பற்குணம் A.F.C (பகுதி 60 )

தேர்தல்கள் முடிந்தபின் பற்குணம் பழையபடி கொழும்பில் பணியாற்றினார்.ஆனாலும் சில தேர்தல் சம்பந்தமான வழக்குகள்,காரணமாக நுவரெலியா போய்வருவார்அதுபோலவே உணவுத்திணைக்கள வழக்குகள் காரணமாகவும் அடிக்கடி திருகோணமலை போய்வருவார். ஒரு நாள் தேர்தல் வழக்கு காரணமாக நுவரெலியா போகவேண்டி இருந்தது.வேறு தேவைகள் காரணமாக அதை தள்ளிப்போட்டு வீட்டில் நின்றார்.

பற்குணம் இருந்தவீடு ஒரு வயற்கரையை அருகில் இருந்தது.அதன் பின்னால் சிறிய நீரோடை பாய்கிறது.அந்த வீடு இருக்கும் பக்கத்தில் வேறு எந்த வீடுகளுமே இல்லை. வீட்டில் முன்பக்கமாக உள்ள காணிகள் அனைத்தும் வீடுகள் இருந்தன.இந்த வீடு உள்ள பக்கத்தில் காணிகள் முட்கம்பிகள் போட்டு அடைக்கப்பட்டு இருந்தன.வீட்டின் நேர் எதிராக களனியா டி.ஆர். ஓ வசித்தார்.அவர் பற்குணத்துடன் அதிகம் பேசுவதில்லை.வீட்டு உரிமையாளர் அல்வாயைச் சேர்ந்த பத்மநாதன் தானும் பேசுவதில்லை என்பார்.ஆனால் மறைமுகமாக நல்ல நட்பை வைத்திருந்தார்.அவர் பற்குணத்தோடு பேசாத்தற்கு பத்மநாதனும் காரணமாக இருக்கலாம்.ஆனால் பற்குணம் கவலைப்படுவதில்லை.பத்மநாதனுடைய சுயநலம் அறிந்திருந்தார்.

இப்படி பற்குணம் நுவரெலியா போகாமல் நின்ற அன்று திருமதி பற்குணமும் வீட்டில் நின்றார்.அன்றைய வானொலியில் யாழ்ப்பாண கலவரம் பற்றிய செய்திகள் ஒலிபரப்பாகின.மறுநாள் நாடளாவிய இனக்கலவரம் பற்றிய செய்திகளும் ஊரடங்கு செய்தியும் அறிவிப்பாகின.

முதல் செய்தி வந்தபோது பற்குணம் பாதுகாப்பான இடத்துக்கு போகலாம் என பத்மநாதன் குடும்பத்தினருடன் கதைத்தார்.அவரகளோ தமது வீட்டின் பாதுகாப்பு கருதி எதுவும் நடக்காது எனக் கூறினார்கள்.அவரகளைப் பற்றி பற்குணம் அறிந்திருந்தாலும் அவர்களை விட்டு தனியான முடிவுகளை எடுக்க பற்குணம் விரும்பவில்லை.

இரவாகும் வேளையில் சில சிங்கள இளைஞர்கள் இவர்களின் வீட்டை வேறு சில சிங்கள இளைஞர்களுக்கு காட்டிச் சென்றனர்.அப்போதும் பற்குணம் எச்சரிக்கையாகி பத்மநாதனுடன் கதைத்தார்.அவரோ ஊரடங்கு சட்டம் எப்படி செல்வது என சமாளித்தார்.

பற்குணம் எச்சரிக்கையாக சாரத்தை மாற்றி கட்டைக் காற்சட்டை அணிந்திருந்தார்.ஆனால் விபரம் யாருக்கும் சொல்லவில்லை.இருண்டபின் கூட்டமாக காடையர்கள் வருவதை அவதானித்தார்.பற்குணத்திடம் துப்பாக்கி இருந்தது.ஏற்கனவே காற்சட்டைக்குள் ரவைகளை வைத்திருந்தார்.திருமதி பற்குணத்தையும் பத்மநாதன் குடும்பத்தையும் அழைத்தார்.திருமதி பற்குணம் அவரகளை காணவில்லை என்றார்.பற்குணம் அவர்களை அவர்களது அறைகளுக்குள் தேட காடையர்கள் உள்ளே புகுந்தனர்.

சந்தர்பவாதியும் நரியனுமான அல்வாய் பத்மநாதன் சொல்லிக்கொள்ளாமல் முன்னாலுள்ள களனியா டி.ஆர. ஓ வீட்டில் மனைவி மகளுடன் ஒழிந்துகொண்டார்.

தனிமைப்பட்ட பற்குணமும் மனைவியும் வீட்டின் பின்புறமாக வாய்க்கால் கரையாக மெதுவாக நடந்தனர்.இருபக்கமும் காடையர்கள் சூழ்ந்து கொண்டனர்.பற்குணம் இனி ஒரு டி எடுத்துவைத்தால் சுடுவேன் என எச்சரித்தார்.அவரகள் நம்பவில்லை எதிர்பார்க்கவில்லை.மீண்டும் நெருங்க வெடி தீர்ந்தது.அம்மே என்ற குரல் கேட்டது.காடையர்கள் ஓடிவிட்டனர்.ஒருவர கண்ணெதிரே பிணமானார்.

பற்குணம் அடுத்த குண்டை போட துப்பாக்கியை திறந்தார். முடியவில்லை.இருட்டு.மனைவியின் கையைப் பிடித்துப் பார்த்தார்.அவ நிதானமாகவே நின்றார்.பயப்படவில்லை.அவ்வின் உதவியுடன் துப்பாக்கியை முறித்து அடுத்த குண்டைப் போடவும் சரமாரியாக கற்களால் எறிந்துகொண்டுருந்தார்கள்.பற்குணம் மனைவியுடன் வாய்கால் கரையால்ஓட அவ்வின் நைற்றி முட்கம்பிகளில் சிக்கியது.இதை எடுக்க முயற்சித்தபோது ஓரளவு தூரத்தில் மீண்டும் காடையர்கள் சூழ்ந்து கொண்டனர்.வேறு வழியில்லை.அடுத்த வெடி.ஒருசிலர் வெடிபட்டும் ஓடி விழுந்தும் காயப்பட்டனர்.

பற்குணம் துப்பாக்கியுடன் மனைவி சகிதமாக திசை தெரியாமல் ஓடினார்.அதைக்கண்ட பல அப்பாவி சிங்கள மக்கள் என்ன என்ன எனக் கேட்டார்கள்.ஆனாலும் பதில் எதுவும் சொல்லாமலே ஓடினார்கள்.காரணம் சுட்ட தகவல் தெரிந்தால் மேலும் ஆபத்தாகிவிடும்.சில மைல் தூரம் சென்றபின் எங்கே போவது என தீர்மானித்தனர்.அப்போது திருமதி பற்குணம் ஒபயசேகரா என்ற அதிகாரி வீட்டுக்கு போகலாம் என்றார்.அவர் பற்குணத்தின் நண்பர்.அவரும் கிருலப்பனை அண்மித்தே இருந்தார்.

இருவரும் ஒபயசேகரா வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி விபரத்தை உண்மையாகவும் கூற அவரோ அவசரமாக உள்ளே அழைத்துச் சென்றார்.பின்னர் விபரத்தை குடும்பத்தினர் கேட்டனர்.

ஊரடங்கு உத்தரவு முடியும்வரை எந்த குரோத உணர்வுமின்றி ஒபயசேகரா குடும்பம் பற்குணம் குடும்பத்தை நன்கு உபசரித்து பாதுகாத்தது.

(தொடரும்)
(விஜய பாஸ்கரன்)