2002 இல் அடிப்படைச் சம்பளமாக 1500 ஈரோக்களாக ஆக்குவேன் என அப்போது போட்டியிட்ட வேட்பாளர் சேகோலோன் ரோயால் முன்மொழிந்தார். அவரது கட்சிதான் நேற்றுவரை ஆட்சியில் இருந்தது. இன்றுவரை அவ்வெல்லையை அவர்கள் எட்டவில்லை .வேலையற்றோர் தொகை 36 இலட்சத்தை அண்மித்து எந்த தற்காலிக மாற்றீடுகளும் இல்லாது பயங்கரவாத ஒழிப்பு என்பதில் யார் தீவிரம் .வெளிநாட்டவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என விவாதத்திலேயே தம் காலத்தை கடத்தும்போது மக்ரோன் வெற்றி பெற்றதில் ஆறுதல் கொள்ளமுடியாது .ஒரு சிறிய ஆறுதலாக இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த மாகாணம் 93 இல் 50 வீதத்தினரே வாக்களித்திருப்பதும் எமது வாக்கு கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாத்திரமே என கோஷம் எழுப்பி பதாகை தூக்கி தெருவில் இறங்கியதும் ஆறுதல் .இந்த ஓர்மம் வேண்டும் இப்போது.
நான் இடதுசாரியும் இல்லை வலதுசாரியும் இல்லை என்ற ‘பெரும்’ கோஷத்தால் மக்களின் வாக்குகளைப் கவர்ந்து வெற்றியடைந்தவர் இனி பயங்கiவாதம் என்று சொல்லி முழுமையான வலதுசாரியாக செயற்படுவார். இன்னும் ஒரு தவணை வெல்லவேண்டும் என்ற ஆளும் வர்க் உணர்வால் உந்தப்பட்டு இனவாதத்தை சற்று அதிகமாக குடிவரவியாலளர்களுக்கு எதிராக கக்கி அடுத்த தேர்தலில் வெல்ல முயலுவார். எனக்கு என்னமோ தற்போது ஏற்பட்டுவரும் ஐரோப்பிய அமெரிக்க வலதுசாரி தீவிரம் இடதுசாரிகளின் எழுச்சிக்கான(ஏற்கனவே இது ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறலாம்) ஆரம்ப புள்ளியாக அமையப் போகின்றது என்றே தோன்றுகின்றது. இந்த இடதுசாரி எழுச்சிகள் நாடுகளுக்குள் அப்பால் உலக அளவில் ஒருங்கிணைக்க வேண்டும். வேணும் என்றால் இதற்கு ஐந்தாம் அகிலம் என்று பெயரை வைத்துவிட்டுப் போங்கள்
(Sugan, Saakaran)