
(ரன்ஜன் அருண் பிரசாத், கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக)
இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது போனதாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.