8 மணியளவில் அகதி முகாம் இருந்த ஓட்டமாவடி மகா வித்தியாலயத்துக்கு நான் செல்கிறேன். வாழைச்சேனை கிறிஸ்த தேவாலய பாதிரியார் அங்கு வந்திருந்தார். புகாரி விதானையார் வரவில்லை என்றார்கள்.
முதல் நாள் மாவடிச்சேனையில் இந்திய இராணுவத்தால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் சம்பந்தமாக நாங்கள் கடதாசி ஆலையிலிருந்த IPKF பிரிகேடியரிடம் பேசப் போகிறோம். அங்கேயிருந்து கப்டன் ஆலம்கான் அவர்கள் புகாரி விதானையாரின் நண்பனும் கூட.. புகாரி விதானையார் வரவில்லை என்றதும்அவர் அவருடைய வீட்டுக்குப் போகிறேன். அங்கே போய் கேற்றைத் தட்டுகிறேன். அவருடைய மகள் தாஜுன்னிசா… தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார். அவர்தான் வெளியில் வந்தார். ‘அவர் இல்லை’ என்று சொன்னார்.
புகாரி விதானையார்செருமிக்கொண்டு இன்னொரு கேற்றால் வெளியே வந்தார். ஹனீபா நான் பெக்டரிக்குப் போக வரவில்லை. நாங்கள் ஏதாவது பிரச்சினை என்று புலிகளுடன் பேசப் போனால் IPKF எங்களை புலி ஆதரவாளர்கள் என்கிறார்கள். IPKF உடன் ஏதாவது பேசப் போனால் புலிகள் நம்மை IPKF க்கு காட்டிக்கொடுப்பவர்கள் என்கிறார்கள்.. ஒரு பக்கமும் தப்ப வழியில்லை.
நான் ஒரு ரெண்டு மூணு மாதம் சம்மாந்துறைக்குப் போய் எனது மூத்த மகன் அபுசாலியின் வீட்டில் இருக்கப்போகிறேன் என்கிறார்.
நேற்று சொன்னீங்களே பெனியன் வாங்கணும்; கோல்கேட் பற்பசையெல்லாம் பற்பொடியெல்லாம் வாங்கவேண்டும்… என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்ப இப்படிச் சொல்றீங்க..நாம் போவோம் பேசிவிட்டு வருவோம். பாதர் அங்கே வந்திருக்கிறார்.. முகாமுக்குப் போனேன் அங்கே நீங்களில்லை அதுதான் வந்தேன் என்றேன். அப்ப முகாமுக்குப் போவோம் என்று அவர் தன்னுடைய சைக்கிளை உருட்டுகிறார். நான் சொன்னேன் என்ட சைக்கிள்ல போவோம் என்று.
நான்தான் அவரை கடைசி முறையாக சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போகிறேன்..
புகாரி விதானையார.எப்படி இருப்பார்? ஐந்தடிஆறங்குலம் அவரின் உயரம் எப்பொழுதும் அரக்கை ஷேட் அணிந்து கொள்வார் பெரும்பாலும் வைற்அன்வைற்தான்.அவரிடத்தில் அழகான ரலி பைசைக்கிள் இருந்தது .அதன் முன் ஹென்டிலில்நீல நிறத்தில் கூடை அதன் உள்ளே தான் அவருடைய தஸ்த்தாவேஜுகள் இருக்கும்
தினமும்சவரம் செய்த முகம் தலை நன்கு வாரி படிந்திருக்கும் .விரலிடுக்கில் சிகரெட் அல்லது சுருட்டிருக்கும.அவருடைய நடை அப்படி அழகாக இருக்கும் அவரின் அச்சு அசலான தோற்றம் அவருடைய புதல்வர்களில் ஒருவரான குட்டியான் என்பவரிடம் மறுபிறவி எடுத்துள்ளது குட்டியான்நடந்து போகும்போது பின்புறம் பார்த்தால் புகாரிவிதானையார் போவது போல் இருக்கும் அவருக்கு சந்தையில் உள்ள கடைக்காரர்கள் தொடக்கம் போலீஸ் நிலையத்தில் உள்ள மேலதிகாரிகள் வரைபயந்தார்கள்.
அவருடைய ஆங்கிலத்துக்கு நிகராக யாராலும் பேச முடியவில்லை அப்படி ஒரு ஆளுமை .அவர் ஒரு தடவை என்னிடம் இவ்வாறு சொன்னார் ஹனிபா நம்மட பல நோக்கம் கூட்டுறவு சங்கத்தில் தேங்காய்கள் பறித்த கூலி எழுதப்பட்டிருக்கும் ஆனால் விற்றவரவு ஏட்டில் இருக்காது நான் விழுந்து விழுந்து சிரிப்பேன் அது ஒரு அழகிய பொற்காலம் .அந்த நாள்களில் மட்டக்களப்பில் கடமைபுரிந்த எங்கள் கவிஞன் மகாகவியின் மரியாதைக்குரிய நண்பர்களில் விதானையாரும் ஒருவர்.
பாடசாலைக்கு போனதும் அவர் அங்கும் விடாப்பிடியாக என்னால் வரமுடியாது என்கிறார். நானும் பாதரும் பெக்டரிக்குப் போய் நடந்த விசயங்களையெல்லாம் முறைப்பாடு செய்துவிட்டுத் திரும்புகிறோம்.
இடைவழியில் வாழைப்பழத்தார் ஹனிபா என்பவர் ஹோட்டல் வைத்திருக்கிறார். அவர் சொல்கிறார். உங்கட விதானய கொண்டு பெய்த்தானுகள்.. கொண்டு பெய்த்தானுகள் என்று எவ்வித கவலையுமில்லாமல் ஒரு பொறுப்பில்லாத தொனியில் சொல்கிறார்.
நான் அகதி முகாமுக்கு செல்கிறேன் சனங்களெல்லாம் இருக்கிறார்கள் நூற்றுக் கணக்கில்..
புகாரி விதானை எங்க?
புலிகள் வந்து கொண்டு பெய்த்தானுகள்…
எப்படிக் கொண்டுபோனார்கள்? கண்களைக் கட்டிக் கொண்டு போனார்களா? சும்மா ஏற்றிக்கொண்டு போனார்களா?
கண்களைக் கட்டிக்கொண்டுதான் கொண்டு போனார்கள்.
தியாவட்டவானைச்சேர்ந்த சங்கர் என்ற இளைஞனே
அவர் ஷாபி எனும் தியாவட்டவானைச்சேர்ந்த முஸ்லிம் இளைஞனே வேட்டுவைத்து ஷகீதாக்கினான். பின்னாளில் புலிகள் முஸ்லிம் இயக்கத்தவர்களை இணைச்சுத்திகரிப்பு செய்த நேரம் இவன் புலிகளால் கொல்லப்பட்டு குழியில் தலைகீழாக புதைக்கப்பட்ட நேரம் இவரின் குடும்பத்தவரின் நெருக்குதலால் அந்த சடலத்தை தியாவட்டவணை சேர்ந்த இன்னொருவர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கொடுத்தார். அவரைக்கடத்தியிருந்தான்.அந்த இடத்திலேயே நான் ‘அல்லாஹ் இனி நமக்கு அவர் வரமாட்டார்’ என்று கத்திவிட்டேன்.
நீங்கள் அவ்வளவு பேரும் இருந்துகொண்டு அவரை விட்டுட்டீங்களே!
நீங்க சோத்து மடையர்கள்… நீங்கள் அவ்வளவு பேரும் அவரை சுற்றிவளைத்து, நாங்கள் அவரை விடமாட்டோம்… எங்களை சுட்டுவிட்டுத்தான் அவரைக் கொண்டுபோகவேண்டும் என்று நீங்கள் சொல்லியிருக்க வேணடும்.
உங்களுக்காகத்தானே இந்த அகதி முகாமைத் திறந்து உங்களுக்கு சாப்பாடு தரவேண்டும் என்பதற்காகத்தானே அவர் எவ்வளவோ பாடுபடுகிறார் என்று நான் அந்த இடத்தில் வாய்விட்டு அழுதுவிட்டு வீட்டுக்குப் போய்விட்டேன். அவர் புலிகளால் கடத்தப்படும் போது அவருடைய வயது 67 ஆகும்.
பிறகு நான் யோசித்துப் பார்த்தேன். இந்தப் பிரச்சினைகள் பற்றி புலிகளுக்கு தகவல் போகும். புலிகளுக்குத் தகவல் கொடுக்கிறவர்கள் நான் இப்படிப் பேசியதை அப்படியே சொல்வார்கள் என்று… உடனே வெளிக்கிட்டு வந்து, எங்களது பள்ளிவாசல் தலைவர் காட்டு விதானையார் மர்ஹூம் அ.ஆ. முகம்மது இஸ்மாயில் அவர்களையும் கையோடு கூட்டிக்கொண்டு, நான் பொலநறுவைக்குப் புறப்பட்டேன்.
ஊரில் எஞ்சியிருந்த ஒரேயொரு தலைவர் அவர்தான். இந்த இருவர் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர்களைப் போன்ற தலைவர்களை இப்போது காண முடியாது. நமது ஊரின் இரண்டு கண்களைப் போன்றவர்கள் புகாரி விதானையாரும் காட்டு விதானையார் அவர்களும் அவர்களுடைய இழப்பு இலேசானதல்ல. கடந்த 35 வருடங்களாக கிழக்குமாகாண தமிழர்,முஸ்லிம்கள் மத்தியில் அதாவது சிவில்சமூகத்தவர் மத்தியில் தலைமைத்துவம் என்று எவருமில்லை.தடிஎடுத்தவனெல்லாம் தண்டல்காரன்.
இந்த பெருமையின் சொந்தக்காரர் புலிகளான தம்பிகளே…
இந்த நாளில் இன்று புகாரி விதானையார் எம்மைப் பிரிந்து 34 வருடங்கள் ஆகிறது.. அவரை ஒவ்வொரு இளைஞனும் நினைவில் நிறுத்துங்கள்.
அவர்ஞாபகமா நான் எழுதிய கவிதை நாளைதருகிறேன்.
(Slm Hanifa)