1977ம் ஆண்டு தமிழீழ பிரகடனம் செய்து பாராளுமன்ற ஆதரவு பெற்ற தமிழர் விடுதலை கூட்டணியினர் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறி தமிழ் மக்களின் தலைவராக உலக நாடுகளால் பார்க்கப்பட்ட திரு.அமிர்தலிங்கம் அவர்களையும் அவரோடு கூட தமிழ் இளைஞர்களின் பால் நெருக்கமான தோழமை கொண்டிருந்த திரு. யோகேஸ்வரன் அவர்களையும் கொன்றதுடன்.. திரு.சிவசிதம்பரத்தை படுகாயப்படுத்தியும்.
தாமே தமிழ் மக்களுக்கான நீதிபதிகளாக வரித்துக்கொண்டு நானே ராஜா நானே மந்திரி என்று காட்டாட்சி நடத்தியவர் பிரபாகரன். தமிழ் மக்களால் மட்டுமல்ல சிங்கள இந்திய இடதுசாரிகளாலும் எனயவர்கலால்லும் நேசிக்கப்பட்ட பத்மநாப மற்றும் சிறிசபாரத்தினம் போன்ற மாற்று இயக்கத்தலைவர்களையும் கொன்றவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொல்லி கடந்த 35ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றி விட்டனர் பிரபாகரனும் அவரது இயக்கமும். அமிர்தலிங்கம் துரோகி என்றால் பிரபாகரன் செய்தது அதைவிட எத்தனயோ மடங்கு துரோகம் அல்லவா?
தான் தனது என்று சிந்திப்பவர்கள் (Dictatorship)
இனவெறி கொண்டு இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்துபவர்கள் (promote violent conflict between nations, political factions, and races) அல்லது ஏற்படுத்த எத்தனிப்பவர்கள்..தங்களது இருப்புக்காக சொந்த மக்களின் நலன்களையே புறக்கணிப்பவர்கள் (ignore their own people’s welfare) அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் எதிற்பவர்களையும் தடைசெய்பவர்கள் அல்லது கொன்றோளிப்பவர்கள் (permanently forbid and suppress all criticism and opposition) இவ்வாறான தகைமைகள் உள்ளவர்களையே பாசிஸ்டுகள் என வரையறுக்கிறார்கள்.
இந்த தகைமைகளை கொண்டவர்கள் தான் பிரபாகரனும் விடுதலைபுலிகளும். அதனால்தான் புலிகளும் பாசிசப்புலிகள் என்ற வரையறைக்குள் வருகிறார்கள்.
இவர்களால் எப்படி தமிழ் மக்களுக்கான ஒரு ஜனநாயக அரசை நிறுவமுடியும்?
இவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கான விடுதலை போராளிகளாக முடியும்?
இவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கான உரிமைகளை..நலன்களை நிறுவமுடியும்?
இவை யாவற்றையும் புலிகள் செய்வார்கள் என நம்புபவர்கள் அல்லது நம்புவார்களாக நடிப்பவர்கள் தமது சொந்த மக்களுக்கும்..சகோதரர்களுக்கும் பெரும் துரோகம் இழைப்பவர்களாகவும்..சொந்த மக்களின் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளுபவர்களாகவும் இருப்பார்கள்.
ஏனைய தமிழ் இயக்கங்களை தடை செய்தபோது.. ஒரு இயக்கம் தான் இருக்கலாம் என்றார் பிரபாகரன். தாமே தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்றார்கள். வன்னியில் குட்டித்தமிழீழம் தமது அரசு என்றார்கள் (அப்போதுகூட கூப்பன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பியதும்..ஆசிரியர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்ததும் தெருக்கள் போட பணம் கொடுத்ததும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கியதும் இலங்கை அரசாங்கமே தவிர புலிகள் அரசு இல்லை).
மக்களிடம் வாங்கிய வரிப்பணத்திலும் தமது கேணல்மாருடைய குடும்பங்கள் தங்குவதற்கு பங்களாக்களும், பிரபாகரன் பாதுகாப்பாக இருப்பதற்கான பங்கர்களும் மறைவிட பங்களாக்கள் கட்டுவதற்கும் தங்களுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் செலவளித்தர்களே தவிர மக்கள் சம்பந்தமான அபிவிருத்தி எதிலும் பணம் விட்டதில்லை. ஆனால் அரசாங்கம் நடத்துகிறோம் என்பதில் மட்டும் பெருமை கொண்டார் பிரபாகரன்.
இலங்கை அரசாங்கத்தின் பணத்தில் போடப்பட்ட தெருவில் வேகம் அதிகமாக வாகனம் செளுத்தியவர்களிடமும் தண்டனை பணம் வசூலித்தார்கள்.
தாமே தமிழரின் பாதுகாவலர் என்றார்கள். ஆனால் இன்று தமிழரை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள்? இது தமிழருக்கு புலிகள் இழைத்த துரோகம் இல்லையா? தமிழரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்களை புலிகள் கோட்டை விட்டவர்கள்.
பிரபாகரனால் TELO, EPRLF இயக்கங்களின் போராளிகளின் அழிப்பு தடைகளும் பின்னர் கூட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்போது வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்களுக்கான(இங்கு முஸ்லிம் மக்களுக்கான தீர்வு சம்பந்தமான வரையறை இல்லாது இருந்த போதும் பின்னர் ஏற்பட்ட மாகாண அரசில் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது)
மாகாண அரசை தாமே நிறுவுவதற்கான சந்தர்பத்தை நழுவ விட்டதோடு இந்திய அமைதிகாக்கும் படைகளையும் எதிர்த்து சண்டையிட்டார்கள் புலிகள். அத்தோடு மட்டும் நிற்காமல் 1977..1981..1983 ஆண்டுகளின் அரசினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் இன அழிப்புகளுக்கும் வடமராட்சி ஆபரேஷன் லிபெரஷன் மக்கள் அழிப்புக்கும் காரணர்களான பிரேமதாசாவுடன் கூட்டுச்சேர்ந்தார்கள்.
அப்போதே பிரபாகரனது நோக்கம்..இவர்களது முகத்திரை பலருக்கு புலப்படத்தொடங்கியது. தமிழ் மக்களுக்கு இதுவரைக்கும் கிடைக்கப்பெற்ற அதிக பட்ச தீர்வுத்திட்டமான வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசை நடைமுறைப்படுத்தவிடாமல் பிரேமதாசா அரசோடு சேர்ந்து சீர்குலைத்தார் பிரபாகரன்.
அப்போதே விடுதலைபுலிகள் தீர்வு என்பது அவர்களுக்கான தீர்வே தவிர தமிழருக்கான தீர்வு அல்ல என்பதை பிரபாகரன் தெளிவுப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகும் கூட பிரேமதாசாவுடனான உறவை தமிழருக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதையும் தவறவிட்டார்கள். பின்னர் பிரேமசாசாவையும் கொன்று இலங்கை ராணுவத்துடன் சண்டையிட்டு ஆயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் சாகக்கொடுத்தார்கள்.
சந்திரிக்கா ஆட்சியில் கூட ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தையும் தமிழர்க்கு சாதகமாக்கிக் கொள்ளதவறிவிட்டார்கள். ராஜபக்சே ஆட்சியில் 2006ல் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இலங்கை அரசாங்கம் தமிழரின் தீர்வு சம்மந்தமாக பேசுவோம் என்று கேட்ட பொழுது கூட ஏ9 பாதை திறப்பது பற்றிய பேச்சையே முதலில் பேசுவோம் என்று தமது பொறுப்பைக்கூட துஷ்ப்ரயோகம் செய்தவர்கள் புலிகள்.
இன்று ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்..அவதிப்பட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் விடுகின்ற புலிகள் ஆதரவாளர்கள்..தமிழ் மக்களுக்கான தீர்வை கிடைக்காமல் செய்தது என்பது அவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகம் அல்லவா?
1995ல் யாழ்ப்பாணத்து மக்கள் 5லட்சம் பேரை அவர்களது விருப்பத்துக்கு மாறாக கால்நடையாக வன்னிக்கு அழைத்துச்சென்றார்களே அப்பொழுது மக்கள் என்ன விடுதலை புலிகளிடம் பாதுகாப்பு தேடியா சென்றார்கள்? முதியவர்கள் பயணத்தின்போது செத்தவர்கள் எத்தனை பேர்? படுத்த படுக்கையாக வீட்டில் விட்டு வந்தவர்கள் செத்தபின் எலும்புகூடுகலாக மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
இவை எல்லாம் மக்களின் பெயரால் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்லவா?
இவர்களின் பிடியில் வந்த மக்களையும் வன்னியின் சொந்த மக்களையும் இந்து இவர்களின் தப்புதளுக்காக கேடயமாக பயன்படுத்தி சாகக்கொடுத்தாரே பிரபாகரன் இது துரோகம் இல்லையா? மக்கள் பாதுகாப்புக்காக இவர்களிடம் சரணாகதியாக இருகின்றார்கள் என்று பூச்சாண்டி புலிகளின் பினாமிகளுக்கும் விசிலடிச்சான்குஞ்சுகளுக்கும் ஈடுபடுகின்ற நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள மக்களுக்கும் உலகுக்கும் உண்மை நிலவரம் தெரியாமல் இல்லை.
மாங்குளத்தில் ஆமி காலடி வைத்தபோது கிளிநொச்சியில் கால் வைத்துப்பார்காட்டும் என்றார்களே தவிர வன்னி மக்கள் அவதிப்பட போகிறார்களே என்ற எண்ணம் இருக்கவில்லை பிரபாகரனுக்கு. அதுகூட இவர்கள் வழமைபோல இலங்கை ராணுவத்தின் பலத்தினை குறைத்து மதிப்பிட்டதலயே என்றாலும், பூநகரியும் வீழ்ந்து கிளிநொச்சியும் வீழ்ந்த பிறகாவது தங்களது பலவீனத்தை உணர்ந்து இருக்கலாம். எத்தனை பேர் மடிந்தும் பிரபாகரனையும், மற்ற தலைவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே இவர்கள் இருந்தார்களே தவிர மக்களை பற்றி அவர்கள் பாதுகாப்பு பற்றிய கவலையே இருந்ததில்லை. போரில் அம்புகளும்..ஈட்டிகளும்..வாள் வீச்சுகளும் படாமல் இருப்பதற்காக எப்படி கேடயம் பயன்படுத்த படுமோ அதே போன்று இறுதிப்போரில் மக்களை பிரபாகரன் கேடயமாக பயன்படுத்தினார்.
இதில் புலிகளுக்கு இன்னொமொரு லாபம் எப்படி என்றால் வழமையாக இறந்த மக்களையும்..பிணங்களையும் வைத்து காசு பிடிங்குவோருக்கு இம்முறையும் விர்கபடுகின்ற பொருள் தான் இந்த பிணக்காட்சிகள்..அதுவும் அமோக கையிருப்பு..ஆனால் லாபத்தில் தான் கொஞ்சம் கைகடிப்பு.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் இது வரை இறந்தவர்கள் ஏறத்தாழ 2 லட்சம் பேர் அதில் பாதி பேரை கொன்று குவித்தவர் பிரபாகரன் என்ற வரலாற்றின் வடுவில் இவருக்கு நிரந்தரமான பெயர் உண்டு, கம்போடியாவின் கேமரோவினை போல, போல்பாட் போல, இடி அமீன் போல.
இனியாவது புலி ஆதரவாளர்கள் (சீமான்,வைகோ,நெடுமாறன்) மக்களை ஏமாற்றாமல் இருந்து புண்ணியம் தேடிக்கொள்வார்களா?