ரூப் அவர்களைக் கண்டு நேரில் வாழ்த்தினார்.பின் அங்கிருந்து புறப்பட மஹ்ரூப் எங்கே சொல்கிறீர்கள் எனக் கேட்டார்.அப்போது பற்குணம் தான் உண்மையில் மஜீத் அவரகளைக் சந்திக்க வந்ததாக உண்மையைக் கூறினார்.

இதைக் கேட்ட மஹ்ரூப் சிரித்துக்கொண்டே உங்கள் வாகனத்தை இங்கே விட்டுவிட்டு என் வாகனத்தில் போய் வாருங்கள்.அப்போதாவது அவர் நல்ல மனிதர்களை உணர்கிறாரா என பார்க்கலாம் என்று கூறி தன் வாகனத்தை கொடுத்து பற்குணத்தை அனுப்பி வைத்தார்.

பற்குணம் மஹ்ரூப் அவர்களின் வாகனத்தில் மஜீத் வீட்டு வாசலில் இறங்கியபோது கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் சமாளித்து வரவேற்றார்.பின்னர் நாகரீகத்துக்காக அவரின் தோல்வி குறித்து தன் கவலைகளை தெரிவித்தார்.

அதன் பின்பாக தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய பைல்களை காட்டி காரணங்களைக் கேட்டார்.அந்த பைல்களைக் கண்ட மஜீத் அதிர்ச்சியடைந்தார்.அவர் அவை பற்குணத்தின் கைகளுக்கு வரும் என எதிர் பார்க்கவில்லை.இது அவருக்கு பலமான அடியாகவே இருந்தது.

தோல்வியால் துவண்டு இருந்த மஜீத் வேறு வழியின்றி பற்குணத்திடம் மன்னிப்பு கோரினார்.அதன் பின் மஹ்ரூப் வீட்டிற்கு வந்து தன் வாகனத்தில் திரும்பினார்.அப்போது மஹ்ரூப் ஏதாவது தேவை என்றால் சொல்லவும் என்றாராம்.பற்குணம் சிரித்துக்கொண்டே நன்றி சொல்லிவிட்டு வந்தார்.

மஹ்ரூப் நல்ல உறவை கொண்டிருந்தாலும் அவருடன் கூட பற்குணம் எல்லை தாண்டிய உறவுகளை வளர்க்கவில்லை.

மஜீத் அவர்களின் தோல்வி குறித்து பற்குணம் வருந்தினார்.காரணம் தனது ஊரான கிண்ணியாவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனது அதிகாரத்தை தாண்டி அதிகமான சேவைகள் செய்தவர்.

அவருடைய பதவித் இமிர்,அடாவடித்தனம் ,எல்லை மீறிய நிர்வாகத்திலுள்ள தலையீடுகள் இவைகளே பற்குணத்துக்கு வெறுப்பூட்டின.அதைவிட பற்குணத்துக்கு எதிரான போலிக்குற்றச்சாட்டுகள் அதிப்தியைக் கொடுத்தன.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)