
(க. அகரன்)
தேசிய இனமொன்று மற்றுமொரு தேசிய இனத்தால் அடக்கப்படுகின்றபோது, அது, இன முறுகலாக வெளிப்பட்டு, பாரதூரமான விளைவுகளை அந்தத் தேசத்தில் விளைவிக்கும். அந்தவகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இனக்குழுமங்களுக்கு இடையிலான முறுகல் நிலை, யுத்தமாக மாறிய வரலாறுகள் பலவுண்டு.