பற்குணம்A.F.C (பகுதி 57 )

பற்குணம் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருந்தாலும் திருகோணமலை வர்த்தகர்கள் அவருடன் நல்லுறவுகளுடன் இருந்தனர்.இதன் காரணமாக அங்கே நடை பெறும் மக்கள் சம்பந்தமான பொது நிகழ்வுகள் புதுவருட கொண்டாட்டங்கள் என்பன அவரின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டன. இவ்விழாக்களுக்கு வர்த்தகர்கள் நிறைய அன்பளிப்பு பொருட்களை வழங்குவார்கள் .

பற்குணம் பணியாற்றிய காலங்களில் கோணேசர் கோவில்,வில்லூன்றி கந்தசாமி கோவில் ,முத்துக்குமாரசாமி கோவில் திருவிழாக்களுக்கு அழைக்கப்பட்டார். அவர் மதம் சம்பந்தமானவராக இல்லாத போதும் அதில் பங்கேற்பார். ஒரு தடவை துறைமுக தொழிலாளர்கள் அவரை முதன் மரியாதை ஏற்கும்படி வற்புறுத்தினார்கள் . ஆனால் அவர் மத ஆசாரங்களை கடைப்பிடிப்பதில்லை என்பதால் மறுத்தார். அதற்கு அவரகள் அய்யா நீங்கள் யாழ்ப்பாணம் மாதிரி சிந்திக்க வேண்டாம். இது திருகோணமலை நீங்கள்தான் முதற் காளாஞ்சி(இது சரியான பதமா தெரியாது) வாங்க வேண்டும் என வற்புறுத்தினர்.

அவரகளின் வேண்டுகோளை மதித்து அதை ஏற்றுக்கொண்டார்.அதே நேரத்தில் திருகோணமலை மக்களின் பண்பை வியந்து போற்றினார்.இன்றுவரை இது வடமாகாணத்தில் சாத்தியம் இல்லாத விசயம்.இதேபோல முத்துக்குமாரசாமி கோவிலை நிர்வகித்த தபால் இலாக ஊழியர் ( தொண்டர் என்று அழைக்கப்படுபவர்) தன் கோவிலுக்கு அழைத்தார்.அதை பற்குணம் அன்புடன் மறுத்தார்.

பற்குணம் பணியாற்றிய இந்தக் காலத்தில்தான் இராசதுரை பட்டப்படிப்பு முடித்து கிண்ணியா மகாவித்தியாலத்தில் ஆசிரியாராக பணி ஏற்றார்.அவர்அங்கே மஜீத் உடன் நல்லுறவை வளர்த்தபோதும் எந்தமுன்னேற்றமும் ஏற்படாத்தால் மீண்டும் பற்குணத்துடன் உறவை வளர்க்க விரும்பினார்.
1976 இன் பிற்பகுதியில் அரச அதிபர் இடமாற்றம் பெற்றார்.இது பற்குணத்துக்கு பெரும் இழப்பாக இருந்தது.அவருக்கு அரச ஊழியர்கள் பிரியாவிடை வழங்கினர்.அவர் பதவி விலகுமுன் பற்குணத்தை தனியாக அழைத்து இங்கிருந்து இடமாற்றம் பெற்று செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்.
ஏனெனில் மஜீத்தின் பழிவாங்கும் பண்பை அவரும் அறிந்திருந்தார்.அதன்பின் ஒரு பெரிய file அடங்கிய தகவல்களை கையளித்தார்.அவை அனைத்தும் மஜீத் அவர்களால் பற்குணத்துக்கு எதிராக அனுப்பப்பட்டபொய்யான முறைப்பாடுகள்.

அடுத்ததேர்தலில் மஜீத் கண்டிப்பாக தோற்பார்.அதன் பின் இந்த file களுடன்அவரை்சந்தித்து பேசவேண்டும்.அப்போதுதான் உன்போன்ற அதிகாரிகளை அவரால் உணரமுடியும் .என்று ஆலோசனை வழங்கினார்.

அதன் பின் பற்குணம் தானகவே மாற்றம்பெற்று கொழும்பு வந்தார்.

(தொடரும்….)

(Vijay Baskaran)