சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து
அவர்கள் மீது கொடிய சித்திரவதைகளை மேற்கொண்டு
ஏறத்தாழ இhண்டாயிரம் தமிர்களைக் கொலை செய்த புலிகளின் பாரிய சிறைக் கூடம். 28 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம். புலிகளால் ஈரக்கமின்றி கொன்று எரிக்கப்பட்ட எமது மக்களுக்கு இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.
சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர். இங்கு சிறைவைக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய சமரன் அவர்களையே இங்கு காண்கிறீர்கள்.
துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி.இங்கே புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாம் மாவீரன் ?
சே்குவாரை கொலை செய்துவிட்டு , தனி மனித அரசியல் பேசாதீர்கள் என்றால் எப்படி இருக்கும்?
ஆயுதங்களை காதலித்த காரணமே முள்ளிவாய்க்கால் முடிவிற்கு காரணம்.
ஆயுதங்களை அப்படியே சேமித்து வைத்து, மக்களை ஆயுதங்களாக பாவித்த போர் உத்தி!!!
இலங்கை அரச ராணுவம் மற்றும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்த நியாயம் மக்களின் நியாயமே அன்றி புலிகளின் நியாயம் அல்ல.
மக்கள் தங்களின் விடுதலை இயக்கத்தை பல வடிவங்களாக மாற்ற, நீண்ட போராட்டமாக அல்லது குறுகிய கால போராட்டமாக வடிவமைக்க உரிமை உள்ளவர்கள்.
மக்களை மிரட்ட ஆயுதங்கள் பயன்பட்டனவே அன்றி விடுதலைக்காக அல்ல என்பதே இறுதியில் மக்கள் உணர்ந்தது..
இன்று ஆயுதங்கள் மௌனித்து. அரசியல் செய்ய இயலும் எனில்; முள்ளிவாய்க்காலை தவிர்த்தும் அரசியல் தொடர்ந்திருக்க இயலும்தானே?
அடுத்தவன் பிணமாக தன் கனவை திணிப்பது அரசியல் யுத்தி அல்ல!
ஈழப்போராட்டத்தில் பாசிசத்தின் அடையாளமாக நிச்சயமாக துணுக்காய் இல் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படவேண்டும்.
காணாமல் ஆக்கப்படவர்களுக்கான போராட்டத்தின் ஆரம்ப புள்ளி இங்கிருந்துதான்(துணுக்காய்) ஆரம்பிக் வேண்டும் அது முள்ளிவாய்காலில் இருந்து அல்ல அது முடிவுற்ற இடம் மட்டுமே