பற்குணம் A.F.C (பகுதி 69)

பற்குணம் இனவாத பிரச்சினக்கு முகம் கொடுத்ததால் அவர் இனி அடங்கி நடப்பார்.அடக்கி நடத்தலாம் என எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அவர் யாரையும் பற்றி கவலைப்படாமல் வழமையான போக்கில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

இனக்கலவரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பற்குணம் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் என சகலரும் அறிந்த ஒரு நபராக விளங்கினார்.பலர் அவரைப் பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டனர்.யார் அந்த பற்குணம் என்பதை அறியவும் காணவும் விரும்பினர் .அவரகளில் ஒருவராக கெக்கிராவ பா.உ மகிந்த சோம என்பவரும் ஒருவர்.

அவர் பற்குணத்தை தான் ஆட்டிப்படைக்க முடியும் எனவும் நம்பினார்.பற்குணத்தை சந்தித்த பின் அவர் பலதடவைகள் தன் அதிகார தோரணையோடு நடந்துகொண்டார்.ஆனால் அவர் மக்கள் பிரதிநிதி என்ற ஒரு காரணத்துக்காகவும் பொது இட நாகரிகம் கருதியும் தன் கண்ணியத்தை இழக்க விரும்பவில்லை.

ஒரு தடவை அன்றை புதிய அரசின் அமைச்சர் ஒருவர் முன்னறிவிப்பு இன்றி வவுனியாவுக்கு திடீர் விசயம் ஒன்றை மேற்கொண்டார்.அப்போது அரசதிபர்,மேலதிக அரச அதிபர் யாரும் அங்கே இருக்கவில்லை .இந்த அமைச்சர் வந்த தகவல் பற்குணத்துக்கு கிடைத்தது.

எந்த முன்னேற்பாடின்றி அமைச்சர் வந்ததால் பற்குணம் அவரை சந்திப்பதை தவிர்க்க விரும்பி தெரியாததுபோல வெளியேறிவிட்டார்.ஆனாலும் மகிந்த சோமவும் அமைச்சரும் பற்குணத்தை தேடி வந்துவிட்டனர் .மகிந்த அமைச்சர் முன்பாக பற்குணத்தை கண்டித்தார்.ஆனால் பற்குணம் அமைச்சரின் தவறை விளக்கவே அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.( இப்படி குச்சவெளியில் முன்னறிவிப்பு செய்யாமல் வந்த அமைச்சர் ஒருவரை பற்குணம் சந்திப்பதை தவிர்த்தார்)

அதன் பின்பாக ஒருநாள் மகிந்த சோம அலுவலகம் சென்று அவரை சந்தித்தார்.அவரும் ஏதோ பணிந்து வருவதாக எண்ணி வரவேற்றார்.ஆனால் பற்குணம் நீங்கள் ஒரு மக்கள் பிரதிநிதி .பொது இடங்களில் கவனமாக பேசுங்கள்.இல்லாவிட்டால் நானும் உங்கள் தவறுகளை அங்கேயே சுட்டிக்காட்ட வேண்டிவரும்.மக்களின் பிரதிநிதி என்பதால் மரியாதை கருதி நடக்கிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டார்.மகிந்த சோம எதிர்பார்க்கவில்லை.

அதன்பின்பு மகிந்த சோம மிக கவனமாகவே நடந்தார்.இவரே பின்னர் ஜே.ஆர. அவர்களால் வவுனியா மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.வவனியா ஐ.தே.க அமைப்பாளர் புலேந்திரன் நட்புடன் தன்னை அணுகியதாகவும் எந்த தலையீடுகளும் செய்யவில்லை என கூறினார்.

பற்குணம் பதவியை துச்சமாக கருதியதாலேயே இவ்வளவு துணிவாக நடக்கவும் பேசவும் முடிந்தது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)