புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் ஏ 35 வீதியின் அருகாமையில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவை கொண்டதும் வாகனம் போய்வரக்கூடியதும் சுமார் பத்து அடி உயர முமானஅணைக்கட்டை கொண்ட குளம் மணல் குளம் (சுவாமி குளம்)இன்று அக்குளம் தேய்ந்து குளத்துக்குரிய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று.காலகெதியில் குளம் இருந்த இடம் தெரியாத
நிலை உருவாகலாம்.அதனால் இக்குளம் பற்றி ஓர் விரிவான தகவலை முகநூல் வழியாக தெரிவிக்க விரும்புகிறேன். ஊடக
நண்பர்கள் சிதலமடைந்த இக்குளம் பற்றிய
தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டுகிறேன்.
குளம் தொட்டு வளம் பெருக்கினர் இலங்கை மன்னரகள் என வரலாறு கூறுகின்றது.யாழ்குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குளங்கள் காணப்படுகின்றன.குளப்பெயரில் பலஊர்கள் இருக்கின்றன.என்பது சான்றாக இருக்கிறது.
அண்மைய ஆண்டுகளில் புவி வெப்பமயவாதால் இலங்கையின் வடபகுதியில் மாரிமழை பொய்ததுப்
போகின்றதை அவதானிக்கலாம்.அதனால்
விவசாயிகள் பெரும் பாதிப்படைகின்றனர்
வாழ்வாதார வீட்டுப்பயிர்களும் அழிந்து விலைவாசி உச்சத்தை தொட்டு நிற்கிறது.
கோடைவரட்சி கொடும் வெய்யில் குடிப்தற்கு
கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை
போன்ற பல அசௌகரியங்கள் மத்தியில்
மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குடிநீர் தட்டுப்பாட்டால் பிரதேசசபை குடிநீர்
வழங்கியதையும் காணமுடிகின்றது
எனவே மாரிகாலத்தில் கிடைக்கின்ற மழை
நீரையாவது தேக்கி வைக்க குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி செப்பனிடுவதன்
மூலமே இதை சரிசெய்யலாம்.இதை உடனடியாக கவனத்தில் எடுத்து செய்ய
வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகள் மாகாண உறுப்பினர்கள் அரச அதிகாரிகளைச்சாரும் இதை விடுத்து
அரசியல் வாதிகள் எதைஎதையோ பேசுகிறார்கள்.மக்களை போராட தூண்டுகிறார்கள்.உண்ணாவிரதம் இருக்கச்
சொல்கிறார்கள். ஏன்?மக்களின் இயற்கை வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்போது அதை சீர்பண்ண தெரியவில்லையா?மழைக்கு முன்னர் வரட்சி நிவாரணபணி
மூலமாவது இவற்றை செய்திருக்கலாம் அல்லவா?
இதைவிடுத்து அடுத்த பிரதேசசபை
மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தலில் யார்
யாரோடு கூட்டுவைப்பது யார்யாரை நிறுத்துவதிலே தமிழ் கட்சிகள் மூழ்கியு
ள்ளன.யுத்தத்திற்குப்பின்னர் நடைபெற்ற
மாகாணசபை தேர்தலில் புதுக்குடியிருப்பை
சேர்ந்த இருவர் வெற்றிபெற்றனர் ஒருவர்
“வோணஸ்”ஆசனத்தில் ஒருவருடம் இருந்தவர்.பாராளுமன்ற பிரதிநிதியாக
புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தெரிவு
செய்யப்பட்டார்.இப்பகுதியை சேர்ந்தவர்கள்
இவர்களுக்கு வாக்களிக்கவில்லையா?
இவர்களால் செய்யப்பட்ட வேலைத்திட்ட
ங்கள் என்ன?இப்படி ஏராளமான கேள்விகள்
இருக்கின்றன. இவற்றை விட நீண்டகால
மாக பிரதேச செயலர் அலுவலகம் இருக்கிறது.முல்லைத்தீவில்மாவட்ட செயலகம் இருக்கிறது மாவட்ட விவசாய அலுவலகம் இருக்கிறது .இந்த அலுவலக
அதிகாரிகள் யாவரும் இக்குளத்திற்கு பக்கத்தால் செல்லும் ஏ 35வீதியால்தானே
செல்கிறார்கள்.இவர்களின் கண்களில் இக்குளத்தின் நிலை கண்ணில் படவில்லையா?இயற்கை வளங்கள் அழிவதை இவர்கள் எவ்வாறு உற்றுநோக்கு
கின்றனர்.கைநிறைய அரசாங்கம் சம்பளம்
தரவில்லையா.இவர்களின் கடமைகள் என்ன.இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவா?இவர்களெல்லாம் வடமாகாணத்தை சேர்நதவர்களல்லவா?
மக்கள் பிரதிநிதிகளான வடமாகாணசபை முதல்வர் உட்பட அவைத்தலைவர் மாகாணஅமைச்சர்கள்
உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எத்தனைபேர் இந்த
வழியாக பிரயாணம் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் கண்களில் கூட இக்குளதின்
நிலை தெரியவில்லையா.அல்லது தெரியாத
மாதிரி போய்விட்டார்களா?புரியவில்லையே
இக்குளத்தினால் ஏற்படும் பயன்பாடுகள்.
இக்குளத்தில் நீரைத்தேக்குவதால்
மந்துவில் கிராமமக்கள்( 8 ம் வட்டாரம்)
சிவநகர் கிராமம் (7 வட்டாரம்) ஆனந்தபுர
கிராமம் (6 ம் வட்டாரம் )போன்ற கிராமங்கள்
நேரடியாக பயன் பெறும் .கிணற்று நீர்மட்டம்
உயர்வதோடு கோடைகாலத்திலும் நீர்வளம்
இருக்கும்.வாழ்வாதார பயிர்கள் காய்கறித்
தோட்டம் நிலக்கடலை.வாழை போன்ற பயிர்கள் உச்சப்பயனைக் கொடுக்கும் வான்பயிர்களான தென்னை மா.பலா என்பன செழிப்பாய் வளர்ந்து பயன் கொடுக்கும் .சிலர் மாரிகாலத்தில் நெற்பயிர்
செய்யமுடியும் .கேடையில் வெப்பமும் தணியும்.நன்னீர் மீன்வளரவும் வாப்பு உண்டு.
கடந்த ஒரு சிலவாரங்களுக்கு முன்பு பெய்த
மழைக்கு கிடைத்த நீர் குளத்தில் இருந்து வெளியேறி பிரயோசனமின்றி செல்வதை
பொறுக்க முடியவில்லை.குளத்தில் தேங்கி நிறகவேண்டிய நீர் ஏன் வெளியேறிப் போகின்றது? மழை வீழ்ச்சி எப்போதும் கிடைக்காது.அது கிடைக்கும் போது அதை
தேக்கி வைப்பது புத்திசாலித்தனம்.அரசியல்
வாதிகள் அரசஅதிகாரிகள் கிராமிய சங்கங்கள்.ஊர் பெரியவர்கள் நலன்புரி நிறுவனங்கள் இதில் உடனே கவனம் செலுத்தி “குளம் தொட்டு வளம் பெருக்க வேண்டும்”என முகநூல் வழியாக வேண்டுகிறேன்.ஊடக நண்பர்கள் இதை
முன்னெடுத்துச்சென்று வளங்களை காக்க
முன்வரவேண்டும்.

(Kala Sellaiah)