ஆனால் அவ்வாறான காலப் பகுதியில்கூட பிரபாகரன் நயவஞ்சகமாக இருந்தான் என்பதே உண்மை.
இவ்வாறான ஒரு கால கட்டத்தில்தான் வெலிக்கடை சிறையை உடைத்து
குட்டி மணி, தங்கத்துரையை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்பதே சிறி சபாரத்தினத்தின் நோக்கமாக இருந்தது.
சிறி சபாரத்தினம் தனது நோக்கத்தை பிரபாகரன் உட்பட சக சகோதர இயங்கங்களுக்கும் தெரியப்படுத்தி அதற்கான ஆலோசனையையும் ஆதரவையும் கேட்டிருந்தார்.
வெலிக்கடை சிறை உடைப்புக்கு சக இயக்கங்களினது பங்களிப்பு கட்டாயமான ஒன்றாகவே இருந்தது அந்நேரத்தில்.
காரணம் குட்டிமணி, தங்கத்துரை மட்டுமல்லாமல் மற்றய இயக்கங்களில் இருந்த மிக முக்கியமானவர்களும் வெலிக்கடைச் சிறைக்குள் இருந்தார்கள்.
அதில் இன்றும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும்
டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர்.
அந்தக் காலப் பகுதியில் ஒரு தாக்குதல் நடத்துவதென்றால் சுலபமான காரியம் அல்ல.
நீண்ட நாட்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
ஒரு தாக்குதலை செய்து முடித்தால் மறு தாக்குதல் செய்ய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.
ஆகவே தனது திட்டத்துக்கு ஆதரவு தராவிட்டாலும் பறவாயில்லை வேறு எங்காவது தாக்குதல் நடத்தி தனது திட்டத்தை குழப்பிவிடாதீர்கள் என்ற ஒரு கோரிக்கையை சக இயக்கங்களிடம் முன் வைத்திருந்தார் சிறி சபாரத்தினம்.
குட்டி மணி, தங்கத்துரையை பிரபாகரன்தான் காட்டிக்கொடுத்தார் என்று ரெலோ உட்பட மற்றய சக இயக்கங்களுக்குள் நம்பகத்தன்மையான ஒரு கதை இருந்தபடியால் சிறி சபாரத்தினம் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன் வைக்க வேண்டிய தேவையும் இருந்தது.
அதே நேரத்தில் வெலிக்கடை சிறையினுள் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை ஆகவே வெலிக்கடை சிறை உடைப்பால் புலிகளுக்கு எந்த பிரியோசனமும் இல்லை.
இன்னும் விபரமாகச் சொல்லப்போனால் பிரபாகரன் என்றாலே யாருக்கும் தெரியாத காலப்பகுதியில் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட பெயர்கள் குட்டி மணி, தங்கத்துரை.
அவ்வாறானவர்கள் வெளியே வந்தால் பிரபாகரன் என்ற பெயர் மக்கள் மத்தியில் நிரந்தரமாகவே தெரியாமல் போய்விடலாம்.
ஆகவே வெலிக்கடை சிறை உடைப்பை பிரபாகரன் விரும்ப மாட்டான் என்ற சந்தேகம் சிறி சபாரத்தினத்துக்கு இருந்தபடியால்தான் என்னவோ!
தனது திட்டத்துக்கு ஆதரவு தராவிட்டாலும் பறவாயில்லை வேறு எங்காவது தாக்குதல் நடத்தி தனது திட்டத்தை குழப்பிவிடாதீர்கள் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கக்கூடும்.
இவ்வாறாக வெலிக்கடை சிறை உடைப்புக்குக்கான முன்ஆயத்த நடவடிக்கைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கையில், அந்திட்டத்திற்கு மண் அள்ளி போட்டது பிரபாகரனின் செயற்பாடு.
யாருமே எதிர் பார்க்காத நேரத்தில் திருல்நெல் வேலியில் புலிகளின் கண்னி வெடி தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இன்று 500 பேர்,1000 பேர் இறப்பதை சாதாரணமாகப் பார்த்து பழகி விட்டது.
ஆனால் அன்று 13 பேர் இறப்பென்பது பெரிய தொகை போலவே காணப்பட்ட காலப்பகுதி.
இதை அறிந்ததுமே தென்பகுதியில் அங்கங்கே சிறு சிறு கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
இப்படிக் கலவரங்கள் அங்கங்கே நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இறந்த 13 பேரின் வெற்றுடல்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
13 பேரின் வெற்றுடல்களை தென் பகுதி மக்கள் ஒரே நேரத்தில் பார்த்ததும் அங்கங்கே நடந்த சிறு சிறு கலவரங்கள் மிகப் பூதாகாரமாக வெடித்து பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியது.
இறுதியில் வெலிக்கடை சிறையை உடைத்து குட்டி மணி தங்கத்துரையை வெளியே கொண்டு வர இருந்த திட்டத்துக்கு மாறாக தென்பகுதி காடையர்களால் அதே சிறை உடைக்கப்பட்டு குட்டி மணி தங்கத்துரை போன்றோர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர் என்பதுதான் கொடுமை.
என்னதான் தமிழரும் சிங்களவரும் அங்கங்கே உராய்வுப் பட்டுக் கொண்டிருந்தாலும் யூலை கலவரத்தை ஆரம்பித்து வைத்தவர் பிரபாகரன்தான்.
அதற்காக கலவரமே இடம் பெற்றிருக்காது என்று நான் கூறவில்லை.
வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அது நடந்திருக்கும்.
சிலவேளை வெலிக்கடை சிறையை இவர்கள் உடைத்திருந்தால் அப்போதுகூட கலவரம் வந்திருக்க வாய்ப்புண்டு.
அதற்கு பிரபாகரன் காரணமாக அமைந்திருக்க மாட்டான்.
90 காலப் பகுதிக்கு பிற்பாடு பிரபாகரன் என்றால் எப்படி சிங்களத் தரப்பிற்கு இருந்ததோ அதே மாதிரி ஒரு கெடி கலக்கம் சிங்களத் தரப்பிற்கு ஏற்படுத்தியவர்கள் குட்டி மணி தங்கத்துரை போன்றோர்.
அவ்வாறானவர்களின் சாவுக்கு பிரபாகரனும் ஒரு காரணமே.
இறுதியில் சிறி சபாரத்தினம் உட்பட பலரது சந்தேகத்தை உண்மையாக்கிவிட்டான் பிரபாகரன்.
யூலைக்கலவரம் முதல் முள்ளி வாய்க்கால் வரை தமிழர்கள் வகை தொகை இல்லாமல் கொல்லப்படுவதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைப்பது பிரபாகரன்தான்.
ஆனால் நாமோ கொல்லக் காரணமாக இருந்தவனை விட்டுவிட்டு கொன்றவனை மட்டுமே குற்றம் சாட்டப் பழகிவிட்டோம்.
கொன்றவன் எவ்வழவு குற்றவாழியோ
கொல்லக் காரணமாக அமைந்தவனும் அதே அழவு குற்றவாளியே.
வரலாறுகள் ஒரு போதும் அழிந்து போகாது.
சந்தர்ப்ப வசத்தால் உடனடியாக வெளி வராமல் இருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தியென்றாலும் உண்மை வெளி வந்தே தீரும்.
பிரபாகரனின் கறை படிந்த பக்கத்தை யாரோ ஒருவர் ஒரு மூலையில் இருந்தாவது வரலாற்றில் பதிவு செய்துகொண்டுதான் இருப்பார்கள்.
அதைத்தான் நான் திரும்ப திரும்பக் கூறுவேன்.
கொன்றது இராணுவம் கொல்லக்குடுத்தது பிரபாகரன்.
ஆனாலும் பிரபாகரன் பத்த வைத்த நெருப்பை அணைப்பதற்கு பதிலாக அதை எண்ணை ஊற்றி மிகப் பிரமாண்டமாக எரிய வைத்து பல சிங்கள காடையர்கள் மூலம் வகை தொகை இல்லாமல் எம் இனத்தை கொன்று குவித்ததற்கான பொறுப்பு இன்றைய அரசுதான்.
இந்த அரசு இன்றாவது அந்தப் பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடுவார்களா?!